உயிரானவளே

உயிரானவளே

வா பெண்ணே எண்ணிலா கனவுகள் உந்தன்

எண்ணமெல்லாம் நிறைய இந்த ஏழை குடிசையின்

மண்தரையில் மடிசாய்த்து கொள்ள வா

போர்த்திக்கொள்ள நானுள்ளேன் போர்முகம்

காட்டாது வாசல் தாண்டி வா,

 
அருந்ததி மிளிர மத்தளங்கள் ஒளிர நான்

மெட்டியணிந்து கட்டிக்கொண்ட உயிர்ச்சிலையே

உன் மலர்கால்கல் கட்டி தழுவ வெள்ளிக்

கொலுசு தேடினேன்,வீதியில் ஏதுமில்லை

உந்தன் வெள்ளந்தி சிரிப்பிற்கிணை,
 

பூபாரம் தாங்காது,பொன்சாரல் தங்காது

உந்தன் மென் இடையடி,எங்கேனும் கிடைக்குமோ

எத்திசையும் துருவி பார்த்தேன் கிட்டவில்லையடி

உன் இடை ஒட்ட நிறையில்ல ஒட்டியாணம்,

 
இருநூறு ஆயிரம் வருடங்கள் இழைத்து

இறைவன் செதுக்கிய பட்டு மேனியில் நீ

அணியும் கூரைச் சேலைக்கினை கேட்டுச்

சென்றேன் காமாட்சியே கைவிரித்து விட்டாளடி.,

 
பௌர்ணமி நிலவை பாதி பிரித்து மலர்

கோர்த்து,வர்ணம் சேர்த்த நெற்றி முகமடி

உனக்கு,நெற்றிச்சுட்டி எங்கிருக்கு நிறமறிய

யாறிங்கே நீங்களாவது சொல்லுங்களேன்.,

 
மாறனம்பை தெறித்து பழரசங்கள் குழைத்த

தேன் சுவை கழுத்தடி,அதில் தங்கி வசிக்க

தங்க ஆபரணங்கள் ஏங்கி தவிக்குதடி,என்

தாயணிந்த மஞ்சள் தாளி தள்ளி வைக்குதடி.,

 
சிதறும் முத்துக்கள் திரண்ட பவளக்கிடங்கே,

உன் பகலவ புன்னகையில் மறையா முக்கூத்திக்கு

ரத்தின கற்கள் கிட்டவில்லையடி எந்தன்

வைர வீதியிலும், விண்மீன் பால் வீதியிலும்.,
 

தலையசைத்து நீ பேச மலைகளெல்லாம்

மனங்சொக்கி செவி சாய்க்கும், கடல் அலைகள்

கைத்தட்டி அதை ரசிக்கும், அத்தனி

அசைவிற்கினை காதணி அகிலமும் அறியாததடி.,

 
உருகி வழியும் பனியை ஒவ்வொன்றாய் குவித்து

உதயவன் உருவளித்த பளிங்குச் சிற்பமே

உன்னுடைய மெழுகுவர்த்தி விரலில் நழுவிச்

செல்லா மோதிரம் நானினும் காணவில்லையடி.,

 
அன்னக்கொடி தோட்டம் முதல் ஆல்பஸ் மலை

வரை தொடராராய்ச்சி செய்தும் காணாத பூவாசம்

கண்ட உன் கருங்கூந்தல் அருவியில் கடன்

கொஞ்சம் வாங்கி கண் மை தீட்டுவேன்.,

 
என் உதட்டில் ஈரமிருக்க உன் உதட்டில்

சாயம் ஏனடி, இணைத்து வைத்தேன் இதழ்களை,

கரைசேர் காலம் வரை கைவிடமாட்டேனடி பிடித்த

கரங்களை,கழற்றி வைத்தேன் கை வளையல்களை.,

 
ஸ்டிக்கர் பொட்டு நீ வைக்காதே, காற்றடைத்த

என் உடம்பில் கடைசி உயிர் கணக்கும் வரை

உலகையும் உனக்காய் உடைத்து உழைத்து

உதிரம் வைப்பேனடி எந்தன் உயிரானவளே…

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.