1860-ல் ஏப்ரல் 1 அன்று லண்டன் நகரவாசிகளுக்கு ஒரு அழைப்பு சீட்டு பிரசுரிக்கப்பட்டது.அதில் “லண்டன் கோபுரத்தில் வருடாவருடம் நடக்கும் வெள்ளை சிங்கங்களை குளிப்பாட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.மக்கள் வெள்ளை கதவு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.”

Tower of London: Admit Bearer and Friend to view annual ceremony of Washing the White Lions on Sunday, April 1, 1860. Admittance only at White Gate.

Tower-of-London

அன்று மதியமே கட்டுக்கதையை நம்பி மக்கள் அனைவரும் திரளாக சென்று வெள்ளை கதவின் வாசலில் காத்திருந்தினர்.பின்னர் அவர்கள் முட்டாளாக்கப்பட்டனர் என்பதுமின்றி பல வருடங்களாகவே அங்கே சிங்கங்கள் வசிக்கவில்லை என்றும் உணர்ந்தனர்.

முட்டாள்கள் தினம் வரலாற்றில் இதுபோன்று பல நிகழ்வுகள் மக்களை வெறுப்பேற்றி வேடிக்கை செய்துள்ளன.

என் நினைவில் இருப்பதோ பள்ளி காலத்தில் என் நண்பன் என்னை ஏமாற்றி சம்பவங்கள் தான்.ஏப்ரம் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்பதால் ‘டேய் உன் சட்டையில் யாரோ இங்க் அடிச்சுடான்டா,முதுகுல பாரு’.நானும் தேடிதேடி பார்த்து ஒருகட்டத்தில் சட்டையை கழட்டி தேடிவிட்டேன்,காது கிழிய ஏப்ரல் ஃப்ல் சத்தம் மட்டுமே கேட்டது.அப்புறம் என்ன நானும் அவனோடு சேர்ந்துக் கொண்டு அடுத்து வந்தவனை ஏமாற்றினோம்.

ஆனால் இவையெல்லாம் எங்கிருந்து தொடங்கியது? அதற்கு பல விளங்கங்கள் உள்ளது.

பொதுவான கருத்து பிரென்சு நாட்டில் தொடங்கியது என்பது.16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.1562ம் ஆண்டளவில் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை மாறி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

April Day.png

இருப்பின் எல்லா ஐரோப்பிய நாடுகளும் இந்த காலண்டரை ஏற்றுக்கொள்ள நாட்கள் ஆனது.பிரென்சில் இந்த முறை வந்ததும் ஜனவரி புத்தாண்டு கொண்டாடிய மக்கள் ஏப்ரல் மாதம் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என கிண்டலடித்தனர்.அதுவே காலப்போக்கில் முட்டாள்கள் தினமாய் மாறியதாம்.

இது சரியானதாய் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனின் பிரென்சு மற்றும் இங்கிலாத்தில் இந்த புத்தாண்டு முறை வரும் முன்பே முட்டாள்கள் தினம் இருந்துள்ளது.மேலும் இவை நேரடியாக வந்த வரலாறு அல்ல.மற்றவர்கள் சொல்லப்பட்டதுதான்.

கான்ஸ்டன்டைன் காலத்தில் சில முட்டாள்கள் மன்னர் நாடாள திறனற்றவர் என கூற அவர் கோபமடைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனை ஒருநாள் அரசனாக மாற்றினார்.அந்த நாளை அன்றைய அரசர் அபத்த நாளாக பிரகடணம் செய்தார்.பின்னாளில் அது வழக்கமாயிற்று என்பது கோட்பாடு.இந்த அறிக்கை தகவல் 1983 ல் வெளியான போது பல செய்தியாளர்களால் முன்மொழியப்பட்டது. 1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ரோமர்களின் நம்பிக்கையின்படி புளூட்டோ கடவுள் பிராஸர்பினா என்ற யுவதியை பாதாள உலகிற்கு கடத்திச் சென்றதாகவும்,அவள் அழுது தன் தாயை உதவிக்கு அழைத்தாகவும், அவள் தாயோ அவளின் அழுகை சப்தத்தைக் கேட்டு இல்லாத இடத்தில் தேடியதாகவும் இந்தத் தவறான தேடுதலே முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. source

எனினும் எந்த வழிமுறையும் இது எப்படி உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படும் அளவிற்கு பிரபலமானது என்பதை விளக்கவில்லை.ஆனால் அதற்கான பதிலை இயற்கை கொண்டுள்ளது.

holii

பொதுவாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் வசந்த/கோடை காலத்தை வரவேற்கும் விதமாக பல புராதாண நாடுகளில் விழாக்கள் கொண்டாட்டப் படுகிறது.ரோமானியர்கள் ஹிலாரியா(Hilaria) என்ற விழாவை கொண்டாடினர். Hilarity என்றால் ஆங்கிலத்தில் நகைச்சுவை.நம் நாட்டில் கோடையை வரவேற்கும் விதமாக ஒருவரை ஒருவர் ஆனந்தத்தை பகிர்ந்து ஹோலி பண்டிகையை கொண்டாடுறோம்.இது ஹிரண்யகசிபு காலத்திலிருந்தே தொடர்கிறது.

உலகின் பல நாடுகளில் முட்டாள்கள் தினம் வெவ்வேறு விதமாக கொண்டாப்படுகிறது.அயர்லாந்தில் ஒரு கடிதத்தை ஒருவரிடம் கொடுத்து இன்னொருவரிடம் கொடுக்க சொல்வர்.அவர் வெறோருவரிடம் கொடுக்க சொல்வார்.கடைசியில் கடிதத்தை திறந்து பார்ந்தால்,’இந்த முட்டாளை அலைய விடு’ என்றிருக்கும்.

இத்தாலி,பிரான்ஸ்,பெல்ஜியம் மற்றும் பிரஞ்சு பேசும் சுவிச்சர்லாந்து மற்றும் கனடா பகுதிகளில் இந்த விழா ஏப்ரல் மீன்(April fish) என அறியப்படுகிறது.அதாவது மட்டுபவர் முதுகில் அவருக்கே தெரியாமல் மீன் வடிவ காகிதத்தை ஒட்டி விடுவார்கள்.

மேலும் பல நாடுகளில் செய்திதாள்களிலும் வானொலியிலும் பல்வேறு கட்டுக்கதைகள் நம்பும்படி சொல்லப்பட்டு இந்த நாளில் மக்களை ஏமாற்றுவார்கள்.கோடையை வரவேற்கும் விதமாக உங்கள் உடன் சேர்ந்தவர்களை கேலி கிண்டல் செய்து நீங்களும் ஏமாற்றலாம்/ஏமாறலாம். ஆனால் கிண்டலுக்கும் அவமாரியாதைக்கும் வித்தியாசத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.

Think You

உலகின் சிறந்த நகைச்சுவை உண்மை நிறைந்ததாக இருக்கும்,அப்போதுதான் ஏமாற்றிவரின் புத்திசாலிதனம் வெளிப்படும். உதாரணம் : இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி(Hockey) இல்லை.

உங்கள் நகைச்சுவை முதலில் அவர்களை சிரிக்க வைக்கட்டும்.பின்னர் சிந்திக்க வைக்கட்டும்.

 

 

Leave a Comment

Translate »