கஜா புயல் யாரும் அறிந்திடாத கோர சம்பவம். 1960 க்கு பிறகு நடந்த மிகப்பெரிய பேரழிவாக டெல்டா பகுதி மக்கள் கருதுகின்றனர். இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாய் பறி போயின.

விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை, மா, சவுக்கு மரங்கள், பூ செடிகள் என எதையும் விட்டு வைக்காது அழித்து சென்றது இந்த 220 கிமீ வேககாற்று. முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாத நிலையில் பலியாகிய உயிர்களோ 63 பேர்.

இப்படி தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகளை
மட்டுமல்லாது ஆடுகள் மாடுகள் பறவைகள் என பல உயிர்களும் இரையானது. தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு கன மழையும் பெய்தது.

cyclone-gaja.jpg

மக்களுக்கே என்ன செய்வது என்று வழி தெரியாத நிலையில் விலங்குகளும் பறவைகளும் என்ன செய்ய முடியும். வேதாரண்யம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

இந்திய நாட்டின் பாயிண்ட் காலிமர் என்றழைக்கப்படும் ஊர் இது. இங்குள்ள சதுப்புநிலக் காடுகள் அல்லது வேதாரண்யம் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன, கிழக்கு தக்காணத்தின் உலர்பசுமை காடுகளில் எஞ்சியிருப்பதாகும். கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக கொண்டுள்ளது.

மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. பேராண்மை படத்தி காட்டப்பட்ட கட்சிகளும் இங்குதான் படமாக்கப்பட்டது.இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது.

vedaranyam birds.jpg

இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. 1988ஆம் ஆண்டு தலைஞாயிறு பாதுகாக்கப்பட்ட காடுகளையும் இணைத்து 377 சதுர கிமீ பரப்பிற்கு விரிவாக்கப்பட்டது.

உப்பங்கழிகள் அடர்த்தியான சிறிய மரங்களால் ஆனவை. எனவே கடல் சீற்றம் புயல் போன்றவற்றின் வலிமையை குறைக்கச் செய்யும். சொல்லப்போனால் இந்த முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகளால் திருவள்ளூர் மாவட்டம் பெரிதும் பாதிப்படையாமல் காக்கபட்டிருக்கிறது.

மேலும் குளிர்காலத்தில் வரும் பறவகைகளுக்கு தகுந்த இடமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பல பறவைகள் இங்கு வருகின்றன. புயல் அறிகுறி அறிந்து பல இனங்கள் இவ்விடம் விட்டு பறந்து சென்ற போது இவற்றில் பல கஜா புயலின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கின்றன.

இங்குள்ள உப்பங்கழிகளில் சிக்கும் கடல்வாழினங்கள் குளிர்கால பறவைகளுக்கு உணவாக அமைகின்றன. இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள்,நரிகள்,குதிரைகள்,குரங்குகள், மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.

muthupet mangrove forest.jpg

கோடிக்கரையின் முனையின் உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை இந்து தொன்மவியலில் இராமாயணத்தில் இராமர் இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும் அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.இப்படி புகழ் பெற்றிடும் இந்த ஊரில்தான் புயல் கரையை முதலாவதாக கடந்தது.

கடலின் நடுவே தீவுகளில் வசிக்கும் மீனவர்களோ பாவம்.கண் பகுதி என்றழைக்கப்படும் புயலின் மையப்பகுதி கடந்தது வேதாரண்யம் ஆயக்காரன்புலம் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை ராமேஸ்வரம் என பேருந்து வழியில் புயலாகவே பயணித்துள்ளது. பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த பகுதியை பேரிடராக அறிவிக்காததும் ஏனோ புரியவில்லை.

மீட்பு குழுவும் பத்திரிக்கையாளர்களும் செல்ல முடியாத அளவுக்கு மரங்கள் சாலைகளை முறிந்தன.வேதாரண்யத்திற்கே செல்ல முடியாத நிலையில் கோடியக்கரை என்ன ஆகி இருக்கும்.

coconut-farmers-tamil-nadu-gaja.jpg

பாதுகாக்க வேண்டிய அனைத்தும் அழிந்தது. மரங்களோடு மான்களும் கூண்டாக அழிந்து விட்டது.புயல் எச்சரிக்கை பல நாட்களுக்கு முன்பே இருந்த நிலையில் இந்த காட்டையும் அதில் இருந்த விலங்குகளையும் மக்கள் மறந்தே போயினர்.
அழகுக்கு பெயர் போன கோடியக்கரை அழிந்து போனது.

அலையாத்தி காடுகள் பெருத்த சேதத்தில் போயின. வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களும், வாழவே முடியாத நிலையில் வனவிலங்குகளை இயல்பு நிலைக்கு திரும்ப பல வருடங்கள் ஆகும். என்றாலும் முடிந்த வரை காப்பாற்றும் முயற்சியில் பல்வேறு தன்னார்வு தொண்டர்களும் இளைஞர்களும் தங்களால் முடிந்ததை அளித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் வந்த ஓக்கி புயல் அதற்கு முன்னர் வரதா, கடலூரை தாக்கிய தானே என எண்ணற்ற இயற்கை விளைவுகளை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நடக்கும் வரை காத்திருந்து விட்டு எல்லாம் வீழ்ந்த பின்னர் அரசிடம் சென்று கையேந்தி நிற்கிறோம்.

இணையத்தின் பெரும் வளர்ச்சியால பத்திரிகை செய்திகளை விட சமூக வலைதளங்கள் வழியாக மக்கள் நிகழ்கால தகவல்களை எளிதில் பெறுகின்றனர். எனினும் இதுபோன்ற இழப்புக்களை முன்னமே நம்மால் கணித்து சுதாரித்துக் கொள்ள முடியவில்லை.

புயல் அறிகுறி வந்த பின் முடிந்தவரை பாதுகாப்பான பகுதிகளுக்கு குடியேறுதல், விலங்குகளை பராமரித்தல், வீடுகளை பலமாக கட்டமைத்தால். குறைந்தப்பட்சம் புயல் சமயத்தில் ஆவது பாதுக்காப்பான கட்டிடங்களுக்குள் சென்றடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அல்லோலபடுகிறார்கள்.

தற்போது பெய்ட்டி புயல் ஒன்று உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மைய்யம் அறிவித்திருக்கிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு புயலாக மாறுமானால் டிசம்பர் 15, 16 என்ற கட்டத்தில் சென்னை கல்பாக்கம் வழியாக கடலை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு பேரழிவுகளிலும் பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆபத்துக்கு எச்சரிக்கையாய் இருப்பதே விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வு மக்களிடமும் உண்டாக வேண்டும். கஜா புயல் பகுதி மக்களுக்கு சரியான நிவராணம் வரவில்லை என்று அரசிடம் போராடும் மக்களின் குரல் நியாமானது. ஆனால் வலுகேட்ட அரசை நம்பும் முன்னே அடுத்த இயற்கை சீற்றத்திற்கு நாமே ஆயத்தமாவது தான் புத்திசாலித்தனம்.

About the author

SuryaPrasath

SuryaPrasath

Leave a Comment