5

அதிகம் அனுபவம் இல்லையெனினும் கை அசைவுகளாலே அவளிடம் உரையாடினேன். இடைவேளை நேரம் படியிறங்கி நான் செல்ல படியேறி கீழிருந்து வந்த அவள் எதிரே தயங்கி நெருங்கி நின்றாள்,அன்று பெண்ணிலவு வெண்ணிலவின் நிறத்திலேயே ஆடை அணிந்திருந்தாள், அதற்காக இனிப்பும் கேட்டாள். அன்றே கொடுத்திருக்க வேண்டும்.

அன்று முதல் பலமுறை நாங்கள் சம நிற ஆடையை எதிர்பாராமலே அணிந்து வந்ததை நினைத்து வியந்ததுண்டு. நேரில் அவளிடம் என்றாவது நீண்ட நேரம் பேச வேண்டும் என நினைப்பதுண்டு,
எனினும் ஒவ்வொரு மாலையும் தொடங்கும் குறுஞ்செய்தி உரையாடல்கள் தொடர்ந்து நீள தூங்கா இரவுகளை துவக்கிக் கொண்டேன்.

என் வாழ்வில் மழைக்காலங்கள் என்றுமே தனியிடம் பெற்றது,மழைக் கால மேகங்கள் என் வாழ்விலும் பொழிந்த நாளில் என் செய்து கொண்டிருக்கிறாய் அன்பே என கேட்டேன்,

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.