போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சாலையின் மேற்புறம் பாதுகாப்பாக பயணிக்கும் திட்டம் ஒன்று 2010 ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் யாருமே அது சாத்தியமாகும் என நம்பவில்லை. சொல்லப்போனால் மாறி மாறி கிண்டல் அடித்தனர். அதன் வடிவமைப்பாளர்கள் கூட அதற்கான செயல் மாதிரியை இந்த வருடத்தின் துவக்கத்தில் தான் ஆரம்பித்தனர்.
பெய்ஜிங்கில் சர்வதேச உயர் தொழில்நுட்ப எஸ்போ நிகழ்ச்சியில் நவீன இதன் பேருந்து மாதிரி அனைவர் முன்னிலையிலும் காட்சிபடுத்தப்பட்டது.
அப்போதும் கூட சீன மக்களே இது சாத்தியப்படும் என நம்பவில்லை. சந்தேகத்திற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக் மாதிரி பேருந்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் வீதியில் சோதனை ஓட்டத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
இந்த உயர்ந்த பயணப் பேருந்தால்(Transit Elevated Bus) ஒரு பெட்டிக்கு 400 பேர் வீதம் ஒரே நேரத்தில் 1200 பயணிகளை சுமந்து செல்ல முடியும் மற்றும் அதிகபட்சமாக
60 கிமீ வேகத்தில் பயணிக்கவும் முடியும்.
15 அடி உயரமும், 21 மீட்டர் நீளமும் 7 மீட்டருக்கும் மேல் அகலமாக விரிந்திருக்கும்(stradding bus) இந்த பெரும் பேருந்தின் அடிப்பாக இடைவெளி வழியாக மற்ற வாகனங்கள் புகுந்து செல்ல முடியும்.
“The biggest advantage is that the bus will save lots of road space,” Song Youzhou, the project’s chief engineer
பல பெட்டிகளை இணைத்து கொள்ளுமாறு வசதி செய்யப்பட்டுள்ள இது வழக்கமான 40 பேருந்துகளுக்கு பதிலாக இயங்கும் தன்மையுள்ளது, 800 டன் எரிபொருள் சேமிக்கப்படும். மேலும் இது வானில் ஊர்ந்து செல்வதால் பேரளவிலான சாலை இடத்தையும் மிச்சப்படுத்த இயலும்.
சுமார் 135 கோடி மக்களுள்ள சீனா 50 க்கு மேற்பட்ட போக்குவரத்து லேன்கள் உட்பட மிகவும் மாசுப்பட்ட சாலைகளை உள்ள இடமாக உலகத்தால் அங்கீரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான அடிப்படை காரணம் அமெரிக்காவை விட போக்குவத்து நெரிசல் மிகுந்த நாடாக மாறியுள்ள சீனாவின் சாலைகளை காப்பாற்றுவதே.
நெரிசல், மாசுபாடு, இடப்பற்றாக்குறை, நவீனம், வேகமாக செல்வதால் நேர விரயம் போன்றவற்றை சேமிப்பதால் இது ஒரு சிறந்த திட்டம் என்பதை யாவராலும் மறுக்க முடியாது,
“It’s a cool concept and I think thinking outside the box like this is a good idea,” David Clarke, a civil engineer at the University of Tennessee
அதே நேரத்தில் உலகத்தினரால் வியந்து புறப்படும் அளவுக்கு இது நிறைவேறுமா என்பதை அதன் குறைகளை வைத்தே மதிப்பிட முடியும்.
சிந்திக்க வேண்டியவை:
-
நகர சாலையில் ஒரு வாகனத்திற்கு அனுமத்திக்கப்பட்ட உயரம் 4.5 அல்லது 4.2 மீட்டர்கள்(16 அடி). ஆனால் இப்பேருந்துக்கும் தரைக்கும் உள்ள இடைவெளி வெறும் 2.1 மீட்டர்கள் தான்(7 அடி), லாரிகள் செல்வதை நினைத்து கூட பார்க்க முடியாது.
-
-
இது டீசலால் ஓடும் பேருந்து அல்ல. முதலில் சூரிய ஒளி ஆற்றலை உபயோகப்படுத்துவதாக இருந்தது, ஆனால் இந்த வேகத்தில் செல்ல வேண்டுமானால் மின்சாரத்தில் இயங்குவதே சிறந்த வழி. அதாவது ஆங்காங்கே சார்ஜ் போட்டுக்கொண்டு செல்லவேண்டி இருக்கும்.
-
அந்த நாட்டு மீடியாக்கள் இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் முழுமையான அரசு அதிகாரம் இதற்கு பெறவில்லை என விமர்சித்துள்ளன.
-
இரு வழி சாலைகளில் அருகிலேயே இருப்பதால் சிறிய தவறு கூட விபத்தை உண்டாக்கலாம், ஓடிக்கொண்டிருக்கும்(!) பேருந்தில் மோதினால் நிலைமையை யோசித்து பாருங்கள்.
-
இடையில் சார்ஜ் தீர்ந்து நின்றால் இறங்கு (குதிக்க) முடியாது. ஏனெனில் 4 மீட்டர் உயரத்தில் இருந்து குதிப்பது தவறான முடிவாகும்.பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றி ஆலேசிக்க வேண்டும்.
-
“It’s like going under an underpass, except it’s a moving underpass.”
-
இது ஒரு பாதாள திட்டத்தை விட 5 மடங்கு விலை குறைவானது தான், ஆனால் கிட்டத்தட்ட 50 லட்ச செலவில் 10 மாசுபடுத்தாத பேருந்துகளை உருவாக்க இயலும்.
-
அதிலும் சீனாவின் ஓட்டுனர்களை பற்றி நெட்டிசன்களே தாறுமாறாக கலாய்த்துள்ளனர், இந்தியாவுக்கு வருவது பற்றி யோசிக்கவே தேவையில்லை.
-
மிக முக்கியாக ராட்சஸனாக விரிந்திருக்கும் இது பேருந்தே அல்ல. இது மதராஸபட்டினத்தில் வருவது போல தடத்தில் செல்கிறது , இது ஒரு இரயில்.