Category : Tech
ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியர்வகள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்தவாறே உள்ளனர். அவ்வாறு சர்ச்சையான கருத்துக்களோடு இருபது ஆண்டுகளாக மக்களை குழப்பத்தில் வைத்துள்ள ஒருவரைபற்றியே இந்த கட்டுரை. 1996 ஆம் ஆண்டு ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி மொத்த செய்தி ஊடகத்தையும் ஆச்சர்யப்படுத்தினார். அவரது அறிவிப்பு தமிழகம் மட்டுமல்லாது உலக நாடுகளையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.அன்றைக்கு பெட்ரோல் விலை 35 ரூ (உங்களில் யாரேனும்......
அமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்
நாம் தினசரி வாழ்வில் சர்வமாக பயன்படுத்தும் கேரிபேக் எத்தனை பயங்கரமான விளைவுகளை உண்டாக்க வல்லது என்பது பற்றியான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சொற்பமாகவே உள்ளது. உலகில் தயாரிக்கப்படும் 50% நெகிழி பைகள் பெருமளவில் நம்மால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன. ஆனால் அவை மண்ணில் மக்கி அழியவோ 500-1000 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவில் மட்டுமே 500 கோடி, உலகளவில் 500000 கோடி எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் பைகள் கடந்த வருடம் உபயோகபடுத்த......
இனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்
ரோபோக்களின் அசூரவளர்ச்சி கலாச்சார நவீனமாகவும் அறிவுசார் அதிநுட்பமாகவும் பெரும் மாற்றத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கனவில் பெண்களுடன் வாழ்ந்து நினைவில் தனிமையில் வாழும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தொடர்பில்லாத இவ்விரு துருவங்களை இணைக்கிறது செக்ஸ் ரோபோக்கள்.2010 ரோபோ கண்காட்சியில் ராக்சி என்ற செக்ஸ் ரோபோ அறிமுகபடுத்தபட்டது. ஆயினும் இதுவரை முழுமையடைந்த சந்தை ரோபோவாக எதுவும் வெளிவரவில்லை, அதற்கான சாத்திய சுழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அறிவியல் பரிணமித்த இந்த......
தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை
மதுரையில் இருந்து 90 கி.மீ தொலைவில் ராமநாதாபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி என்ற இடத்தில் 4550 கோடி செலவில் மிகப்பெரிய அளவிலான சூரிய மின்சக்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. குறிபிட்ட ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் கொண்ட இந்த நிலையம், 648 மெகா வாட் அளவிற்கு மின்சாரத்தை உருவாக்க வல்லது,இது 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை தரக்கூடும். இது உலகின் விலையுயர்ந்த ‘ஒற்றை இடத்தில்......
ஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்
ரோபோக்கள் உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக மாறிவருகின்ற யுகம் நம் கண்ணேதிரே நடந்துக் கொண்டிருக்கிறது. இது டெர்மினேட்டர் படத்தில் வருவது போலவோ, எந்திரன் சிட்டி போன்றோ அழிக்கும் ஆற்றலாக இல்லாமல் ஒரு ஆக்க புரட்சி போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய கணக்கெடுப்பின் படி உலக தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாக தொழிற்நுட்ப திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை(Robots) பயன்படுத்த தொடங்கிவிட்டன என தெரிவிக்கிறது.......
பறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10
ஏர் லேண்டர் 10 – பகுதி விமானம், பகுதி ஆகாய கப்பல், பகுதி ஹெலிகாப்டர் அடங்கிய உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான பறக்கும் வானுார்தி. இங்கிலாந்தின் ஹைப்ரிட் ஏர் வெஹிக்கில்ஸ்(Hybrid Air Vehicles) நிறுவனம் தயாரித்திருக்கும் ஏர் லேண்டர்-10 ஜெட் ரக பயணிகள் விமானத்தைவிட சுமார் 50 அடி அதிக நீளம் கொண்டது. மேலும் நான்கு டீசல் என்ஜின்களை கொண்டது. இப்போதிருக்கும் பெரிய பயணிகள் விமானத்தை விட 60 அடி நீளமானது. 10......
வியக்க வைக்கும் சீனாவின் அதிநவீன பேருந்து
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சாலையின் மேற்புறம் பாதுகாப்பாக பயணிக்கும் திட்டம் ஒன்று 2010 ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் யாருமே அது சாத்தியமாகும் என நம்பவில்லை. சொல்லப்போனால் மாறி மாறி கிண்டல் அடித்தனர். அதன் வடிவமைப்பாளர்கள் கூட அதற்கான செயல் மாதிரியை இந்த வருடத்தின் துவக்கத்தில் தான் ஆரம்பித்தனர். பெய்ஜிங்கில் சர்வதேச உயர் தொழில்நுட்ப எஸ்போ நிகழ்ச்சியில் நவீன இதன் பேருந்து மாதிரி அனைவர் முன்னிலையிலும் காட்சிபடுத்தப்பட்டது.......
தித்திக்கும் ஆண்ட்ராய்டு பதிப்புகள் – சுவாரஸ்ய தகவல்கள்
இன்னும் நம்மில் பலர் மார்ஷ்மல்லோ(Marshmallow) பதிப்பையே உபயோப்படுத்த துவங்கவில்லை, ஆனால் கூகுளோ தனது அடுத்த பதிப்பிற்கான பெயரை நேற்று தேர்ந்தெடுத்துவிட்டது. பொதுவாக ஆண்ட்ராய்டு பதிப்பின் பெயர்களை கூகுள் நிறுவனமே தேர்ந்தெடுக்கும். ஆங்கில அகர வரிசையில் பெயரிடப்பட்டு வரும் இதன் பதிப்புகளில் புதிய வகையான N பதிப்பிற்கு மக்களிடமே கருத்துக்கணிப்பு நடந்தது. Introducing #AndroidNougat. Thank you, world, for all your sweet name ideas! #AndroidNRevealpic.twitter.com/7lIfDBwyBE — Android......
இந்திய இரயில்வேயின் தண்ணீர் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம்
இந்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின்(Swachh Bharat) பங்களிப்பாக இந்திய இரயில்வே மறுசுழற்சி இயந்திரம் ஒன்றை மும்பை புறநகர் ரயில் நிலையங்களில்(Western line) நிறுவயுள்ளது. முதற்கட்டமாக சர்ச்கேட் புறநகர் இரயில் நிலையத்தில் இதனை தொடங்கியுள்ளது, இதன் மூலம் நாம் குடித்துவிட்டு தூக்கி எரியும் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய இயலும், இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்களால் உண்டாகும் குப்பைகளும் குறையும். பார்ப்பதற்கு குளிர்சாதன பெட்டியை விட பெரிதாக தோன்றும் இந்த......
இந்தியாவின் முதல் சூரிய ஒளி சோலார் ரயில்
இந்திய ரயில்வேயின் முதல் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ரயில் இராஜஸ்தானின் ஜோத்பூரில் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.பயணிகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்விற்கு பின் சில தினங்களில் வெள்ளோட்டம் துவங்கப்படும்.இந்த பயணிகள் ரயிலின் பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்திய ரயில்வேயின் மாற்று சக்தி மூலத்திற்கான பணியின் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது இத்திட்டம். ரயில் வழக்கமான டீசல் என்ஜின்களாலே இழுக்கப்பட்டும் அதே நேரத்தில் உள்கட்டமைப்புக்கான மின்சார தேவைகளான விளக்குகள்,விசிறிகள் மற்றும்......