Category : Education
புயல் எப்படி உருவாகிறது?
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி புயலாக கரையை கடக்கும்..கடலில் நிலைகொண்ட தாழ்வுபுகுதியால் லேசான முதல் மிக கனமழை இருக்கும்..இப்படியெல்லாம் செய்திகள் பல கேட்டு இருப்போம். இதுக்கெல்லாம் என்ன காரணம்? புயல் எப்படி உருவாகுது? காரணம் என்ன, புயல் எச்சரிக்கை கூண்டின் நோக்கம் என்ன, காற்றுக்கும் மழைக்கும் என்ன சம்மந்தம்? இதல்லாம் எப்படி நடக்குது தெரியுமா..வாங்க......
இவர் பிறந்தநாளே இஞ்சினியர்ஸ் தினமாக கொண்டாட்டப்படுகிறது
பாரத ரத்னா விருது பெற்ற இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரான மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா(Sir MV) அவர்களின் பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில் செப்டம்பர் 15 ஆம் நாளை தேசிய பொறியாளர் தினமாக இந்தியா அனுசரித்து வருகிறது. விசுவேசுவரய்யா(Visvesvaraya) கர்நாடகத்தில் பிறந்தவர். கர்நாடக பகுதிகளான மைசூர், ஐதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களுக்கு இவர் ஆற்றிய தொண்டு ஏராளம். அதனாலே பொறியாளர்கள் தினம் கர்நாடகா மாநிலத்தின் அரசு விடுமுறை நாளாகும். அந்த காலத்தில் ஆசியாவின்......
குரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்
நமது புவியில் எண்ணற்ற உயிரனங்கள் வாழ்கின்றன, ஆனால் அவை யாதுமே மனிதன் அளவிற்கு அறிவாற்றல் கொண்டு புவியை கட்டுபடுத்தும் வல்லமையை கொண்டிருக்க வில்லை. மீன்களும் மிருகங்களும் தன் கானக வாழ்வை கடைபிடித்த போதும் மனித இனம் பிரபஞ்ச தூரத்தை கணக்கிட்டு கொண்டிருக்கிறது. பூமியில் வேறு எந்த பிராணியும் மனிதனை போல சிந்தித்து இருப்பிடங்களை அமைத்து அதற்கேறப் தன் சூழலை தகவமைத்து கொண்டிருக்க முடியாது. பரிணாம வரிசை பட்டியலில் உச்சத்தை தொட்டிருக்கும்......
சர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு
கடல் ஏன் நீலமாக இருக்கிறது? பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா? கப்பல் பயணத்தில் எல்லைகளற்ற நீல பிரமாண்டத்தை கவனித்த போது சி.வி.ராமனுக்கும் இந்த வினா எழுந்தது. சர் சி வி ராமன் தமிழ்நாட்டின் திருச்சிக்கு அருகே இருக்கும் திருவானைக்காவலில் பிறந்த செல்வம். இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே உயர் கல்வி பயின்று இந்திய நாளிதழில்......
ஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி
1970 ஆம் ஆண்டு டெக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. அமைதிக்கான அணு ஆராய்ச்சி என அதற்கு வேடிக்கையாக பெயரிட்டனர். அமெரிக்க, ரஷ்யா வரிசையில் உலகில் ஆறாவது அணு ஆயுத வல்லமை பொருந்திய நாடாக இந்தியா அன்று உருவெடுத்தது மட்டுமல்லாமல் வல்லரசு நாடுகளுக்கு இணையான சக்தியாகத் தன்னை அது நிரூபித்தது. ராணுவப் பயன்பாடாக இல்லாமல் ஆக்க ஆற்றலாகவும் இந்தியாவில் எண்ணற்ற......
Featured பூமியின் ஆறாவது அழிவு நெருங்கிவிட்டது
பூமி இதுவரை ஐந்து மிகப் பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறது. கடைசியாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பேரிடர் டைனோசர் இனத்தின் தடத்தை அழித்தது. கடந்த தலைமுறையிலேயே இதை பற்றி தெரிவித்த அறிவியலாளர்கள் தற்போது ஆறாவது அழிவு (Sixth Extinction) நாம் நினைப்பதை விட வேகமாக நிகழந்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளனர். இயல்புக்கு மாறான விலங்கினங்களின் அதிகப்படியான அழிவு சரிவிகிதம் மற்றும் புவியியல் மாற்றங்கள் அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளன. ஏற்கனவே பல்வேறு......
ஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்
ரோபோக்கள் உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக மாறிவருகின்ற யுகம் நம் கண்ணேதிரே நடந்துக் கொண்டிருக்கிறது. இது டெர்மினேட்டர் படத்தில் வருவது போலவோ, எந்திரன் சிட்டி போன்றோ அழிக்கும் ஆற்றலாக இல்லாமல் ஒரு ஆக்க புரட்சி போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய கணக்கெடுப்பின் படி உலக தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாக தொழிற்நுட்ப திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை(Robots) பயன்படுத்த தொடங்கிவிட்டன என தெரிவிக்கிறது.......
மனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்?
உங்களை சுற்றி இருப்பவர்களை கவனியுங்கள், ஏதாவது வித்தியாசமாக காண முடிகிறதா? கண்கள், அழகிய முகங்கள் விட்டு அவர்களது முடியை பாருங்கள் அல்லது அதன் இல்லாமையை. இது அவ்வளவு வித்தியாசமான ஒன்றாக தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் நாம் இயல்பாகவே ஓரளவிற்கு ரோமத்தை தேகத்தில் கொண்டுள்ளோம். ஆனால் மீதமுள்ள பாலூட்டிகள் மற்றும் நமக்கு நெருக்கமான உறவினர்களான மனிதக் குரங்குகளை ஒப்பிடும் போது, மனிதன் மட்டுமே ரோமங்கள் குறைவாக உள்ள பெரிய உடலுள்ள பாலூட்டி......