வௌவால் – இரவுலகின் சாத்தான்கள்

வௌவால் – இரவுலகின் சாத்தான்கள்

வௌவால்கள் பறவையா பாலுட்டியா?

வௌவால்கள் பாலுட்டி இனத்தை சேர்ந்தது, பாலுட்டிகளில் பறக்கவல்ல ஒரே இனம் வௌவால்கள் தான்.முதுகெலும்பு உள்ள இவை ஆந்தைகளைப் போலவே இரவில்தான் செயல்படும்.இவற்றின் முன்னங்கைகளே இறக்கைகளாக பரிணமித்துள்ளன. இறக்கை கால் மற்றும் முதுகு புறம் வரை ஜவ்வு போல இணைந்து அமைந்திருக்கின்றன.

வௌவால்கள் பார்ப்பதற்கு எலிகளின் வழிதோன்றல் போல இருப்பினும் இவை தனிப்பட்ட பரிணமித்த வகையை சேர்ந்தது .கிட்டத்தட்ட 52 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த வௌவால் தடயங்கள் கூட கிடைத்துள்ளன.

Divider R

வௌவால்களுக்கு கண் தெரியுமா?

மனிதனால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அலைகளை உணர முடியும்,அதே சமயம் வௌவால்களால் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் வகையான ஒலி அலைகளை உணர முடியும்.

ஏன் வௌவால் தலைகீழாக தொங்குகிறது?

இரவில் பறக்கும் போது மீயொலி அலைகளை அனுப்பி அவை எதிரில் இருக்கும் சுவர் அல்லது பொருட்களில் மீது மோதித் திரும்ப வருவதைக் கொண்டு அதன் தொலைவைக் கணக்கிடும் தகவமைப்பு அதற்கு உண்டு.

இத்தகவமைப்பின் மூலம் எதிரில் இருக்கும் பொருட்கள் அல்லது உயிரினங்கள் இருக்கும் தூரத்தை மட்டுமல்ல உடல் அளவைக்கூட கண்டுபிடிக்க முடியும்.

வௌவால்களுக்கு பார்வைத் திறன் உண்டு,ஆனால் அவற்றின் கண்கள் பெரிதாக பரிணாம வளர்ச்சி அடையாதவை.மேலும் அவை உணவிற்காகதான் மீயொலிகளை உபயோக்கிறது, இனப்பெருக்கம் போன்ற மற்ற செயல்களுக்கு அவை தன் கண்களையே பயன்படுத்துகின்றன.

உலகின்  சிறிய வகை வொவால் 2.4 இன்ச் (3 CM) மற்றும் பெரிய வௌவால் 5.6 (1.8 M) அடி உயரம் ஆகும்.

Divider R

ஏன் வௌவால் தலைகீழாக தொங்குகிறது?

பொதுவாக பறவைகள் தன் பலம் பொருந்திய இறக்கைகளை கிழ்நோக்கி உந்துவதன் மூலம் மேலெழும்பி பறக்கிறது.சிலவை தனது வேகத்தை அதிகரிக்க விமானத்தை போல சிறிது தூரம் ஓடி வந்து பறக்க துவங்கும்.

பறவைகள் எவ்வாறு பறக்கிறது?

ஆனால் வௌவால்களின் முன் மற்றும் பின் கால்கள் மிக மிருதுவானவை.அதன் மூலம் ஓடி வந்தோ அல்லது இறக்கைகளை உந்தியோ பறக்கும் அளவுக்கு பலமற்றவை.ஆபத்து நேரங்களில் மற்ற வேட்டை விலங்குகளுக்கு மிக சுலப இரையாகிவிடும்.

எனவே இவை தலைகீழாக தொங்கி கீழே விமானம் போல இறங்கி பறக்கிறது.மிக உயரத்தில் தலைகீழாக தொங்குவதன் மூலம் அவை விலங்குகளிடம் எளிதில் இரையாவதில்லை, அங்கு இடப்பற்றாக்குறையும் இல்லை.

வௌவால் உடல் அமைப்பு

மனிதன் தன்னால் முடிந்த வரை தலைகீழாக தொங்கினாலும், அதிகபட்சம்  10 நிமிடம் வரை தாக்குபிடிப்பான். பின் உடல் சோர்வு ஏற்பாடு மயக்க நிலையை அடைவான். ஆனால் வௌவால் எப்படி நாள் முழுவதும் தலைகீழாக தொங்குகிறது? மேலும் இவற்றிற்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

இறக்கைகளை மூடி கொள்வதன் மூலம் அவை 35% அளவு சக்தியை சேமிக்கின்றன.

இதற்கு  அறிவியலில் விடை உண்டு. இவை தலைகீழாக தொங்கும் பொது, உடல் எடை காரணமாக இவற்றின் கால் தசைநார்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து அவற்றின் நகங்கள் மரத்தின் கிளைகளை இறுக்கமாக பற்றிக்கொள்கிறது.எனவே அதன் உடல் எடையை காலில் தாங்காமல் தவிர்கிறது.கிட்டதட்ட ஒருவகை ஒய்வு நிலையிலேயே நிற்கிறது.

வௌவால்கள் தலைகீழாக தொங்கும் போது இறந்துவிட்டால் கூட வேறு ஏதோ ஒரு விசை அதனை மோதி தள்ளும் வரை அது கீழே விழாமல் அதே நிலையிலேயே இருக்கும்.

Divider R

வௌவால் வகைகள் 

வெளவால்களில் உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பெரும் கைச்சிறகிகள்(Megachiroptera), குறும் கைச்சிறகிகள்(Microchiroptera) என இரு பெரும் வகை வௌவால் இனங்களாக இவை பிரிக்கபடுகிறது.

வௌவால் இறக்கைகள்

குறும் கைச்சிறகி வகை வௌவால் பூக்கள், பூச்சிகள், இலை, தேன், மகரந்தம் இவற்றையே அதிகம் உண்டு வாழ்கிறது. பெரிய வௌவால்கள் பழங்களையும், சிறியவை பூச்சிகளையும் உண்டு வாழ்கிறது,பெரும்பாலும் பழம் தின்னி வகை சேர்ந்தது.

பெரிய வகை பழந்தின்னி வௌவால்கள் பறக்கும் நரிகள் எனவும் அறியப்படுகிறது.ஏனெனில் அவற்றின் முகமானது நரியை போன்று காணப்படும்.

வௌவால்கள் வாய் வழியாக உண்டு வாய் வழியாகவே கழிவையும் வெளியேற்றுகின்றன,இவை விவசாயத்தில் முக்கிய உரமாக பயன்படுகிறது.

இவை இரவு நேரங்களில் நாற்பத்து எட்டு கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும்.பழத்தின் சாறை உறிஞ்சி குடிக்கும்.மலர்களில் உள்ள தேனையும் குடிக்கும்.சில சமயம் வௌவால்கள் பயிர்களையும் தின்றுவிடும்.

பழந்தின்னி வௌவால்கள்

பெரும் கைச்சிறகி(Microchiroptera) வகை வௌவால்களில் சிலவகை விலங்குகளின் ரத்தத்தை குடிக்கும் வௌவால்களாக உள்ளது. இவற்றை ஆங்கிலத்தில் Vampire bat என அழைகின்றனர்.சிலவை மீன்களை உண்கிறது

Divider R

வௌவால்கள் இரத்தம் குடிக்குமா?

 காட்டு விலங்குகள், மிருகங்கள், ஆடு மாடுகள்,சில நேரங்களில் மனிதர்களின் இரத்தத்தையும் குடிக்கும். இவ்வகை காட்டேரி(Vampire) வௌவால் வாயின் உட்புறம் இரு பெரிய வெட்டும் பற்கள், அடுத்துடுத்து வேட்டை பற்கள் மற்றும் சிறு பற்கள் உள்ளது. இவற்றின் உடல் அமைப்பில் சிறு காதுகளும், வாளும் காணப்படும்.

வௌவால்கள் இரத்தம் குடிக்குமா?

 

மூளையில் உள்ள ஒலிவாங்கும் அமைப்பானது இரையின் சுவாச ஒலியை கேட்கும் அளவு சிறப்புடையது. இது இரையை கடிக்கும் பொது அவற்றின் உமிழ்நீரை இரையின் மீது செலுத்தும். அவற்றின் உமிழ்நீரில் உள்ள திராகுலின் (Draculin) எனும் திரவம் இரத்தம் உறைதலை தடுக்கிறது. இவை இரத்தத்தை உறிஞ்சி குடிக்காது. நாக்கினால் நக்கியே குடிக்கும்.காட்டேரி(வாம்பயர்) கதைகள் இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.

ரத்தம் குடிக்கும் வௌவால்கள் தன உடல் எடையை விட இரு மடங்கு உணவை உண்டு வாழ்கிறது.

இவ்வகை வௌவால் இனம் மட்டுமே, தாய் வௌவால்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் குட்டி வௌவாலை அதன் காலனியில் இருக்கும் மற்ற வௌவால்கள் பாதுகாக்கும்.

அதிசயம் என்னவென்றால், தன் காலனியில் இருக்கும் பிற வௌவால்கள் உணவு இல்லாமல் தவிக்கும் பொது, மற்ற வௌவால் தனது இரத்தத்தை கொடுக்கும்.

இவற்றில்  (Desmodus rotundus), (Diphylla ecaudata),  (Diaemus youngiமூன்று வகை வௌவால்கள் உள்ளது.இவ்வகை வௌவால் அமெரிக்க, மெக்சிகோ, பிரேசில், சிலி, அர்ஜென்டினா நாடுகளில் காணப்படும்.

Divider R

6 அடி நீள வௌவால்கள் உள்ளது 

சில வௌவால்கள் மிக பசிதன்மை கொண்டவை, மலேசியாவை சேர்ந்த வௌவால்கள் அவற்றின் உடல் எடையில் பாதி அளவு உணவு உண்கிறது. வௌவால் மணிக்கு ஆயிரம் சிறுபூச்சிகள் வரை சாப்பிடும்.இவற்றில் பழம்தின்னி வௌவால்கள் பெருவாரியாக காணப்படுகிறது. இவ்வகை வௌவால்கள்(Giant Golden-Crowned Flying-Fox) அதிகபட்சம் 1.6 மீட்டர் வரை வளரும் திறன் உடையது.

பறக்கும் நரிகள்
                                                     Golden-Crowned Flying-Fox

வௌவால் இனத்தில் The Megabat இனமே பெரியவை. இவற்றை இந்திய பறக்கும் நரிகள் என அழைகின்றனர்.

உலகின் மிக பெரிய பறக்கும் நரியானது ஜாவா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் நீளம் 1.8 Meter(சுமார் 6 அடி), அகலம் 55 CM,எடை 1.5 KG ஆகும்.

அதேபோன்று உலகின் மிக சிறிய வௌவாலை (Microbat) வண்டு வௌவால் என அழைகின்றனர். இவை மேற்கு தாய்லாந்தில் உள்ள Kwai நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 3 C .M நீளமும் , 2.கிராம் எடை கொண்டது. இவயே உலகின் மிக சிறிய பாலுட்டி உயிரினம்.

Divider R

வௌவால்களின் இனபெருக்க வாழ்க்கை 

அவற்றின் வாழ்கை முறையில், பிறந்த குட்டி வௌவால் தனது தாயின் மார்பினை வாயால் கவ்விகொண்டிருக்கும். தனது காலினால் தன் இடுப்பின் மீது பற்றிக்கொள்ளும்.

உலகிலேய ஆண் இனத்தில் மார்பில் பால் சுரக்கும் அதிசயம் தயாக் (Dayak fruit bat) வௌவால்களுக்கு  மட்டுமே உள்ளது.

தனது குட்டியினை 4-5 வாரங்கள் இது போன்று பாதுகாக்கும். இது அதற்கு மிக கடுமையான காலம்.குட்டி வௌவால் முதலில் பறக்க ஆரம்பிக்க எடுக்கும் காலம் 8- 12 வாரங்கள். முழுவதுமாக தானே பறக்க சுமார் 12 வாரங்கள் ஆகும்.

வௌவால்களின் இனபெருக்க

வௌவாலின் தாய் மற்றும் குட்டியின் பாசம் அளப்பரியது.குட்டியினை எதிரி விலங்குகள் தூக்கி சென்றுவிட்டால், தாயானது தனது குட்டியை கடைசியாக பார்த்த இடத்தில் வந்து அங்குமிங்கும் தேடும்.இப்படியே சுமார் 7 நாட்கள் வரை கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்.

வௌவாலின் குட்டி

ஹாமர் ஹெட்(hammerhead) இன வௌவால் வித்தியாசமான இனபெருக்க முறையை கையாழுகிறது. ஆண் வௌவால் ஒரு மரத்தில் வரிசயாக தொங்குகிறது. அவை பெண் வௌவாலை கவர்வதற்காக வித்தியாசமான ஒலி எழுப்புகிறது. அவற்றில் வெற்றி பெற்ற வௌவால் இனபெருக்கத்திற்கு தயராகுகிறது.

பபுவா நியூ குய்னியா விலும் , பசுபிக பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் வௌவாலை உணவாக உண்கின்றனர்.ஆசியாவின் சில பகுதிகளிலும் வௌவாள்கள் தீனி போன்று உண்ணப்படுகின்றது.

Divider R

வௌவால்கள் சாத்தானின் அடையாளமா?

வௌவாலிடம் இருந்தது இரு வகையான வைரஸ் விலங்குகளுக்கு பரவுகிறது. Hendra or Equine Morbillivirus (EMV) மற்றும் Australian Bat Lyssavirus (ABLV). Hendra வைரஸ் மனிதர்களுக்கு பரவாது.

இவை சிறு விலங்குகளை தாக்கிறது. இருப்பினும் நாம் செல்லும் வழியில் ஏதுனும் வௌவால் காயமுற்றிருந்தால் அவற்றை தொட வேண்டாம். முதலில் வனத்துறைக்கு தகவல் கொடுங்கள். பூனை, நரி, ராக்கூன் மற்றும் வௌவால் மூலமாகவும் வைரஸ் நோயாகிய ராபீசு பற்றிக் கொள்ளலாம்.

வௌவால் உங்களை தாக்கியிருந்தால் உடனே சோப்பு பயன்படுத்தி தாக்கிய இடத்தை நன்கு கழுவ வேண்டும் பின் உரிய மருத்துவ சிகிச்சை பெறவும்.

வௌவால்கள் சாத்தானின் அடையாளமா?

இடைகாலத்தில் ஐரோப்பா கண்டத்தில் வௌவால்கள் சாத்தானின் அடையாளமாக கருதப்பட்டது.  பிரான்ஸ்ல் 1332 ல்  Bayonne நகரத்தில்  Lady Jacaume என்ற பெண்ணின் வீட்டில் மேல் வௌவால் கூட்டம் பறந்துகொண்டிருந்தது. இவற்றை கெட்ட சகுனமாக கருதி அப்பெண்ணை நடு ரோட்டில் வைத்து ஊர் மக்கள் எரித்தனர்.

ஆப்பிரிக்காவில் கோட் டிவார் பகுதியில் இறந்தவர்களின் ஆவி வௌவாலக இருக்கிறது என்று நம்புகின்றனர்.மடகாஸ்கர் தீவில் குற்றவாளிகளின் ஆவியே வௌவால் ஆக திரிகிறது என்ற நம்பிக்கை இருந்தது. நாட்டுப்புறவியல் மரபில் வௌவால் ரத்தத்தில் முகம் கழுவினால் இரவில் பார்வை சக்தி கூடும் என்ற நம்பிக்கை உலவுகிறது.

சூனியக்காரர்கள் வௌவாலின் ரத்தத்தை பூஜைக்கு மூலபொருளாக பயன்படுத்தினார்கள். வௌவாலின் எலும்பினை வைத்திருப்பவர்களை மிக அதிர்ஷ்டசாலியாகவும் கருதினர்.

வௌவால் குகை

என்னதான் வௌவால் தீய சக்தியின் அடையாளமாக சித்தரிக்கப்ப்ட்டாலும், நடைமுறையில் அவை உணவு சங்கலியின் சம நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது.உலகின் பாலூட்டி இனங்களில் 25% வௌவால் இனங்களால் ஆனது.

ஒருவேளை வௌவால்கள் புவியில் இல்லாமல் இருந்திருந்தால் பூச்சிகள்,கொசுக்கள் மற்றும் பல சிறு உயிரனங்களின் தாக்கம் அதிகரித்து மனிதன் உட்பட பல விலங்கினங்கள் இன்று அழிவு நிலையை சந்தித்து இருக்கும்.

Divider R

1 comment