மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நம்மால் அதனை முழுதுமாக தடுக்க இயலாது.ஆனால் அதன் ஆற்றலை பயனுள்ள வகையில் மாற்றினால்.,

அதற்கான ஒரு வழியை தான் அனிருத் சர்மா கண்டுபிடித்துள்ளார்.இவரின் கருவி மாசுபட்ட புகையை அச்சு இயந்திரங்களில்(Printers) பயன்படுத்தும் கருப்பு மையாக மாற்றி தரும், இதற்கு தேவை சிறிதளவு ஓட்காவும் ஆலிவ் எண்ணயும் தான்.Kaala-Printer(கருப்பு அச்சு இயந்திரம்) என பெயரிட்டுள்ள இந்த இயந்திரம் மூலம் மிக குறைவான செலவில் இங்க் உருவாக்கலாம்.

தற்போது MIT ல் பணிபுரியும் அனிருத் சர்மா பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வணிக ரிதியில் நாம் பயன்படுத்தும் மையானது வெறும் புகைக்கரி போன்றதுதான்.அதை நாம் வீட்டில் தயாரித்தால் மிக மிக குறைவான செலவே ஆகும்.

kaala

பத்திரிக்கயாளார்களுக்கு அவர் செய்து காட்டிய மாதிரி செயல்முறை

Kaala Printer ல் ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு மணி நேரத்தில் உண்டாக்கும் புகையைக் கொண்டு ஒரு கலம் நிறைய பிரிண்டர் இங்க் உருவாக்கலாம்.இன்னும் சில ஆய்வுகளுக்கு பின்னர இந்த இயந்திரத்தின் மூலம் Hp இங்க் யின் தரத்திற்கு இணையான மையை தர முடியும் என நம்பிக்கை தருகிறார்.

இந்தியாவில் இவர் பயணம் செய்யும் போது வேர்வையை தன் கைக்குட்டையால் துடைக்க முயல, அதன் நிறம் கருமையாவது கண்ட பின் தான் இந்த யோசனை இவருக்கு தோன்றியதாம்.

இறுதியாக இந்த திரவத்தை தினமும் பயன்படுத்தும் சாதாரண ‘மை’யாகவும் உபயோகிக்கலாம்.

 

 

Leave a Comment