நீயும் பெண்தானே

Seyon
அகவைகள் ஆயிரம் கடந்த தெய்வதலமே

பார் ,சரித்திர சௌந்தர்யமாகவும் சத்திரிய

பெருமையாகவும் புகழ் உரைக்கும் உன்னை

பாவை உவமை சேர்த்து செதுக்குகிறேன் ,

 
காலத்தால் கரையாத ஓவியத் தாரகையே

சுற்றூரிலிருந்தும் வந்து சுற்றி சுற்றி உன்

சிலையழகை ரசிப்போர் உண்டு ,

 

கவிதைகள் கொண்டு செதுக்கிய உந்தன்

கோபுர அழகை தலை நிமிர்ந்து பார்த்து

தலைச் சுற்றி வீழ்ந்தோர் உண்டு ,

 

தாயான உன்னிடம் தரையில் வீழ்ந்து

தலைக்கணம் துறந்து தலை தாழ்த்தி

ஆசி வரம் பெற வைக்கிறாய் ,

 

விழியில் ஈரமும் மனதில் பாரமும் கொண்டு

உன் மடி சாயும் போதெல்லாம் அக இருள்

விளக்கி அகல் விளக்காய் ஒளி தருகிறாய் ,

 

தாய் பாறையாகவும் தந்தை சிற்பியாகவும்

உறவினர்கள் கூடி உன்னை மெருகேற்ற

உறைவாள் கொண்ட அரசன் தன் பெயரை

உன் பெயரோடு சேர்த்து கொள்கிறான் ,

 

கனமழையும் கடும்குளிரும் கயவர் கண்ணாய்

உன்னை கரை சேரும் போதும் கருவறையான

கற்பை காவல் செய்யும் கற்கண்ணகியே ,

 
தூணிலுமுண்டு துரும்பிலுமுண்டு என போற்றும்

அறிஞரும் , துச்சம் என பேசும் அற்பர்களும்

அறிவர் சகலமும் சக்தியுமான உன்னிலும்

ஒவ்வொரு பெண்ணிலும் தெய்வம் உண்டென்று …

பக்தன்