எல்லாப் பொருத்தமும் இருக்கிறது, ஜாதகம் கூட எல்லாம் ஒத்து வருகிற மாதிரி இருந்தாலும், ஆணுக்கும் பொண்ணுக்கும் ஒரே வயது என்று சொல்லி அந்த சம்மந்தத்தை நிராகரித்த கதைகள் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். பெண் கிடைப்பதே அரிதான இந்த காலத்தில் நல்ல சம்பந்தமாக இருப்பினும் வயதை காரணம் காட்டி அதனை தட்டி கழிக்க காரணம் என்ன?

மனித பரிணாமத்தின் படி 25 வயதில் தான் ஒரு ஆண் முழுமையான வளர்ச்சி அடைகிறான். அதுவே பெண்கள் 20 வயதிலேயே முழு வளர்ச்சி அடைந்து விடுகிறாள். 25 வயது ஆணுக்கு இருக்கும் அதே மனப்பக்குவம், 20 வயது பெண்ணுக்கு இருக்கும்.

25 வயது ஆணுக்கு இருக்கும் அதே மனப்பக்குவம், 20 வயது பெண்ணுக்கு இருக்கும்.

ஒரே வயதில் கல்யாணம் செய்து வைக்கும் போது, ஆணை விட பெண் மனதளவில் முதிர்ச்சி அடைந்தவளாக இருப்பாள். குடும்பத்தின் ஒவ்வொரு முடிவுகளிலும் தன்னுடைய பங்கு எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பாள்.

இருவரும் மனம் ஒத்து எல்லாவற்றையும் புரிந்து கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் பல இடங்களில் ஆண்களால் பெண்ணின் பக்குவத்தை உணர முடியாமல் சில இடங்களில் மனமுறிவு ஏற்பதுவட்டு சாத்தியாமாகிறது.

alai paayuthe

அதேபோல் மெனோபாஸ்(அதாவது மாதவிடாய் நிற்பது) பெண்ணுக்கு 45லிருந்து 50க்குள் நடக்கிறது. அதுவே ஆணுக்கு ஆண்ட்ரோபாஸ்(உடலுறவு உணர்ச்சிகள்) 50க்கு மேல் 55 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்படும்.

தெளிவாக சொல்லப்போனால் பெண்ணுக்கு 45 வயதில் காமம் மீதான ஆர்வம் குறையத் தொடங்கும். அதுவே ஆணுக்கு 55 வயதுக்கு மேல் தான் குறையத்தொடங்கும். இந்த பருவ நிலைகளுக்குக் காகத்தான் ஆணுக்கும், பெண்ணுக்குமான வயது இடைவெளி பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

komban

முன்பெல்லாம் நம்முடைய பெற்றோர்கள் காலத்தில் கணவன் மனைவி இடையே 10 முதல் 15 வயது வரை, ஏன் சில இடங்களில் 20 வயது கூட வித்தியாசத்தில் திருமணம் நடக்கும். ஆனால் இந்த காலத்திற்கு அது வேண்டியதல்ல. குறைந்தது 3 முதல் 4 வருட வித்தியாசம் வைத்து பார்க்கலாம்.

அதுவும் கட்டாயமில்லை. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் காதல் சோடிகள் பலரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சில காலம் பழகிய பின்னரே திருமண பந்தத்துக்குள் நுழைகிறார்கள். அதுவே ஆரோக்கியமானதும் கூட. இவ்வகையான சூழல்களில் வயது என்பது நம் பக்குவத்தை குறிக்கிறது.

Leave a Comment