ரோபோக்கள் உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக மாறிவருகின்ற யுகம் நம் கண்ணேதிரே நடந்துக் கொண்டிருக்கிறது.

இது டெர்மினேட்டர் படத்தில் வருவது போலவோ, எந்திரன் சிட்டி போன்றோ அழிக்கும் ஆற்றலாக இல்லாமல் ஒரு ஆக்க புரட்சி போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

robotic-process-automation

தற்போதைய கணக்கெடுப்பின் படி உலக தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாக தொழிற்நுட்ப திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை(Robots) பயன்படுத்த தொடங்கிவிட்டன என தெரிவிக்கிறது.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் ஆபத்தான மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கென தனித்தன்மை வாய்ந்த எந்திரங்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.

எஃகு, கார் போன்ற பல்வேறு உற்பத்தி ஆலைகளை எந்திரங்களை வைத்தே முழுவதுமாக கையாளுக்கின்றனர். இதனால் பணி இழக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

robotic-automation

இந்த விஞ்ஞானம் பத்திரிக்கை துறையையும் தற்போது ஆக்கிரமித்து வருகிறது என்பது அதிர வைக்கும் புதினமே.

சமீப காலமாக அமெரிக்காவின் முண்ணனி பத்திரிக்கை நிறுவனங்கள் தகவல் திரட்டில் கொண்டுள்ள தரவுகளை கொண்டு செய்தியை உருவாக்கி பதிவிடும் ரோபோ வழிமுறை ஒன்றை கையாளுக்கின்றனர்.

பிரபல யாஹு போன்ற நிர்வகிப்பும் இதே முறையை பயன்படுத்தி விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் நொடிப் பொழுதில் வெளியிடுகின்றன.

ஆனால் இது சாத்தியமான ஒன்றா என எண்ணக்கூடும், இருப்பினும் இது சாட்சியாக நடந்தேறிக்கொண்டிருக்கிறது என்பதே அப்பட்டம்.

தானியங்கிகள் பொதுவாக அதன் இயங்ககத்தில் நிரல் மொழி மூலம் இடும் கட்டளைகளை பின்பற்றும் மாறே வடிவமைக்கப்படும். செயற்கை அறிவு கொண்ட இவற்றால் மனித நிரல் கட்டளைகளுக்கு ஏற்றவாறே செயல்பட முடியும்.

robot-writing-Mirko-Tobias-Schaefer-bios-bible-flickr.jpg

அதே முறையை பயன்படுத்தி தகவல் களஞ்சியத்தில் உள்ள தரவுகளை தொகுத்து அதை ஒரு செய்தி வாசகம் போன்றே வடிவமைத்து முழுமையாக ஒரு செய்தி கட்டுரையாக வெளியிடுமாறு கட்டளைகள் செலுத்தப்படுகின்றன.

இவ்வகையிலான ரோபோக்களால் ஒரு நாளைக்கு(24 hours) 3000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட முடியும், இது மனிதனால் சாத்தியமற்ற ஒன்று.

அதே நேரத்தில் தொழில் முறையில் நேர விரக்தி குறைவதோடு மிகவும் லாபகரமானது. இதனால் இதனை வேலையாக கொண்ட பலரின் நிலை பரிதாபம் தான்.

The Verge, Guardian போன்ற பல பிரபல இணையதளங்களை தொடர்ந்து பல தளங்களில் எந்திரர்கள் மூலமாக உருவாக்கப்படும் செய்திக் கட்டுரையை வெளியிடுவது ஒரு நாகரீகமாக மாறி வருகிறது.

அப்படியானல் நீங்கள் சிந்திப்பது போல ஒரு ரோபோவால் ஒரு மிகச் சிறந்த எழுத்து படைப்புகளை உருவாக்க முடியுமா?

la-jc-robot-wre0037212709-20160315

தற்போது உள்ள தொழிற்நுட்பத்தில் ஒரு எந்திரனால் நிச்சயம் ஒரு மனிதனுக்கு ஒப்பாக இயற்ற முடியாது.

மனிதன் ஒரு எழுத்து படைக்கும் போது அதில் தனக்கான பாணியை, ஆளுமையை, நகைச்சுவையை திரிக்க முடியும். அது வாசகனுக்கும் படைப்பாளிக்கும் ஒரு நிர்பந்த ஒத்தவசைவை ஏற்படுத்த வல்லது.

சுஜாதா, ஜெயமோகன், அசோகமித்திரன் என ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்பான எழுத்து நடை உண்டு, அவர்களுக்கென ஒரு வாசிப்பு வட்டமே நிலைத்திருக்கிறது.

நாம் படைப்பாற்றாலை உருவாக்கும் போது அதில் அர்பணிப்பும் கற்பனையும் அங்காங்கே மனதை வருடி செல்லும் சொற்விதமும் நிறைந்திருக்கும். ஒரு தகவலை ஆராய்ந்து மெய்யுணர்ந்து பதிவிடுவதே நம்முறை.

ஆனால் எந்திரன் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை அதற்கு அளிக்கப்பட்ட தகவல் தொகுப்பை கொண்டே உருவாக்க இயலும்.

சமீபத்திய ஓர் ஆய்வில் ஒரு எழுத்தாளர் தனது எல்லா படைப்புகளையும் ரோபோவை வாசிக்க வைத்துவிட்டு, அதன் பொருட்டு அறிந்த தகவலை கொண்டு ஒரு படைப்ப உருவாக்க அதற்கு பணித்தார்.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அந்த பிழையாக படைப்பை ஒரு துவக்கமாக அவர் கருதுகிறார். ஏனெனில் அவ்வாறு நிகழக்கூடிய எதிர்காலம் தொலைவில் இல்லை.

நமது மூளையின் தகவமைப்பினை போன்று கட்டளைகளை உருவகித்து சிந்திக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சி ஒரளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

robot-reading-book

அதாவது தனது நுண்ணறிவின் மூலம் அறிந்ததைக் கொண்டு அதற்கேற்ப அடுத்த முறை அதனை தெளிவுபட நிறைவேற்றுவது. சிட்டி ரோபோ போல அவற்றால் தங்கள் அனுபவத்தால் கவிதை கூட எழுத முடியலாம்.

உலகின் பெருமான்மையானவர்கள் தினசரி செய்தி படிப்பதை வழக்கமாக்கி விட்டனர். அதிலும் சமூக வலைதளங்கள் வழியாகத்தான் அதிகப்படியான விடயங்கள் பகிரப்படுகின்றன.

செய்திகளை உருவாக்கும் இவ்வகையிலான ரோபோக்கள் பத்திரிக்கை உலகில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கும் என்பது நிதர்சனம், ஒரு ரோபோ விரைவில் நாவல் கூட எழுதலாம் என்பது அசரிரீ.

நாவல் எழுத முடியுமா என்கிற வியப்பிற்கு எதை நாம் நாவலாக கருதுகிறோம் என்ற கேள்வியே பதிலாக இருக்கும். எழுத்தாளர்களின் நாவல்கள் போல் அல்லாது ரோபோவின் நாவல்களுக்கு நிச்சயம் ஒரு கட்டமைப்பு விதிமுறைகள் இருக்கக் கூடும்.

மற்றொருமொரு சாத்தியம் என்னவென்றால் ரோபோக்கள் உருவாக்கும் படைப்புகளுக்கு மனிதர்கள் துணை ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கலாம். ஒரு மனித எந்திர நாவல், படைப்புலக வரலாற்றை மாற்றி அமைக்கலாம்.

தி ரோபோட் படத்தில் வில் ஸ்மித் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவிடம் உன்னால் மனிதர்களை போல ஒரு அழகான இசை கோப்புகளை உருவாக்க முடியுமா, ஒரு சிறந்த நுட்பமான காவியத்தை தர முடியுமா என கேட்பார்.

Can you write asymphony.jpg

அதற்கு அந்த AI(artificial intelligence) உன்னால் முடியுமா என திருப்பி கேட்கும், உன்னால் முடியுமானல் என்னாலும் முடியும் என்பது போல.

இன்னும் 10 வருடங்களில் ஒரு ரோபோ நாவல் வெளிவரவில்லை எனில் அது நிச்சயம் ஆச்சர்யமே தவிர, ஒரு நாள் சிறந்த இலக்கிய படைப்பிற்காக ஒரு எந்திரன் நோபல் பரிசு வாங்கினாலும் அது ஆச்சர்யபடுவதற்கில்லை.

Leave a Comment