அழகி

அழகி

உதயவன் ரசிக்கும் உயிரழகு ,ஊசலாடும் மனதின் கவியழகு ,

தெறிக்கும் துளி தீண்டலழகு,தேகம் உறையும் குளிரழகு ,

மேடு பள்ள மேனி கொண்ட மலைக்கு சேலை

கட்டும் அருவியழகு ,இதுவல்லவோ பேரழகு..
 

இதழ் பிரிக்கும் பூவழகு ,இதயம் கரையும் சாரலழகு ,

ஈரம் படிந்த பாறையழகு ,ஈசன் கேட்ட வரமழகு ,

தாய் மடி தாண்டும் பிள்ளைப் போல தவழ்ந்து

வரும் நதியழகு , இதுவல்லவோ பேரழகு ..
 

மிதக்கும் மேக கருமையழகு , மிதிக்கும் மண்ணின் ஈரமழகு,

பனி தூங்கும் புல்லழகு, பாய்மரப் படகின் துடுப்பழகு ,

புகையாய் இயல் பேசி பாறையோடு நடனமாடியபடி

கொட்டும் அருவியின் இசையழகு ,இதுவல்லவோ பேரழகு..
 

கன்னம் சிந்தும் சிரிப்பழகு ,கருமையிட்ட விழியழகு,

நளினம் பேசும் இடையழகு, நனைந்த மேனியின் ஆடையழகு,

கலைந்த கருங்கூந்தல் அருவிக்கொண்டு தலை நனைந்த

அர்ச்சனை பூவாய் பதுமை நீவர எது பெண்ணே எனக்கழகு …

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.