வெட்டி வேருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. குருவேர், உசிர், விழல் வேர், வீரணம், இருவேலி மற்றும் எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும், அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடியது.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும்.இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு......
சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். அறிகுறிகள் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம்......
இந்தியர்களாகிய நாம் என்றுமே மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தின் பால் கவர்ந்த வண்ணமே உள்ளோம். நம் சந்தையை ஆக்கிரமித்துள்ள ஐரோப்பிய அமெரிக்க தினசரிகள் உடை முதல் உணவு வரை நின்று விடாமல் நம் கழிப்பறையிலும் நுழைந்திருக்கிறது. மனித இனம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டது. மனித நடைமுறைகள், ஆடை நாகரீகம், விவசாயம், போக்குவரத்து மற்றும் பல பரிணாமங்கள் வந்த போதும் காலை கடனை கழிக்கும் வழக்கம் இன்னும் மாறாமலே உள்ளது. சொல்லப்போனால்......
“தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால் பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர் – பனையனைத்து என்றும் செயினும் இலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு” –நாலடியார். 344தானியங்கள் உண்பது உடலுக்கு ஏற்றது, நன்மை பயக்கும் என்றறிந்தும் நம்மால் அதனைச் சரிவிகித உணவாக உண்ண முடியவில்லை. தானியங்கள் என்றாலே வயதானவர்கள் நோயுற்றவர்கள்தான் சாப்பிடுவது என ஒரு தவறுதலான மனப்போக்கு இந்தக் கால இளைஞர்களிடம் நிறைந்து உள்ளது. சென்ற தலைமுறை வரை கம்பு, கேழ்வரகு எல்லாம்......