4

சற்றே தொலைவில் என் முகம் கண்டவுடன் இதழ் பிரிக்காமல் பெண்மை சிந்தும் புன்னகை கொள்ளையழகு ,அதனை ரசிக்கவே காலை வேளையில் அவள் வருகின்ற கல்லூரி பேருந்திற்காக காத்திருப்பேன். அவள் மேனிக்கேற்ற வண்ண ஆடை அணிந்து, சின்ன கண்களால் என் உயிரை பரித்து எடுத்து அழகான முகத்தில் நெற்றிப் பொட்டிருப்பாள்.

மெளனங்கள் மட்டுமே பேசி பனிப்போன்ற ஆடையால் தீண்டிச் செல்வாள்.நேரில் பேசியது சில முறை தான், ஆயினும் தொலை பேசி செய்திகள் எங்கள் தொலைவைக் குறைத்தது.பிடித்த விஷயங்கள் முதல் நேற்று முடிந்த தினம் வரை படிப்பை தவிர பலவற்றையும் பகிர்ந்து கொண்டோம்.

அன்று முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அமர்ந்திருந்தோம்.மணம் வீசும் கூந்தலில் மல்லிகை மலர்ந்திருக்க மங்கை அவள் மறுதிசையில் அமர்ந்திருந்தாள்,அவளை மட்டுமே கவனித்தபடி நான் இருக்க திரும்பி பார்த்தாள் என்னை,

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.