3

நகரும் நொடிகள் ஒவ்வொன்றும் என் நாடி துடிப்பை அதிகரிக்க கல்லூரி கால வேளை நிறைவு பெறக் காத்திருந்தேன். அலங்கரித்த பூமாலையுடன் பல்லக்கில் ஆடி வரும் கன்னி சிலையாய் அவள் நடந்து வர அவளை பின்தொடர்ந்து நடந்தேன். அவள் நடந்த காலடி தடங்களில் எல்லாம் நான் தொலைத்து சென்ற என் மனதை தேடிக் கொண்டே சென்றேன்,

சில அடிகள் முன்பே அவளிருந்தும் அழைக்க தயங்கி தவித்தேன்.உடன் வந்த நண்பன் அவள் பெயர் சொல்லி அழைக்க ,எனக்காகவே காத்திருந்தாற் போல சட்டென திரும்பி அவளது மழலை குரலில் என் பெயரை சொல்லி நீதானா என கேட்டாள்,எனக்கே என் பெயர் பிடித்தது அன்று தான்.

Jpeg

மொழிகளறிந்த ஊமை போல் நின்றேன்,பின்னர் அவளை நலம் விசரித்து பேச துவங்கினேன்,சில நிமிட வழக்க உரையாடல் தான்,ஆனாலும் உயிர் உறைந்த கணமாய் உள்ளத்தில் பதிந்த நிமிடங்கள் அவை.மறுநாள் எப்போதும் போல் வகுப்பு வாசலில் நின்றிருந்தேன்,

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.