Image default
Culture History

பர்மா தமிழர்களுக்கு என்ன நடந்தது

Feature Image Credit : Blaine Harrington

வரலாற்று காலம் முதலே இன ஒடுக்கப்படுதல் விளைவாக பல்வேறு துயரமிக்க இடப்பெயர்வுகளை இந்திய தேசம் சந்திந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, வங்காளதேச விடுதலை, ஈழப்போர் என அவலமிக்க ரத்தக் கறைகள் படிந்த இந்த தேசத்தின் பன்முகத்தன்மையை அவ்வப்போது நினைப்படுத்த தவறுவதில்லை.

1962 ஆம் ஆண்டு பர்மாவில்(இன்றைய மியான்மர்) ராணுவ பிரகனபடுத்தலின் போதும் அங்கிருந்த தமிழர்கள் தங்கள் உறவையும் உடைமைகளையும் இழந்து வெற்று உயிரோடு தாய் தேசம் திரும்ப கட்டயமாகப்பட்டனர். பர்மாவின் வணிகத்தை கட்டமைத்தவர்கள் கப்பலில் கூட்டம் கூட்டமாக நாடு கடத்தப்பட்டனர்.

நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டதால் செல்வந்தர்களாக வாழ்ந்த தமிழர்கள் ஒரே நாளில் வீதிக்கு வரும் நிலையானது. அவர்களிடம் இருந்த தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பர்மா அல்லோதோர் எவரும் அரசு பணியில் இருக்க அனுமதியாமல்
வெளியேற்றப்பட்டனர். இந்திய சினிமா, பத்திரிக்கை எல்லாம் முடக்கப்பட்டது.

BURMA. WWII. Indian refugees flee Burma before advancing Japanese army.
BURMA. WWII. Indian refugees flee Burma before advancing Japanese army.

கப்பலில் பயணிக்க இயலாதவர்கள் பெரும் காட்டு பாதை வழி நடந்தே வந்து இந்திய எல்லையைச் சேர்ந்தனர். அந்த கொடிய பயணித்தில் பாம்பு கடி, உடல் உபாதை என பலர் பாதி வழியிலேயே செத்து மடிந்தனர். எல்லாவற்றையும் இழந்து இந்தியா வந்த போது அவர்களுக்கு சொத்து, சொந்தம் என எதுவுமே இல்லை. வாழ்க்கை மீண்டும் வெள்ளை காகிதமாக இருந்தது.

ஆனாலும் எஞ்சிய எண்ணற்ற குடும்பங்கள் பர்மாவிலேயே தங்கினர். அதில் முக்கால்வாசி கிராமத்திலும் விவசாயமும் வியாபாரமும் செய்து வருபவர்கள். அவர்களது சொத்துக்கள் உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அவர்களுக்கென அங்கே வாழ்விடம் இருந்தது. இன்று அவர்கள் நகரங்களிலும் மெல்ல ஊடுருவி முன்னேறியுள்ளனர்.

குடியேற்றம் :

பன்னெடுங்காலமாக சோழர் ஆதிகத்தின் போதே தமிழர்கள் இன்றைய பர்மா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் குடியமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும் 19 நூற்றாண்டின் போதுதான் பெரும்பான்மையான இந்திய மக்கள் ஆங்கிலேயர்களால் பர்மாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். படை வீரர்கள், அரசு வேலையாளர், வியாபாரிகள், விவசாயம் போன்ற பல்வேறு தொழிற்சார்ந்த மக்கள் பர்மா குடியேறினார்கள்.

பிரிட்டிஷ் ஆத்திகத்திற்கு முன்னர் ரங்கூன் பகுதியில் ஒரு சிறு அமைப்பாக மட்டுமே இந்தியர்கள் இருந்தார்கள். 1850 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வேலைவாய்ப்புகள் நிறைய உருவாகியதால் கீழ் பர்மாவின் மாகாண பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள்.1900 காலத்தில் மொத்தம் 3,00,000 ஆசியர்களில் 80% பேர் பர்மாவிற்கு வெளியே பிறந்தவர்கள்.
தமிழர்கள் (2)

அதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அன்றைய மதராசபட்டினத்தில் இருந்து வந்தவர்கள். 30% வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள். பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வேளாண்மை உள்ளிட பல அரசு திட்டங்களை செயல்படுத்தியதும் அதில் தம்மை இந்தியர்கள் இணைத்து கொண்டார்கள்.

வணிக மேம்பாடு

பர்மாவின் விவசாயத்திற்கு ஆதாரமாய் இருந்தது தமிழர்களே. வளம் கொழிக்கும் தங்க மண்ணில் வேளாண்மையை வித்திட்டு பல்லுயிர் பெருக்கத்திற்கு அவர்களே காரணமாக அமைந்தார்கள். நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய இந்தியர்கள் பர்மாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறத் தொடங்கினர்.

ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் எல்லாமே இந்திய மக்களால் நடத்தபட்டது. பர்மாவின் பொருளாதாரத்தில் தமிழர்கள் விலக்க இயலாத அங்கமாக உருவெடுத்தனர். மொத்த வியாபாரமும் அவர்கள் கைக்கு வந்தது.இதனால் சில வருடங்களில் பர்மாவின் பொருளாதார இருப்பு நிலை பன்மடங்கு அதிகரித்தது.
தமிழர்கள் (1)

பல இந்தியர்கள் வட்டி தொழில் செய்தனர், பர்மாவின் பெரும் சொத்துகள் அவர்கள் உழைப்பால் கைவசமானது. தொழில் அதிபர் முதல் சிறு கட்டட தொழிலாளி வரை இந்தியர்கள் பங்கு நிரம்பியிருந்தது. பர்மாவின் கட்டமைப்பு பெருக பெருக பர்மா இந்தியர்கள் அந்த நாட்டு மக்களாக வாழ்ந்து வந்தனர்.

ஆன்டி-இண்டியன்

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் பர்மா இந்தியர்களுக்கு பெரு மதிப்பு இருந்த போதும் பர்மா நாட்டு மக்களுக்கு அப்படி இல்லை. வந்தேறிகள் தங்கள் வாழ்வை ஆக்கிரமித்ததாக சிலர் எண்ணினார்கள். பிரிட்டிஷ் அரசு முக்கிய அரசு பணிகளில் இந்தியர்கள் இருந்ததால் பர்மா விடுதலையாளர்கள் அவர்களை எதிரிகளாக எண்ணினார்கள். மேலும் வணிகத்தில் முக்கிய பங்காற்றியதால் விலைவாசி கட்டுபாடும் இவர்கள் கட்டுக்குள் இருந்தது.

1930 முதலாம் உலகப்போர் சமயங்களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்வு இந்தியர்கள் பக்கம் திரும்பியது. தொழில் செய்யும் இந்தியர்களுக்கு எதிராக ஆன்டி-இந்தியன் பேரணிகள் நிகழ்த்தப்பட்டன. ஒரு பக்கம் நிறவெறியும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பொதுவாக தென்னிந்தியரகளை காலா என்றே பர்மா மக்கள் அழைத்தனர். கருப்பு நிற மேனி மக்களிடம் வேறுபாட்டை தந்தது.

பர்மா தமிழர்கள் (7).jpg

இதனால் இந்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் முடிந்து திரும்புகையில் அவர்களுக்கு பதிலாக பணியமர்த்த பட்டிருந்த பர்மா தொழிலாளர்களுடன் தகராறு ஏற்பட்டது. கலவரத்தில் 200 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார்கள்.

மதத்தின் பெயரிலும் இந்திய ஆதிக்கத்தை அவர்கள் எதிர்த்தார்கள். இந்தியர்கள் வழியாக சென்ற புத்த, இந்து, இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் இன்னமும் பர்மா கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அந்த நேரத்தில் இந்து இஸ்லாம் மதத்தை எதிர்த்தும் பல இடங்களில் பேரணிகள் தொடர்ந்தன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போராட்டம் செய்பவர்களை சுட்டுத்தள்ள ஆங்கிலேய அரசு ஆணையிட்டது.

கலாச்சார தாக்கம்
இந்து வழிபாட்டு முறை பர்மாவின் கலாச்சாரத்தின் அங்கமாக தொன்று தொட்டு நீள்கிறது. ரங்கூன் பகுதிகளில் பல தென்னிந்திய வகையிலான கோவில்களை அங்காங்கே காண முடிகிறது. 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான தமிழ் கோவில் இன்றும் வழிபாடு சமயத்தவரின் பகுதியாக இருக்கிறது.

வருடந்தோறும் திருவிழாக்களில் காவடி சுமப்பது, மயிலாட்டம், ஓயிலாட்டம் என களைகட்டும் கொண்டாங்களும் பஞ்சமில்லாமல் நடந்தவாறு உள்ளது. தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்கம் என பன்மொழி பேசுபவர் அங்கமாயினும் தமிழ் மொழி வெகுகாலம் நீண்டு வந்திருக்கிறது. ஆனால் இன்றைய தமிழ் மக்கள் தமிழை விட பர்மா மொழியை அதிகம் பயன்படுத்த வேண்டிருக்கிறது.
பர்மா தமிழர்கள் கோவில்(8).jpg

20 ஆம் நூற்றாண்டு குழுந்தைகள் தமிழ் பேசுவதில்லை, இருப்பினும் தங்கள் வேர் தேடி தமிழ் மரபை கடினபட்டு கடைப் படிக்கின்றனர். முகசாயல், வழிபாட்டு முறை, சேலை, கைலி போன்ற ஆடை அணிகலன்கள் தமிழரின் பறையை ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

உணவு முறைகளிலும் இந்திய உணவுகள் பர்மா மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. சாதம், ரொட்டி முதல் பிரியாணி வரை பர்மா உணவு சந்தையில் மணக்கிறது. நில உடமைகளை இழந்த பல வியாபாரிகள் தங்கள் செல்வாக்கை மீண்டும் பெற முயற்சி செய்து வருகிறார்கள். பிற தொழில்களில் தாமே முன்னேறி பேரு நிலையை அடையும் சிலரும் தவிர்க்க முடியாதவர்களாக இருந்த வண்ணம் உள்ளனர்.

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர் பல நாடுகளின் வரலாற்றை மாற்றி எழுதியது என்று சொன்னால் அதற்கு மாற்று கருத்தே இருப்பதில்லை, அது பர்மாவுக்கும் விதிவிலக்கல்ல.1940 ஆம் ஆண்டு ஜப்பான் தெற்காசிய நாடுகள் ஒவ்வொன்றாக தன் வசம் கொண்டு வந்தது. வியட்நாம், தாய்லாந்து என விதிமுறைகள் தவிர்த்து அனைத்து நாடுகளையும் தன் கட்டுபாடுக்குள் கொண்டுவந்தது.

தமிழர்கள் (3)

இந்திய எல்லையை நெருங்கிய போது ஆங்கிலேய அரசுக்கும் ஜப்பான் படைகளுக்கு போர் மூண்டது. இதில் நேதாஜியின் ஆசாத் ராணுவ படையும் போரிட்டதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நேதாஜி விருப்பத்தின் பெயரில் இந்தியாவின் நரக சிறைச்சாலையாக கருதப்பட்ட அந்தமான் சிறைச்சாலை ஜப்பான் படையால் கைப்பற்றப்பட்டிருந்தது. ரத்த வரலாறு படிந்த அந்தமான் சிறை பற்றி அறிய இங்கே கிளிக்கவும்

போரில் பாதிப்புகளை பர்மாவும் சுமந்து கொள்ள வேண்டிருந்தது. அன்றைய ரங்கூனில் பாதி மக்கள் இந்தியர்களாக இருந்தனர். 1942 ஆம் ஆண்டு பர்மா ஜப்பான் வசம் சென்றது. இதன் பயனாக பல லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. பர்மாவின் அடர் காடுகள் வழி அவர்கள் அசாம் பகுதிக்கு நடந்தே கடந்தார்கள். உயிராகவும் பிணமாகவும் பலர். உலகப்போர் முடிவுக்கு பின்னர் சிலர் திரும்பி வந்தார்கள்.

ஆனால் 1948 இந்திய பர்மா நாடுகளை விட்டு பிரிட்டிஷ் அரசு முழுமையாக வெளியேறிய பின்னர் இந்தியர்களுக்கான மதிப்பு குறைய தொடங்கியது. அரசு துறைகளில் அவர்களின் ஆதிக்க முறை மாறியது. எனினும் பல தலைமுறைகளாக பர்மாவின் மைந்தர்களாக இந்தியர்கள் மாறிவிட்டிருந்தனர், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 16% இந்தியர்களாக இருந்தனர்.

தேசத்தின் விதியை மாற்றி எழுதிய ஆண்டான 1962 இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி பர்மாவை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது. முன்னுரையில் சொன்னது போல இந்தியர்களின் முழு உரிமைகளும் பறிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர். பர்மா சோஷியலிசம் என்ற பெயரில் இந்தியரின் சொத்துகள் அரசுடையக்கப் பட்டு அவர்களின் வேலை, நிலங்கள், தங்கம் என எல்லாம் கைப்பற்ற பட்டது.

தமிழர்கள் (6)

உரிமைகள் இழந்தும் நகருக்கு அருகில்லாத பல இந்தியர்கள் அங்கேயே தங்கி விட்டார்கள். ஆனால் மூன்று லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் நாடு திரும்பினர். அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் தாம். அன்றைய தமிழக அரசு அவர்களுக்கு பர்மா பஜார் என்ற பகுதியை உருவாக்கி தந்தது. எண்ணற்றோர் தங்கள் உடமைகளுக்காகவும் உறவுகளை தேடி வெற்று காகிதமாக தவித்தனர்.

இன்று மியான்மரில் நிலை சற்று ஆறுதல் தரும் வகையிலேயே இருக்கிறது. 1980 ஆம் ஆண்டு பர்மா சட்டப்படி இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு நாட்டுரிமம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பூர்விகமாக தங்கள் வாழ்வியலை பர்மாவோடு இணைத்து கொண்டு இத்தனை வருடங்களில் கிட்டதட்ட 10 லட்சம் தமிழர்கள்(2%) மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை வேரோடு இணைந்த பூமியை அணைத்தவாறே வாழ்ந்து கொண்டிருக்கினர்.

Related posts

அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு

Seyon

சீனாவிலும் வணங்கப்படும் முருகன் – வரலாற்று ஆதாரங்களுடன்

Paradox

கல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு

Paradox

Leave a Comment