நாளை

Seyon
பொழுதெல்லாம் நன்றாக தான் விடிந்தது
நேற்று மீதம் வைத்திருந்த ஷாம்புவை நன்கு
தேய்த்து தலைக்கு குளித்துவிட்டு கோடிட்ட
என் சட்டையை மாட்டியும் கொண்டேன் ,

அடடா அந்த சான்றிதழ் நிரம்பிய கோப்பினை
எங்கு வைத்தேன் ,ஒருவாறு கண்டுபிடித்து கிளம்ம்பி
கண்ணாடியை பார்த்து சிரித்தேன்,புரிந்திருக்குமே
ஆமாங்க வேலை தேட தான் கிளம்புறன்
என் பிம்பத்தை போல நீங்களும் சிரிக்காதிங்க
அங்க மட்டும் என்ன வாழுதாம்

டீயை குடித்து அலுவலக வரவேற்பறையில் சென்று
அமர்ந்தேன் ,மீன் தொட்டியில் இருக்கும் ஒரு மீனை
மற்றொன்று பார்ப்பது போல ஒருவரையொருவர்
மீண்டும் பார்த்துக் கொண்டோம் ,

ஒரு பெண் நேர்முக தேர்வை முடித்து விட்டு
வெளியே வந்தாள் ,என்னங்க ஹெச் ஆர் எப்படி
என்றேன் ,செம க்யூட் என்றாள்,ஏதோ ஒரு
வார்த்தையை விழுங்கி கொண்டேன் ,

இது என் முறையாக உள்ளே சென்றேன் ,
இந்த ஆறு மாசம் என்ன செஞ்சிங்க என்றார்
உண்மையை சொன்னேன்,விரைவில் உங்களை
தொடர்பு கொள்கிறோம் என்றார்,புரிந்து கொண்டேன்

வெளியே எனக்காக காத்திருப்பது போல ஒருத்தன்
நின்றிருந்தான், பாஸ் நாளைக்கு ஒரு கம்பெனி
இருக்கு நீங்களும் கூட வரீங்களா என்றான்
நம்பர் கொடுத்துவிட்டு பார்க்ல போய் படுத்தன் ,

ஒரு காதல் ஜோடி ,சரிரி ஒருவேளை காதலா
இருக்கலாம் ,என்னை கடந்து போனங்க,கொஞ்சம்
சின்ன புதர் தான் ,ஓகே அட்சஜ் பண்ணிக்கிட்டங்க
என்னோட சாக்ஸ கழட்டி அங்க போடலாம்னு தான்
தோணுச்சு ,வேணாம் ஒன்னு தான் இருக்கு ,

zkyab_216893

லேசா இருட்டுற நேரம் வேல இருக்குற ஒருத்தன்
வந்து தம்பி இது என்னோட இடம் கிளம்ப்புபான்னான்
லைட்டா ரோஷம் வந்துச்சு,பரவால்லன்னு வாங்குன
சுண்டல் தீர்ந்து நண்பன் அறைக்கே வந்துட்டேன் ,

தீடிரெனு செல்போன் அலறுச்சு, வேலையில்லா
பட்டதாரி ரிங்டோன் வேற, கம்பேனி கால் இல்லிங்க
அம்மா பேசுறாங்க ,என்னப்பா சாப்டியான்னு
கேக்குறாங்க..