7

பேசாத புன்னகையும் பேச வைக்கும் பார்வையும் என்னை வரவேற்க அவளருகே சென்றேன், அனுபவ தோழி நல்லவள், என்னைக் கண்டவுடன் என்னவளை விட்டு தனியே முன் அவள்.

யாருமில்லா சாலையில் தென்னையும் தென்றலும் கவிதை பேசும் வேளையில் இளையவள் பாதை பகிர்ந்து கொண்டாள். வழக்கமாய் பேசும் வார்த்தைகள் உதிர்ந்து போக அவள் பேச துவங்கினாள், என்ன வகுப்பினை அதிகம் கவனிக்கிறாயோ, ஆம் உன் வகுப்பினை கொஞ்சம் அதிகமாய் கவனிக்கிறேன் என்றேன்.

7

தென்றல் திசை மாறி வீச கூந்தலை சரி செய்தபடியே எனை பார்த்து வருகிறேன் என்றாள், தலை அசைத்தேன். என் தோழர்களும் அவள் தோழிகளும் எங்களை கிண்டல் செய்ய உன்னால்தான் என சின்ன கோபம் அவளுக்கு. ஒரு மாலை நேரம், தொலைபேசியில் அவளை அழைத்தேன்,

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.