Image default
Politics

அஇஅதிமுக தேர்தல் வியூகம் 2021 – பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறும் டெல்டா

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ள நிலையில், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிதாக அம்சங்களை சேர்க்கவும் அரசுக்கு பரிந்துரைக்க தொழில்நுட்ப குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அரசுக்கு பரிந்துரை மேற்கொள்ள அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவிற்கு வேளாண் துறை செயலாளர் தலைமை வகிப்பார். வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குநர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தொழில்துறை இயக்குனர், கால்நடைகள் துறை இயக்குனர், வேளான் பல்கலைக்கழக இயக்குனர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இக்குழு ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சட்டத்தில் திருத்தங்கள் அரசு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டெல்டா பகுதிகள் வேளாண் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும் பட்சத்தில், இப்பகுதிகளை வேளாண்மைக்கு நேரடியாக பாதிப்பைத் தரும் எந்த தொழிற்சாலைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. பேரிழிவு ஏற்படுத்தும் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை காவிரி படுகையில் செயல்படுத்த முடியாது.

குறிப்பாக அதிக மாசுபடுத்தும் சிகப்பு பிரிவில் உள்ள மாசுபாடு தர அளவு 60க்கும் மேல் இருக்கும் ஆலைகள் அமைக்க முடியாது. விவசாயமும் அதனை சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்க முடியும். விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற முடியாது. மணல் கொள்ளை பெருமளவு தடுக்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் எடுக்க பொதுமக்கள் கருத்து கேட்க வேண்டாம், சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு சலுகை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசின் இந்த துணிச்சலான முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் 1984-ம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வருகிறது. 1984-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது 187 கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. திருவாரூரில் 78, நாகையில் 57, தஞ்சையில் 12, கடலூரில் 4, அரியலூரில் ஒன்று, ராமநாதபுரத்தில் 35 என மொத்தமாக 187 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன.

2019-ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கோரி ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் வேதாந்தா 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி 215 கிணறுகளும் அமைக்க விண்ணப்பித்துள்ளன.

கடைசியாக கடந்த மாதம் 14-ம் தேதி ஐந்தாம் சுற்று ஏல அறிவிப்பு வெளியானது. அதில், இந்தியா முழுவதும் 19 ஆயிரத்து 789 கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கிணறுகள் அமைக்க ஏலம் விடப்படுகிறது. அதில், காவிரிப்படுகையில் மட்டும் கடலூரை ஒட்டியுள்ள ஆழமான கடற்பகுதியில் 4 ஆயிரத்து 64 கிலோ மீட்டர் பரப்பளவு ஏலத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த ஏலத்திற்கான காலம் அடுத்த மாதம் 18ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகம், புதுச்சேரியில் மட்டும் ஹைட்ரோ கார்பன் இருப்பதாக 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் தேவையில் 80 விழுக்காடும், எரிவாயு தேவையில் 20 விழுக்காடும் இறக்குமதி செய்யப்பட்டே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனை 2022ம் ஆண்டிற்குள் 10 விழுக்காடாக குறைப்பதற்காக காவிரிப்படுகையில் தொடர்ச்சியாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து அஇஅதிமுக அரசின் இந்த செயல் விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை அளிக்கிறது

Related posts

புரியவில்லையா. மீண்டும் பாருங்கள்.

Seyon

சுதந்திர இந்தியாவில் நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா?

லெபனானில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு – நடந்தது என்ன?

Paradox

Leave a Comment