Image default
Culture

சீனாவிலும் வணங்கப்படும் முருகன் – வரலாற்று ஆதாரங்களுடன்

எல்லோரும் தமிழ் கடவுள் என்றால் முதலில் சொல்வது முருகனைதான்.ஒருபுறம் தமிழ் கடவுள் மற்றொரு புறம் இந்து கடவுள் என முருகனுக்கு புகழ் ஓங்கி நிற்கிறது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் முருகனுக்கு தனி செல்வாக்கு உண்டு.இதில் என்ன ஆச்சரியம் என்றால் எல்லையில் சண்டையிடும் சீனாவில் கூட நமது முருகனது செல்வாக்கு உள்ளது.

Wei Tuo Pu Sa இது சீன மொழியில் முருகனது பெயர். சீனாவில் மட்டும் அல்ல புத்த மதம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இந்த பெயரை நீங்கள் கேட்க முடியும். அவர்களும் இவரை அவர்கள் முப்பாட்டன் என்றுதான் சொல்கிறார்கள்.

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அல்லது இந்தியாவில் உள்ள பல கோவில்களிலும் விநாயகர் மற்றும் முருகனது உருவ சிலைகளை நம்மால் கான முடியும். அதே போலதான் சீனாவிலும் எந்த ஒரு புத்த மத கோவிலுக்கு சென்றாலும் அங்கு முருகனின் சிலைகளை பார்க்கலாம்.

தமிழகத்தில் இருந்து ஒரு மதம் எப்படி சீனாவிற்கு சென்றது என்பது அனைவருக்கும் தோன்றும் ஒரு சிந்தனைதான். முருகன் ஒரு சாதாரண மனிதரும் இல்லை அரச குலத்தை சார்ந்தவராகவும் இல்லை. ஒரு போர் கடவுளாகதான் முருகனை அனைவரும் வணங்குகிறோம்.

Weituo,_Yonghegong_Lamsery,_Beijing-tamil

தமிழகத்தை போன்றே சீனாவிலும் முருகனை இன்றும் வணங்குகின்றனர். வெய் டூவோ பு சா என்றால் சீன மொழியில் தர்மத்தை நிலைநாட்டுபவர் என்று பொருள்.

சீனாவில் புத்த மதம் தோன்றி இன்று வரை கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழர்களின் வரலாறு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தோன்றியது என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.தமிழகத்தில் இருந்து சீனாவிற்கு சென்ற போதி தர்மரை இன்றளவும் சீனர்கள் போற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு தமிழர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் மேன்மையை கொண்டவர்களாக வாழ்ந்துள்ளார்கள்.

தமிழர்கள் பொதுவாக எங்கே சென்றாலும் சென்ற இடத்திலும் கடவுள் வழிபாட்டை அவர்கள் நிறுத்தவில்லை. உதாரணமாக போகர் ஒரு சிறந்த விஞ்ஞானியுள் ஒருவர். இங்கிருந்து சென்று சீனாவில் முருகனை வழிபட்டு வந்துள்ளார். இதனை கண்ட அங்குள்ள மக்கள் ஏன் முருகனை வழி படுகின்றாய் என வினவி உள்ளனர்.

முருகனின் பெருமைகள் எடுத்துரைக்கபட்ட உடன் அவர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டு, அவர்களும் நாளடைவில் முருகனை வழிபட தொடர்கின்றனர். இதெல்லாம் சுமார் 2500,3000 ஆண்டுகளுக்கு முன்னரே புத்த மதம் உருவாவதற்கு முன்பாகவே wei tuo pu sa என்ற பெயரில் வழிபட்டு வந்துள்ளனர்.

Skanda Buddism tamil

ஒரு காலத்தில் சிவனுக்கு நிகராக வழிபடப்பட்ட கடவுள் முருகன் தான். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் முருகனை வழிபட்டால் அதில் நிச்சயம் நல்ல தீர்வு கிடைத்தே தீரும் என்பது நம்பிக்கை. கோவில்களின் கல்வெட்டுகள் கூறும் உண்மையும் இதையேதான் சொல்கிறது. தர்மத்தின் தலைவனாக கருதும் முருகனைபுத்த மதமும் ஏற்று கொள்கிறது. புத்த மதம் என்றால் தர்மம் மற்றும் அன்பு சேர்ந்த ஒன்றுதான்.

ஒரு புத்த மதத்தின் கதையில் புத்தர் இறக்கும் தருவாயில் முருகனிடம் நீங்கள் இதுவரை நிறைய நன்மைகள் செய்துள்ளீர்கள். நான் ஒரு நல்ல மதத்தையும் அன்பையும் மக்களுக்கு அளிக்க நினைக்கிறேன். இதற்கு உங்களால் உதவ இயலுமா என்று முருகனிடம் புத்தர் கோரிக்கை வைப்பதாக அந்த கதை கூறுகிறது.

அதற்கு முருகனும் மக்களுக்கு என்றெல்லாம் துன்பம் வருகிறதோ அன்றெல்லாம் அவர்களுக்கு துனையாக இருப்பேன் என்றும் உறுதி மொழி கூறியதாக கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு புறம் இதிகாச கதைகளாக பார்க்கபட்டாலும் வரலாற்று கல்வெட்டுகளும் சில உண்மைகளை விளக்குகின்றது.

வரலாறுபடி பார்க்க போனால் பண்டைய தமிழர்களின் வாணிகமும் சரி அறிவியல் சிந்தனைகளும் சரி உலக அளவில் பெரியதாக பார்க்க பட்டது.அதில் முக்கியமான ஒன்று ஏற்றுமதி இறக்குமதி.அன்றைய வாணிகம் பண்ட மாற்று முறையை அதிகம் கொண்டது. அதிலும் முக்கியமாக தமிழர்களின் சீனா உடனான வர்த்தகம் அதீத கவனமும் பொருளாதாரத்தின் வளர்ச்சி என பெரிதாக பார்க்க பட்டது.

Chinese Murugan Tamil

சீனாவின் குவான்சோ என்ற கடலோர நகர் அன்றைய வர்த்தக நகரமாகவே இருந்துள்ளது. இங்கு விளையும் தினை வகையை கொடுத்து அங்கு விளையும் மளிகை பொருட்களை வாங்கி வர்த்தகம் புரிகின்றனர்.இருவருக்கும் இடையே மொழி பிரச்சினை இருந்ததால் ஒரு திட்டம் தீட்டினர். இதற்கு எளிய வழியாக தமிழர்களை அங்கயே வைத்துவிட்டு அவர்களோடு வர்த்தகம் செய்து கொள்வதாக முடிவெடுத்தனர்.

அந்த தமிழர்கள் அங்குள்ள சீன மொழியை கற்றுக் கொண்டு சீனர்கள் உடன் வர்த்தகம் செய்து கொள்கிறார்கள்.காலப்போக்கில் தமிழர்கள் அதிகமாக சீனாவில் குடிபெயர்ந்து விட்டனர்.

பிறகு தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கோவில் ஒன்றை கட்டுகின்றனர். தமிழர்கள் காலம் காலமாக வணங்கி வரும் முருகனையே அங்கும் வணங்குகின்றனர். இது சீனர்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் பரவ ஆரம்பித்தது. பிறகு அதை முருகன் கோவிலாக கட்டி முடித்தனர். இதற்கு ஆதரவு இருந்தாலும் இதே சமயத்தில் எதிர்ப்பும் இருக்கதான் செய்தது.

என்னதான் செய்தாலும் நீங்கள் வழிபடும் முறை வித்தியாசமான ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்கள். இதில் ஒரு கலவரம் ஏற்பட்டு அந்த கோவில் தரைமட்டமாகி விடுகிறது. சிறிது நாட்களில் அந்த நகரம் பக்கத்து நில மன்னர்களால் சூரையாடப்படுகிறது.

இதனால் பெரிதும் பாதிக்கபட்ட சீன மக்கள் கடவுள் குற்றம் என பயந்து மீண்டும் அதே இடத்தில் தமிழக மக்கள் உதவியின்றி கோவிலை கட்டி முடிக்கின்றனர். ஆனால் இந்த முறை முருகனின் உருவம் சீனர்களால் மாற்றப்பட்டு சீனர்களை போல உருவாகிறது.இருந்தாலும் மயில் வாகனத்தை மாற்றவில்லை. கையில் வேலுக்கு பதில் வேறொரு ஆயுதம் உள்ளது.

Wei Tuo pu sa கடவுளை அந்த மக்கள் ஏற்றுக் கொண்டு அனைத்து இடங்களிலும் பரபரப்புரை மேற்கொள்கின்றனர்.அனைத்து புத்த மத கோவில்களிலும் முருகனின் உருவம் இல்லாமல் இருக்காது.

Skanda combodia tamil
கம்போடியா

சீனாவோடு மட்டுமே இந்த தொடர்பு முடியவில்லை என்பதே ஆச்சர்யம். ஜப்பான், ஈரான், கம்போடியா, மலேசியா(மலைச்சிகர சிலையை பற்றி நான் சொல்ல தேவையில்லை), ஸ்ரீலாங்கா என பல தேசங்களில் தொடர்கிறது. அழிக்க முடியா தமிழர் ஆதாரத்தை அடுத்தடுத்த பதிவுகள் மேலும் காண்போம்.

நன்கு கவனித்து பாருங்கள்.தமிழனே என்றும் முன்னோடி.. எதிலும் முன்னோடி

References :

https://en.wikipedia.org/wiki/Skanda_(Buddhism)

https://www.wikiwand.com/en/Skanda_(Buddhism)

https://www.quora.com/What-are-the-ancient-Murugan-worships-across-the-world

http://murugan.org/research/china_skanda.htm

Related posts

சித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்

Ilavarasan

வியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம். மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம்.

Paradox

பர்மா தமிழர்களுக்கு என்ன நடந்தது

Seyon

Leave a Comment