அறியாத பெண்

அறியாத பெண்

தாழ்ப்பாளிட்ட கதவுகளை திறந்து புதிய

பொருள்களை குடியேற்றிக் கொண்டிருந்த

எதிர் வீட்டு நிகழ்வுகளை கவனித்து கொண்டிருந்தேன்,

 
அருகிலிருந்த என் அம்மாவிடம் யாரும்மா

வரப்போறாங்க என்றேன் ஆவலுடன்,ஒரு ஊரை

சொல்லி பெற்றோரும் அவர்களுடன் ஒரு பெண்ணும் என்றார்,

 
என் கற்பனை சிறகுகள் விரிய தொடங்கின..

அவள் எப்படி இருப்பாள்,

இளையவளோ பெரியவளோ, சிவப்போ கருப்போ,

 
அவள் முகம் தேவதை போல் இருக்குமோ

அவ்வறேன்றால் அவளுக்கு சிறகு இருக்குமோ,

அவள் கண்கள் மின்னுமா என்ன.

எண்ணத்தின் ஓட்டம் நிற்க்கவில்லை,

 
அவள் எப்படி இருப்பாள்.,

பதினாறு வயதே நிரம்பிய பருவ அமலை

பொன்மேனி கொண்ட கோமகளோ,

பக்குவம் அடைந்து விழிகளாலே மயக்கி

உடைகள் நேர்த்தி கொண்ட உமையவளோ,

 
மீசை துளிர்விடும் பருவத்தில் தோன்றிய 

முதல் காதலியிடம் கொண்ட தவிப்பினை 

இவள் அறிமுகம் தோற்கடிக்குமோ,

 
இடை தெரிய சேலை கட்டி அன்றே

என் இதயம் வருடிய என்

பள்ளி ஆசிரியையின் மறவாத

அன்பினை இவள் மறக்கடிப்பாளோ,

 
அருகில் அமர்ந்து அரட்டைகள் பேசி துளி

காமமும் அல்லாது விரல்கள் கோர்த்து 

என்னை அப்பற்ற சிறு குழந்தையாக்குவாளோ,

 
பார்த்தும் பார்க்காமல் சென்று அவ்வப்போது 

அலங்காரமாய் எதிரே அமர்ந்து பருவத்தாலும் 

புருவத்தாலும் என்னை பட்டினி போடுவாளோ,

 
இதுநாள் வரை பழகிடாத உறவாகி

செல்லமாய் திட்டி சினத்தால் அக்கறையும் 

அனைத்தும் பகிந்த்து கொள்ளும் தோழியாக

என் வாழ்நாள் இறுதிவரை வருவாளோ,

 
புன்னகையில் பேசி ஊடல்களால் புரிந்து கொண்டு

வெக்கத்தோடு காதலை சொல்லி மறைவான

இரவொளியில் முதல் முத்தம் தருவாளோ…

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.