Archelis (“நடக்கக்கூடிய இருக்கை” என அர்த்தம்) என்பது வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ பணியாளர் களுக்காக கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஒரு அதிநுட்ப ஜப்பானிய படைப்பு.இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம்.
அதிலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல்பொருள் அங்காடி ஊழியர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும்.
இதனை அணிந்து கொண்டால் வெகுநேரம் நிற்பவர்களுக்கு ஒரு சப்போர்ட் தேவைப்படும்போது நாற்காலியாக மாற்றி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.எங்கே நாற்காலி என தேடி அலைய வேண்டியதில்லை.இதன் வழியே வெகு நேரம் நின்று கொண்டே இருப்பதால் வரும் நோய்களையும் தடுக்கலாம்.
இந்த இருக்கைகள் மூழுவதும் கார்பனால் தயாரிக்கப்பட்டுள்ளதால் வெகு காலத்திற்கு நன்கு வளையும் தன்மையுடனும் அணிந்துக் கொள்ள வசதியாகவும் இருக்கும்.ஒரு அணிந்து கொள்ளக்கூடிய உடை போன்று வேலை செய்யும்.
இவை வேலை செய்ய எந்தவொரு மின் இணைப்போ அல்லது பேட்டரியோ தேவையில்லை.
ஆர்செலிஸ்ஸை Nitto என்ற நிறுவனம் Chiba University’s Center for Frontier Medical Engineering, Hiroaki Nishimura Design, மற்றும் Japan Polymer Technology ஆகியோரோடு இணைந்து உருவாக்கியுள்ளது. ஆனாலும் சென்ற வருடம் சுவிஸ் நாட்டை சேர்ந்த Noonee நிறுவனம் இதே போன்றொரு வடிவமைப்பை(Chairless Chair) வெளியிட்டது.
புதிய தொழிற்நுட்ப முறை என்பதால் இதன் விலை அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறேன். அதன்படி குறைந்த பட்சம் இந்திய விலைப்படி குறைந்தது 5000 ரூபாய்க்கும் மேலாகவே இருக்கும்.
இந்த விலையும் என்னுடைய கணிப்பே தவிர வெளியானதும் தான் உண்மை நிலவரம் தெரியும்.அதுவும் இந்தியாவுக்கு வர எத்துணை மாத/வருடங்கள் பிடிக்கும் என்பதும் கேள்வியே.உலகளவில் 2016 கோடையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
2 comments
எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும், ஒரு நின்று கொண்டே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நபர் நான்!
:))
முதலாளிகள் மனது வைத்தால் சில மாதங்களிலே கிடைக்கும்..