Image default
Tech

இந்திய இரயில்வேயின் தண்ணீர் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம்

இந்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின்(Swachh Bharat) பங்களிப்பாக இந்திய இரயில்வே மறுசுழற்சி இயந்திரம் ஒன்றை மும்பை புறநகர் ரயில் நிலையங்களில்(Western line) நிறுவயுள்ளது.

முதற்கட்டமாக சர்ச்கேட் புறநகர் இரயில் நிலையத்தில் இதனை தொடங்கியுள்ளது, இதன் மூலம் நாம் குடித்துவிட்டு தூக்கி எரியும் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய இயலும், இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்களால் உண்டாகும் குப்பைகளும் குறையும்.

railway station water bottle.jpg

பார்ப்பதற்கு குளிர்சாதன பெட்டியை விட பெரிதாக தோன்றும் இந்த இயந்திரம்(Bottle recycling machine) உலக சுகாதார தினத்தன்று சர்ச்கேட் நிலையத்தில் வைக்கப்பட்டது, மும்பையின் 10 நிலையங்களில் கொண்ட வரப்படவுள்ள இத்திட்டம் விரைவில்

Mumbai Central, Dadar, Bandra (local), Bandra terminus, Santacruz, Andheri, Goregaon, Borivali மற்றும் Bhayandar ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படும். இதன் மூலம் தண்டவாளங்களில் நடைப்பதையிலும் தண்ணீர் பாட்டில்களின் எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

தினசரி 500 பாட்டில்/கேன்களை இந்த இயந்திரத்தால் அறைக்க முடியும், மேலும்  முறையான பார்கோடுகள் இருந்தால் தான் அவை ஏற்றுக்கொள்ளும்.இதனை செய்யும் நபர்களுக்கும் வெகுமதியும் கிடைப்பதால் தொடர்ந்து செய்ய ஊக்கமும் அளிக்கப்படுகிறது.

bottle-recycle 0 (2)

நெகிழி(Plastic) பாட்டிலை இயந்திரத்தில் செலுத்தியதும் திரையில் மூன்று விதமான விருப்ப தேர்வுகள் தோன்றும். Donation, Mobile Recharge, Discount Coupons.

உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு Recharge செய்துக் கொள்ளலாம், அல்லது McDonald’s போன்ற விளம்பர நிறுவனங்களின் Coupon’s யும் பெற்றுக் கொள்ளலாம், அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு Donate செய்யலாம்.இதனால் பயணிகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்படுகிறது.

இந்திய வடக்கு ரயில்வே தலைமை இயக்குனர் கூறுகையில், இவ்வியந்திரத்தை நிறுவ எங்களுக்கு எந்த வித செலவும் ஆகவில்லை, ஏனெனில் அதன் திரையில் இடப்படும் விளம்பரங்கள் மற்றும் LED விளக்குகளுக்கான லாப தொகையே அதனை பூர்த்தி செய்துவிட்டது.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு இது பெருமளவில் உதவும், இதனால் மும்பை இரயில் நிலையங்களின் தூய்மையும் மேம்படுத்தப்படும்.

Wockhardt Foundation என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கபடும் இதனை உருவாக்க இரு இயந்திரத்திற்கு 7 லட்சம் செலவாகிறது.மேலும் நாங்கள் ரிலையன்ஸ் போன்ற பல முன்னணி நிறுவங்களுடன் Discount Coupon சலுகை தொடர்பாக பேசி வருகிறோம் என்றனர்.

மறுசுழற்சி செய்யப்படும் பாட்டில்கள் ஆடைகள், தரை விரிப்புகள், மளிகை பைகள் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுப்பப்படும்.

ஒவ்வொரு முறையும் நாம் பயணம் செய்யும்போது தண்ணீர் தேவைக்காக எண்ணற்ற நெகிழி பாட்டில்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. அவற்றை சாலைகள், பேருந்து அல்லது இரயில் நிலையங்களிலேயே வீசி எறிகிறோம். தனிமனித ஒழுக்கம் தாண்டிய இந்த பிரசனையை அரசு கையாளும் விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது.

water bottles in railway station.jpg

ஒரு மறுழற்சி இயந்திரத்தை ஆக்கப்பூர்வமாகவும் அதே சமயம் மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வழி செய்திருப்பது நெழிகளற்ற எதிர்காலத்திற்கான சிறந்த அடித்தளமாக அமைகிறது.நெகிழிகளால் பறவைகள் மற்றும் மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் ஏற்கனவே அறிவோம்.

இதுபோன்ற எதிர்கால திட்டங்களை அரசு ஆதரிப்பதோடு தகுந்த ஊக்கம் அளிக்க வேண்டும். எதை எதையோ விளம்பரம் செய்யும் ஊடகங்கள்(Media) இது போன்ற திட்டங்களை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தயங்க கூடாது.

 

Image source : Google

Related posts

அனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்

Seyon

விமானம் விபத்தாகலாம், ஆனால் உயிர்சேதம் இருக்காது

Seyon

எங்கும் வாழலாம் – முட்டை வடிவிலான வீடுகள்

Seyon

Leave a Comment