பறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10

பறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10

ஏர் லேண்டர் 10 – பகுதி விமானம், பகுதி ஆகாய கப்பல், பகுதி ஹெலிகாப்டர் அடங்கிய உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான பறக்கும் வானுார்தி.

இங்கிலாந்தின் ஹைப்ரிட் ஏர் வெஹிக்கில்ஸ்(Hybrid Air Vehicles) நிறுவனம் தயாரித்திருக்கும் ஏர் லேண்டர்-10 ஜெட் ரக பயணிகள் விமானத்தைவிட சுமார் 50 அடி அதிக நீளம் கொண்டது. மேலும் நான்கு டீசல் என்ஜின்களை கொண்டது.

air-lander-1

இப்போதிருக்கும் பெரிய பயணிகள் விமானத்தை விட 60 அடி நீளமானது. 10 டன் எடையுள்ள இந்த விமானம், மணிக்கு 148 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடியது.

மொத்தமாக 302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் கட்ட சோதனை வெள்ளோட்டம் பிரிட்டன் நாட்டில் ஆகஸ்ட் 17,2016 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆகஸ்ட் 24 அன்று இரண்டாம் கட்ட சோதனையாக 100 நிமிடம் வானில் பறக்கச் செய்யும் சோதனை நடந்தது. எதிர்பாராத விபத்தாக தரையிறங்கும் போது தரையில் மோதி முன்பகுதி, குறிப்பாக விமான ஓட்டி அறை(cockpit)யின் அடிப்பாகம் பாதிப்படைந்தது.

airship

விமான நிறுவனம் தெரிவிக்கையில், 100 நிமிட சோதனை வெள்ளோட்டம் முழுமையாக நிறைவுற்றது, தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட விபத்தால் யாருக்கும் பாதிப்பில்லை எனவும், பழுதை சரி செய்து, காரணத்தை அறிய முற்பட்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தின் வெளிப்புற வடிவத்தினால் செல்லமாக ஃப்ளையிங் பம்(Flying Bum) என அழைக்கப்படுகிறது.

ad_200377285

ஏர் குஷன் முறையில் தரையிறக்கும் தொழில்நுட்பம் மற்றும் மருதம், முல்லை, நெய்தல், பாலை போன்ற எவ்வித பகுதியிலிருந்தும் பறக்க வைக்க முடியும்.

வாயு குழாய்கள் மூலம் ஹீலியம் வாயுவை பயன்படுத்தி இதனை மேலே எழுப்பலாம். உந்துவதற்கு மட்டுமல்லாமல் வானில் நிலைத்திருக்கச் செய்யவும் ஹீலியம் வாயு பயன்படுகிறது. விண்ணில் பறக்க துவங்கியதும் வாயு குழாய்களை உள்ளே இழுத்துக் கொள்ளும்.

81whurw

தரையில் இருந்து புறப்படுவதற்கு மட்டும் ஹீலியம் வாயு பயன் படுத்தப்பட்டாலும், இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்தை விட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் பயன்பாடு மற்ற விமானங்களை விட 20 சதவீதம் குறைவு. சுற்றுச்சூழலுக்கு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உகந்தது.

சாதாரண ஹெலிகாப்டரைப் போல் எவ்வித தரையிலும் இறங்கும் ஆற்றல் கொண்ட இந்த விமானம் சுமார் 10 ஆயிரம் டன் சரக்குகளை சுமந்தபடி தொடர்ந்து 5 நாட்கள்வரை பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணுவ தளவாடங்களை தொலைதூரங்களுக்கு எடுத்துச்செல்வதில் இந்த விமானம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

air-lander-5

20,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய சிறப்பை பெற்றிருந்தாலும் தரைமட்டத்திலிருந்து குறைவான உயரத்தில் பறக்கும் போது நம்ம ஊர் டவுன் பஸ்களில் உட்கார்ந்து ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கலாம்.

£25m(220 கிட்டத்தட்ட கோடி) பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்பெரிய விமானம் ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டது(HAV 304).

அதிநுட்பம், கண்காணிப்பு மற்றும் இலக்கு கையகப்படுத்தல் போன்ற பணிகளுக்காக இது செயலாக்கப்பட்டது. 2013 ஆண்டு வெள்ளோட்டம் கூட நடத்தப்பட்டது, பின்னர் LEMV திட்டம் பொருளாதாரக் காரணங்களுக்காக கைவிடப்பட்டது.

air-lander-9

பின் இத்திட்டத்தின் காப்புரிமையை பெற்றுக்கொண்டு ஹைப்ரிட் ஏர் வெஹிக்கில்ஸ்(HAV) நிறுவனம் இதனை பொது பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி வடிவமைத்தது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில், பிரிட்டன் வானில் இந்த விமானம் பறக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மிக லேசான எடை கொண்ட இந்த ஆகாய கப்பல் துப்பாக்கியால் சுடப்பட்டால் கூட ஒன்றும் ஆகாதாம்.

பல நூறு துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையிலும் பல மணி நேரம் தாக்குப்பிடித்து தரையிறங்கும் தன்மையுடையது.

image-14

ஆனால் விமானங்களை தாக்கி அழிப்பது துப்பாக்கிகள் அல்லவே.

மிக சக்தி வாய்ந்த நான்கு இன்ஜின்கள் பயன்படுத்த படுவதால் மற்ற இன்ஜின்கள் பழுதானாலும் சமாளித்து தரை இறங்கி விடலாம்.

இந்த பிரிட்டன் கம்பேனி 50 டன் எடையை எடுத்து செல்லும் அளவுக்கு ஏர் லேண்டர் 50 என்ற திட்டத்தையும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரயுள்ளது. வான் போக்குவரத்து துறையில் இந்த தொழிற்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என்பது இவர்களின் உறுதியான நம்பிக்கை.

 

Add comment