குபேரன்


கடிகார ஓசை காலை பத்து வரை காதில் ஒலிக்க
கையில் காபியுடன் கட்டில் தாண்டி எழுந்து
வாசனை திரவியங்கள் ஆடையை அபகரிக்க
இடுப்புக்கு கீழிறங்கிய முழு காலடையை அணிவேன்,

தொலைபேசியில் தொழில்பேசும் அப்பாவிடம்
அவசரமாய் பணம்பெற்று புறப்பட,சாப்பிட சொல்லும்
அம்மாவிடம் அடுத்தநாள் என கிளம்பி,
இரு சக்கர வாகனம் இருபுற சாலையையும் கிழித்து
சென்று புகையோடு காத்திருக்கும் நண்பர்களோடு
இணைந்து பல்பொருள் அங்காடியில் அடிபதிவோம்

கேஎஃப்சி காரம் நாக்கை விட்டு அகலும் முன்னே
எங்கள் முகநூலில் பதிவு செய்து, இரவு சந்திப்போம்
என விடைபெற்று கைபேசியை காதில் வைத்து
நேற்று சந்தித்த இன்றைய ஒருநாள் காதலியுடன்
இறுக அணைத்து இரவுவரை திரிந்து,

மீண்டும் நண்பர்களோடு கூடி திரவம் திறந்து
திரையரங்க விசில் பறக்க ,மகிழ்விருந்தில் மதுவும்
மாதுவும் நடனமாட மயங்கி கிடப்பேன் நாளும்,

வழிதோறும் வழிந்தோடி உயிர்க்கும் உணர்வுக்கும் விலைபேசும்
உலகில் யாரிவன் என்று எல்லோரும் ரசிக்க என்னவர்
பலர்போல் எனக்கும் ஆசை தான் பணக்காரனாய் வாழ…

– குசேலன்

Leave a Comment

Translate »