1

கல்லூரி தொடங்கி சில நாட்கள் ஆகியிருக்கும்.அறிமுகங்களும் அரட்டைகளும் ஆங்காங்கே நட்பாய் கருவுறத் தொடங்கின நேரம்,வழக்கம் மாறாமல் ஒரு மாலை இடைவேளை முடிந்து வகுப்பறையை நெருங்கிய சமயம் இரவினிடையே தோன்றும் வெளிச்சம் ஒன்று என் கண்களை பரிக்க தலை சாய்ந்து யாரவள் என்று பார்த்தேன்.   

1

பசுந்தழைகளுக் கிடையே இதழ் பிரிக்காத மலர் ஒன்று இருக்கையில் அமர்ந்திருக்க ஏதும் பேசமால் மெளனமாய் பாதை தொடர்ந்தேன்.அன்றைய தினம் முழுதும் அவள் நினைவே நித்திரை வரை நீண்டது. எப்படியாவது அவள் மெளனம் பேசும் வார்த்தைகள நான் கேட்க வேண்டும் என் எண்ணி நண்பர்களிடம் விசாரித்தேன்.

அவளைத் தவிர அவளை பற்றிய செய்திகள் அனைத்தும் வானில் பறக்கும் காற்றாடியாகவே தோன்றியது எனக்கு, எனினும் அவள் விழி சிந்தும் பார்வை சாரலில் நான் நனைய வேண்டும் என முடிவு செய்தேன் ,

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.