Category : History
போய் வரவா : பரங்கிமலை பாதை
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்த போது மதில் தாண்டி சாலையை நிரப்பி செல்லும் வாகனங்களை கவனித்தவாறு நின்றிருந்தேன். சாலையின் மறுபுறம் விமான நிலையத்தை மறைத்தவாறு மலை ஒன்று வீற்றிருந்தது. அதன் அடியில் இராணுவத்திற்கு சொந்தமான மைதானம் அழகிய மரங்களை தூண்களாக அமைத்து பசும்போர்வையை தரையில் போர்த்தப்பட்டது போல காட்சியளித்தது. மலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தைகள் விளையாடுவது போல அவ்வப்போது மலை மேகங்களுக்கு இடையே சில......
உண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு
நண்பன் ஒருவன் யூடியூப் சேனல் துவங்க இருப்பதாகவும் தான் அதற்கு உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டான். வேடிக்கையாக இருந்தாலும், எந்த விதமான பதிவுகளை போட போகிறாய் என்றேன். உணவை தேடி அறிமுகபடுத்துவது, கிராம சமையல் என அவன் சொன்ன பட்டியல் ருசிகரமாக தான் இருந்தது. சரி சேனலுக்கு பெயர் என்ன? உண்டக்கட்டி என சொன்னான்.🙄 அவனை ஏளனம் செய்வது போல ஒரு பார்வை பார்த்தேன். உடனே சற்று கோபித்துக் கொண்டு......
கோலார் தங்க வயல் புதைந்த வரலாறு
இன்று இருந்த அடையாளமே அற்று புதைந்து கிடைக்கும் கோலார் தங்க வயல் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச்சுரங்கமாக விளங்கியது. கிட்டதட்ட அந்த காலத்தில் மொத்த இந்தியாவின் தங்க உற்பத்தியும் இங்கிருந்து தான் கிடைக்கப்பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் கடன் கேட்டார் அன்றைய பிரதமர் நேரு. அது மறுக்கப்பட்ட போது எங்களிடம் கே.ஜி.எப் இருக்கிறது என சுட்டிக் காட்டிய பின்னரே கடன் கிடைத்தது......
விநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு
ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து வணங்குது வரைமுறை. தமிழகத்தில் கிட்டதட்ட எல்லா கோவில்களிலும் ஒரு பிள்ளையாரை நிறுவி வழிபாடுகள் செய்து 3 முதல் 10 தினங்களில் ஆட்டம் பாட்டத்தோடு அருகாமையில் இருக்கும் நீர் நிலையில் சிலையை சுமந்து சென்று கரைத்து......
ஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது? வரலாறும் பின்னணியும்
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகுஅளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு”- சிலப்பதிகாரம் Origin சந்திரன், சூரியன், மழை, தீ என இயற்கையை வணங்குவதே தமிழர் பண்பாடாக பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. நமது கலாச்சாரம் நீண்டு வாழ்ந்த ஓர் உயரினத்தின் எச்சம். இந்திய துணைக்கண்டத்தில் இருவகையான நாட்காட்டிகள் வழகத்தில் உள்ளன. சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகள்.......
பர்மா தமிழர்களுக்கு என்ன நடந்தது
Feature Image Credit : Blaine Harrington வரலாற்று காலம் முதலே இன ஒடுக்கப்படுதல் விளைவாக பல்வேறு துயரமிக்க இடப்பெயர்வுகளை இந்திய தேசம் சந்திந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, வங்காளதேச விடுதலை, ஈழப்போர் என அவலமிக்க ரத்தக் கறைகள் படிந்த இந்த தேசத்தின் பன்முகத்தன்மையை அவ்வப்போது நினைப்படுத்த தவறுவதில்லை. 1962 ஆம் ஆண்டு பர்மாவில்(இன்றைய மியான்மர்) ராணுவ பிரகனபடுத்தலின் போதும் அங்கிருந்த தமிழர்கள் தங்கள் உறவையும் உடைமைகளையும் இழந்து வெற்று உயிரோடு......
தமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்
மகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர். ஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து......
அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு
இரண்டாம் உலகப்போர் சமயம். 1942 மார்ச் மாதம் ஜப்பானிய போர் விமானங்கள் அந்தமானின் வானில் வட்டமிட்டன, போர்க் கப்பல்கள் தீவை சுற்றி வளைத்தன. அடுத்த சில தினங்களில் ஜப்பானிய படைகள் அன்றைய பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தமான் தீவை கைப்பற்றியது. பின்னர் அந்தமான் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திடம்(INA) ஒப்படைக்கப்பட்டது. ஜப்பான் அரசுடன் நட்பு கொண்டிருந்த போஸ் 1944 ல் அந்தமான் வந்து மூவர்ண கொடியேற்றி பேசுகையில் “இந்திய......
அழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்
ஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல் சான்றுகளிலுமே மேன்மையடைகிறது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட அகழ்வாய்வுகள் நம் பராம்பரியத்தின் வேரை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. தற்போது அதனை மிஞ்சும் தொன்மை ஆதாரத்தின் எச்சமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது அழகன்குளம். சங்க காலத்தில் பாண்டியர்களின் முக்கிய வணிக தலமாக இருந்துவந்துள்ள அழகன்குளம் ராமநாதபுரத்திற்கு அருகே வங்க கடலில் வைகை நதி கலக்கும் பகுதியில்......
செம்பவளராணி – முதல் கொரிய அரசி
கொரிய நாட்டின் கிம் மக்கள் தங்கள் வம்சத்தின் தாயாக கருதும் ஒரு பெண்ணரசியை வணங்க இந்தியா நோக்கிய ஒரு யாத்திரையை வருடா வருடம் மேற்கொள்கின்றனர். இதற்கு காரணமாக இருப்பது கொரியாவின் பண்டைய கயா பேரரசின் முதல் ராணி இந்தியாவில் இருந்தே அங்கு குடியேறினார் என அவர்களின் வரலாற்று குறிப்புகள் கூறுவதே. ஹியோ ஹியாங் ஓக் (Heo Hwang Ok) என்ற பெயர் கொண்ட அவர்தான் கொரியா நாட்டு வரலாற்றில் முதல் அரசியும்......