6

மேகம் வரமளித்த மழைத்துளிகளோடு கூடி ஊடல் கொண்டாடுகிறேன் என்றாள், அப்படியா என்று என்னுடன் என்றேன், எப்போதும் போல ம்ம்.. எனச் சொன்னாள். கவிதை கொண்டு வரும் மழையின் சாரல் அவளைத் தீண்ட இங்கு என் மனம் கரைந்து கொண்டிருந்தது.

6

கல்லூரி படிகளுக்கு இடையே எங்கள் கண்கள் பலமுறை எதிரொளி பதிந்து சென்றன.அன்று வானும் முகிலும் கலந்தாற் போல ஆடை அணிந்து வந்திருந்தாள், தரையிறங்கி தேவதை வலம் வர இனிப்பை காணும் சக்கரை நோயாளியாய் அவளை பார்த்திருந்தேன்.என்ன என புருவம் உயர்த்தி அழகு திமிர் அவள் செய்ய கொஞ்சம் செத்தே பிழைத்தேன்.

அவளிடம் நேரம் மறந்து பேச தவித்திருந்தவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அடுத்த மறுநாள் தீபாவளி, அனைவரும் இன்றே பிறப்பிடம் புறப்பட்டனர். அதனால் அவள் தோழி மட்டுமே உடன் நடை பகிர்ந்தாள், பெயர் சொல்லி அழைத்தேன் நான்,

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.