மனிதனை எது கட்டுபடுத்துகிறது? கடவுளா இயற்கையா. இல்லை மனிதனின் தரத்தையும் சக மனிதரிடமிருந்து அவனை வேறுபடுத்தி காட்டுவது பணம் மட்டுமே. எவன் பணத்தை கையகபடுத்துகிறானோ அவன் மனித சமுதாயத்தை கட்டுபடுத்துகிறான்.

பண்டமாற்று முறையில் தொடங்கி நாணயம், காகிதம் என பணம் எண்ணற்ற பரிணாமங்களை கடந்து வந்துவிட்டது. இன்றெல்லாம் செலவினங்கள் எல்லாமே டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு கள் மூலமாகவே அதிகம் செலவிடப்படுகிறது. இதற்கும் இந்த நாட்டிற்குள் தான் பயன்படுத்த முடியும் என்ற எல்லை உண்டு.

இன்று நாம் பார்க்க போவது கண்ணில் பார்க்க முடியாத சர்வ தேசங்களுக்கும் பொதுவான பிட்காயின். பிட்காயின் இணைய பரிமாற்றம் மட்டுமே செய்யப்படும் டிஜிட்டல் கரன்சி. இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மேலும் சந்தை பொருளாதரம் போல இதன் தேவை மற்றும் பயன்பாட்டை பொறுத்து மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும்.

உருவாக்கம்:

பிட்காயின் 2009 ல் உருவாக்கப்பட்டது. அன்று ஒரு பிட்காயின் விலை 2 டாலர் மட்டுமே. ஆனால் 2017, டிசம்பர் 13ல் இதன் மதிப்பு அதிகபட்சமாக 17,300 டாலராக உயர்ந்தது. பின்னர் 2019 ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 10000 டாலருக்கு மேலும் கீழாக சென்று வருகிறது. 2020 ஆண்டு இறுதிக்குள் இதன் மதிப்பு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இத்தனை மதிப்புமிக்க பிட்காயினை எந்த நாடும் அது தனக்கானது என சொந்தம் கொண்டாட முடியாது. இது ஒரு சர்வதேச பொதுவுடைமை. அதாவது ஒரு நாட்டின் பொருளாதார நிலையை வைத்து பணமதிப்பை மாற்றியமைக்க முடியாது. அதற்கு முக்கிய காரணம் இந்த காயினை போல உருவமற்ற கண்டுபிடிப்பாளர்.

bitcoin-cryptocurrency

சப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) தான் கண்டுபிடித்தார் என சிலர் கூறுகிறார்கள். எனினும் உண்மையில் தருவித்தவர் யார் என்று தெரியவில்லை. பிட்காயின் திறந்த மூல மென்பொருளாக 2009-இல் வெளியிடப்பட்டது.

வங்கிக்கணக்கு:

அதனாலே டாலர், பவுண்ட், ரூபாய் என்று இல்லாமல் உலகத்திற்கே ஒரே நாணயமாக பிட்காயின் உள்ளது. டாலர் மதிப்பில் உண்டாகும் மாற்றங்கள் இதனை பாதிக்காது. பிட்காயினை வைத்துக் கொள்ள இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி கொள்ளலாம் (www.blockchain.info). இந்த இணையதளம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.

கணக்கை நிர்வகிக்க ஒரு முகவரியைப் பெற வேண்டும். பிட்காயின் முகவரி என்பது 25 முதல் 34 எழுத்துக்கள் கொண்ட ஒரு சொல்லாகும். எடுத்துக் காட்டாக, 1BEDTAGjvTtWetTFn5Au4m4GFg7xJaN2 இதுபோல் இருக்கும். ஒரு Random Number, Public Key மற்றும் Private Key ஆகியவை அடங்கியதாக இருக்கும்.

பிட்காயினை வாங்க, விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் பிட்காயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இதற்காக நமது நாட்டில், Zebpay, Unocoin, Coinsecure, Bitxoxo, ThroughBit, FlitPay, Coin Delta, Belfrics, CoinSwitch, PocketBits, Coinome, RediPay, UnoCoin ஆகிய இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை.

Private Key யை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை தொலைத்தால் பணத்தை தொலைத்தது போலத்தான். பலர் இவ்வாறு தங்கள் பணத்தை இழந்தும் உள்ளனர்.

பாரமரிப்பு :

மொத்தமாக 21 மில்லியன் அளவிற்கு மட்டுமே பிட்காயின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 10 மில்லியன் பிட்காயின் புழக்கத்தில் இருக்கிறது. அதிகம் வாங்கப்படும் போது இதன் டிமாண்ட அதிகரித்து விலை அதிகரிக்கிறது.

யாராலும் கட்டுபடுத்த படவில்லையா. பின் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்வி வரும். பிட்காயின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் அமைப்புகளால் நிர்வாகிக்கப்படுகிறது. பாரமரிப்பு வேலைகளின் போது ஒரு அமைப்பு 51% மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். அதற்கு மேல் போனால் ஒரு அமைப்பு அதை தன்னகபடுத்திக் கொள்ளும் என்ற காரணத்தாலே.

bitcoin-and-handcuffs

இதை உலக கணினி மேலாண்மை அமைப்புகள் ஏற்றுக் கொண்டதால் இது பொது கரன்ஸியாக பயன்பட்டு வருகிறது.

பயன்பாடு:

முன்பு போல இல்லாமல் ஆன்லைன் வசதியால் நாம் உலகில் எல்லா இடத்திலிருந்தும் நமக்கு தேவையானதை வாங்கி கொள்ள முடியும். முக்கியமாக ஆன்லைனில் வாங்கப்படும் கேம்ஸ்(Play Store), Ubox), மென்பொருட்கள்(Software), ஆன்லைன் வகுப்பு கட்டணம், நெட்பிளிக்ஸ்(Netflix) போன்ற சேனல் சப்ஸ்கிரிப்ஷன் என இந்த பட்டியில் நீளும்.

இவற்றை நாம் இந்திய வங்கி கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாது.வெளிநாட்டில் வங்கிக் கணக்கு இருந்தாலும் அதிலிருந்து உங்கள் அக்கவுண்ட் க்கு எளிதாக பணம் அனுப்பி விட முடியாது. இது போன்ற சமயங்கள் பிட்காயின் பயனுள்ளதாக இருக்கும்.

பிட்காயினை வாங்கவும், விற்கவும் முடியும். உடனே பணத்தை நமது கணக்கிற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும். வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன. இந்தியாவில் விரைவில் இந்த ஏடிஎம் நிறுவப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிட்காயினை பிளிப் கார்ட், அமேசான் ஆகியவை ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்றுக் கொள்கின்றன.

பாதுகாப்பு:

பிட்காயின் பல வசதிகளை கொண்டிருந்தும் பல நாடுகளின் அரசுகள் இதனை சர்வதேச வங்கி அமைப்புகளுக்கு ஒரு பெரும் சவாலாகவே பார்க்கின்றன. ஏனெனில் இதனை அவர்களால் கட்டுபடுத்த இயலாது. அந்த அரசின் கொள்கைக்கும் கட்டுபட்டது. எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. எனினும் இதுவும் நிழல் பக்கத்தை கொண்டிருக்காமல் இல்லை.

இந்த பிரபல காயின் சர்வதேச கணினியாளர்கள், தீவிரவாத அமைப்புகள், ஹேக்கர்ஸ், போதை பொருள் விற்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல அமைந்து விடுகிறது. சமீபத்தில் IT நிறுவனங்களில் நடந்த Ransomware Virus ஏற்படுத்திய கணியாளார் தனக்கு பணத்தை பிட்காயினாக தரவேண்டும் என கேட்டார்.

bitcoin-Intresting-Engineering

அதன் பின்னரே இந்த பிட்காயின் பிரபலம் அடைந்தது எனவும் சொல்லலாம். இதன் மூலம் பிட்காயினை வாங்கி சேமிப்பதனாலும் மைனிங் செய்வதாலும் லாபம் கிட்டும் என்ற சிந்தனை பலருக்கும் உதயமானது.

அடையாளம் இல்லாதவர் கூட பிட்காயினைப் பயன்படுத்த முடியும். பிட்காயின்களைத் தனிப்பட்ட கணிணிகளிலோ அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களிலோ அல்லது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகளிளோ சேமிக்க முடியும். எப்படியாக இருந்தாலும் பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இணையம் மூலம் பணத்தை அனுப்பலாம்.

எண்ணங்கள்:

இந்தியாவில் பொதுநல வழக்கு ஒன்று பிட்காயின் பற்றி கேட்ட போது செபியும், மத்திய அரசு வங்கியான ஆர்பிஐயும் இதுதொடர்பான கொள்கை ஆவணத்தை தயாரித்து வருவதாக தகவல் சொன்னது. இதன் மூலம் இந்திய அரசு பிட்காயினை எதிர்க்கவில்லை என தெளிவானது.

இன்றவளவில் எல்லாம் இணையமய மாகிவிட்ட நிலையில் ஆன்லைன் பணப்புழக்கம் என்பது தினசரி வாடிக்கைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த வருடத்தில் ஆயிரக்கணக்கான பிட்காயின் கணக்குகள் இந்தியாவில் தினமும் தொடங்கப்படுள்ளன.

பிட்காயின் பாதுகாப்பானதா, எதை வைத்து நம்பாலாம் என்றால், அதன் புழக்கம் இப்போது சமுதாயத்தில் இருப்பதை வைத்து தான். உலக மக்கள் இதனை சர்வதேச பணமாக ஏற்றுக்கொண்டதாலே இது இன்றவுளவும் சந்தையை கண்ணுக்கு தெரியாமலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

Leave a Comment