இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார், அகம். 252 : 1-4

அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆன்மீகம் :

ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்.

யாளி என்ற மிருகமானது நவகிரகங்களின் ஒன்றான புதனின் வாகனம்.யாளியை போலவே புதனும் இரு பாலினத்தையும் சார்ந்திராதவர்.சில நேரங்களில் அவர் பெண்ணாகவும் பொதுவாக ஆணாகவும் சித்தரிக்கபடுகிறார்.

இதற்கான பிண்ணனி கதை கதாநாயகன் சந்திரனின் காதலில் தொடங்குகிறது.இரவின் நாயகனான நிலவன் தாரா என்ற பெண்ணோடு காதல் வயப்பட்டு அவளை தன்னுடன் அழைத்தும் வந்துவிட்டார்.ஆனால் தாராவோ தேவர்களின் குருவான பிரகாஸ்பதியின் மனைவி(!?).

குரு பிரகாஸ்பதி கடும் சினம் கொண்டு போர் புரிய தேவர்கள் கூடி தாராவை தன் கணவனோடு மீண்டும் இணைய சொல்கிறார்கள்.அதே சமயம் தாரா தான் கருவுற்றிருப்பதை அறிகிறாள்.(அப்பவே தாராவால பிரச்சினை -o-).

Goddess tara

காதலனும் கணவனும் அது தன் குழந்தைதான் என வாதாட தேவர்கள் தாராவிடம் உண்மையை உரைக்குமாறு வினவியும் அவள் கூற மறுத்து விடுகிறாள்.ஒரு கட்டத்தில் கருவிலிருக்கும் குழந்தையே தாயிடம் யார் காரணம் என கேட்க வேறு வழியின்றி சந்திரன் என்ற உண்மையை சொல்லி விடுகிறாள்.

முன்னரே கோபத்தில் இருந்த குரு பிரகாஸ்பதி இதை கேட்டத்தும் சினம் பொறுக்காமால் சாபம் விட துவங்கினார்.சந்திரனால் உனக்கு பிறக்கும் குழந்தை ஆணாகவும் இருக்காது, பெண்ணகாவும் இருக்காது. தேவலோகத்தில் அமைதியை நிலைநாட்ட இந்திரன் அந்த குழந்தையை உலகம் பிரகாஸ்பதியின் மகனாகே அங்கிகரிக்கும் என அறிவித்தார்.

புதன் ஆண் கடவுளாகவே உலத்தால் அறியப்படுகிறார்.அவர் மனைவி பெயர் இளா. இவளும் அவரை போன்றவரே அதாவது ஆறு மாதம் புதனின் மனைவியாகவும் ஆறு மாதம் அரசாளும் ஆணாகவும் இருப்பார்.

தமிழில் இளை என்றால் இளையர்/மக்கள் என பொருள்படும்.ரிக் வேதத்தில் சரஸ்வதி போன்ற நதிகளுடன் குறிப்பிடப்படும் இளா நதி(தற்போது இளி)

சீனாவிற்கு அருகாமை நாடான கஜகஸ்தானில் உள்ளது.ஒருவேளை பாரதம் அதுவரை பரந்திருக்குமோ.(விவரம் தமிழன் திரவிடனா)

கிழமைகளில் கூட புதன் ஆறு கிழமைகளுக்கு மத்தியிலே வரும்.சூரிய குடும்பத்தில் புதன் கிரகம் பகலில் 420 செல்சியஸ் அளவிற்கு வெப்பமாகவும் இரவில் -170 செல்சியஸ் குளிராகவும் இருக்கும்.புதன் கிரகத்தின் ஆங்கில பெயர் Mercury(பாதரசம்).தனிம அட்டவணையில் காணப்படும் ஒரே திரவம் போன்ற தனிமம் பாதரசம்.இது திரவமா அல்லது திடப்பொருளா என்று குழப்பம்   வரும் தனிப்பட்ட குணமுடையது.

இந்து புராண கடவுள்கள் எல்லோருக்கும் ஒரு வாகனம் இருக்கும். இருபாலினமான புதனின் வாகனமும் அப்படித்தானே இருக்க வேண்டும்.ஆண்மையின் கம்பீரமாக சிங்கத்தின் உடல், பெண்மையின் கர்வமாக யானையின் தலை.

பண்டைய தமிழர்கள் அறிவியலிலும், கற்பனை வளத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதை நாம் அறிவோம்.மனித இனத்தை ஒன்றுபடுத்தவும் மக்கள் அச்சமின்றி நெறிகளை பின்பற்றி வாழவும் அவர்கள் கடவுள்களையும் கோவில்களையும் உருவாக்கினர்.கடவுள் நம்பிக்கை நன்மையை காத்தன, தீயவற்றை அழித்தன.

மனிதனின் அசாத்திய சக்திகள் கடவுள்களின் வரமாகின.அப்படியான கடவுளின் இருப்பிட பாதுகாவலர்கள் எப்படி இருக்க வேண்டும்.யாளிகள் கோவில்களின் பாதுகாவலன், மனிதனை கடவுளின் வசிப்பிடத்திற்கு வழிநடத்துபவை.


அறிந்தவை :

dsc_03921யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலை%

5 Comments

 • அற்புதம் .வெகு பல நாட்களாக யாளி பற்றிய என் தேடல்கள் சந்தேகங்களுக்கு ஒரு ஆரம்பம் கிடைத்து இருக்கிறது .நல்ல ஆய்வு ,புதிய பார்வை ,சிறந்த கோணத்தில் முன்னிறுத்தும் சிறப்பு .அழகான இணையதள வடிவமைப்பு (முதல் முறையாக வாசிக்கிறேன் ) நல்ல படங்கள் தேர்வு .

  தணிகை குமார், மணி எழுதிய நாவல் அந்த பதிப்பத்தாரிடமே கிடைக்கவில்லை உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் அலை பேசி 9003925777.

  • நன்றி தோழரே ..அறிந்தால் அறிவிக்கிறேன்..
   இடம்பெறாத புதிய கருத்துகள் இருந்தால் குறிப்பிடவும்..

 • எனக்கு இரு சந்தேகங்கள் .

  1. யாழி அல்லது யாளி ?

  2. யாழி / யாளி என்பது தமிழ் விலங்கு தானே? எப்படி அது இந்திய விலங்காகும்? இது தமிழ் மன்னர்கள் ஆண்ட மண்ணில் உள்ள கோயில்கலில் மட்டுமே காணப்படுகிறது .

  • 1.யாழி எனவும் வழங்கப்படுகிறது.
   2.யாளிகள் தமிழ் மண்ணின் விலங்காக இதுவரை உள்ளது. ஆனாலும் இந்திய புராணங்கள் என்ற கருத்தில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மைசூர் மற்றும் தாய்லாந்து போன்ற சில வெளிநாடுகளிலும் வியாலா, லியோகிராப் போன்ற சிலைகளும் யாளியை ஒத்தவாறே உள்ளன.

Translate »