டெல்டா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதா? பயங்கர சத்தம் எதனால்?

டெல்டா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதா? பயங்கர சத்தம் எதனால்?

தெற்கு டெல்டா மாவட்டங்களில் இன்று காலை சுமார் 9: 55 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்கப்பட்டது இந்த சத்தம் அனைவராலும் உணரப்பட்டது வீடுகளும் அதிர்ந்தன.

இதுபற்றி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு வானிலை அறிக்கை வழங்கி வரும் திரு. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு .

இன்று காலை நேரத்தில் தெற்கு டெல்டாவின் முத்துப்பேட்டை உதயமார்த்தாண்டபுரம், தில்லைவிளாகம், எடையூர், பாண்டி, திருத்துறைப்பூண்டி, திருப்பூண்டி, தலைஞாயிறு, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி சுற்றுவட்டாரங்களில் குண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தம் போனறு வானில் கேட்டது. தெற்கு டெல்டாவின் பல பகுதிகளிலும் லேசான சத்தம் உணரப்பட்டது. இச்சத்தம் குறித்து அச்சப்பட வேண்டாம்.

வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஒலியின் வேகத்தை விட வேகமாக பயணிக்கும் விமானமோ, பொருள் காரணமாக ஏற்படும் அலை தூண்டும் அதித சத்தம் தான் இன்று உணரப்பட்டது. இச்சத்தை சோனிக் பாம் என்போம். இச்சத்தம் பெரிய பேரிடர், இடி போன்று இருக்கும். எங்கும் பூமியில் பாதிப்பை ஏற்படுத்தாது.

Sonic boom Reason behind Southdelta:

A sonic boom is the sound associated with the shock waves created whenever an object travels through the air faster than the speed of sound. Sonic booms generate enormous amounts of sound energy, sounding similar to an explosion or a thunderclap to the human ear. (Info From Delta Weatherman Page)

Add comment