Image default
Culture Featured Festivals

சித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்

மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே தெரியும் அது நம் கள்ளழகர் வைகையில் இறங்குவது தான் என்று.அந்தளவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமடைந்துள்ளது.முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை இதுவாகத்தான் இருக்கும்.

மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர். இப்பெருவிழாவின் முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் விழா நடைபெறுகிறது.

நிகழ்வுகள்

திருவிழாவின் முதல் நாள்  நிகழ்வு கொடியேற்றம் ஆகும். அன்று இரவு கற்பக விருட்சகம் மற்றும் சிம்ம வாகனத்தில் சுவாமி உலா வருகிறது. அடுத்த நாள் பூதவாகனம் மற்றும் அன்ன வாகனதிலும், மறுநாள் கைலாசபர்வதம் மற்றும் காமதேனு வாகனதிலும் வீதி உலா வரும். நான்காம் நாள் தங்கபல்லக்கிலும் ஐந்தாம் நாள் தங்க குதிரையிலும் எடுத்து செல்வார்கள்.

ஆறு மற்றும் ஏழாம் நாள் முறையே ரிஷப வாகனம், நந்தீஸ்வரர் வாகனம் மற்றும் யாழி வாகனத்திலும், எட்டாம் நாள் பட்டாபிசேகம் நடைபெறும். இரவு வெள்ளி சிம்மாசன வாகனம் சுவாமி உலா வருகிறது.திக்விஜயம் மீனாட்சி இமயமலை சென்று போர் புரிவதை கூறும் வகையில் நடைபெறுகிறது.அன்று இரவு இந்திரா விமான வாகனம்.

201401301517521201401301517528_l


மீனாட்சி திருக்கல்யாணம்

பத்தாம் நாள் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். அன்று இரவு யானை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கு வாகனம் சுவாமி உலா வருகிறது.

ther thruvizha

பதினொன்றாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது ஆயரகனக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரினை வீதியோரம் இழுப்பர்கள். முதல் தேரில் மீனாட்சி அம்மனும் அடுத்த தேரில் சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடையும் வருவார்கள்.

அழகர் அவதாரம் தரித்த விஷ்ணு தன் தங்கையான மீனாட்சி திருமணதிற்கு அழகர் கோவிலில் இருந்து மதுரை நகருக்கு புறப்படுகிறார்.கள்ளர்களிடமிருந்து சீர்வரிசையை காக்க நாட்டுக்கள்ளர் போல் கொண்டையிட்டு, கண்டாங்கி கட்டி, காதில் கடுக்கன் அணிந்து, கையில் வளரியுடன் தங்க பல்லக்கில் கிளம்பி வருவார் (அதனாலே அவர் கள்ளழகர்).

வாராரு வாராரு அழகர் வாராரு’ என்ற பாட்டு மதுரை அனைத்தும் ஒலிக்கும். அந்த பாடலின் இடையில் வரும் இசை அனைத்து மக்களையும் ஆட செய்யும். வரும் வழியில் ஒவ்வொரு மண்டபமும் மக்களுக்கு ஊண் அருளழித்து வருவார்.

Alagar

கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலை அட்டைகிறார். இரவு முழுவதும் அங்கு உள்ள அணைத்து மண்டபகளிலும் பக்தர்களுக்கு அருளளிப்பார் .

எதிர் சேவையின் போது அழகர் அணிய,திருச்செந்தூர் ஆண்டாள்(சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும்.

மதுரை வைகை நதிக்கரையை அடைந்தத அழகரிடம் தங்கள் தங்கை திருமணம் முடிந்துவிட்டதே இபொழுதான் வருகிறீர்கள் என கூடலழகர் பெருமாள் தெருவிக்கிறார். அதை கேட்ட அழகர் தான் கொண்டுவந்த சீர் வரிசைகளை கூடழகர் பெருமாளிடம் கொடுத்துவிட்டு வைகை நதியில் இறங்கிவிட்டு திரும்புகிறார்.


அழகர் ஆற்றில் இறங்குதல்:

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அமைவது, தண்ணீர் பீட்சுதல் நிகழ்வு. அழகரை வேண்டி பக்தர்கள் 15 to 20 நாட்கள் விரதம் இருந்து வேண்டுவார்கள். தான் வருவதற்க்குள் தன தங்கை திருமணம் செய்துகொண்டால் எனும் கோபத்தை தணிக்கவும், அழகர் மீது உள்ள தீட்டினை கழிக்கவும் தண்ணீர் பீச்சும் நிகழ்வு உள்ளதாக கூறப்படுகிறார்கள்.

alagar06

ராமராயர் மண்டகப்படியில் அழகரை எழுந்தருளச் செய்து அங்கு அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடன் நிறைவேற்றப்படுகிறது. தண்ணீர் பிட்சுபவர்கள் ஒவ்வெரு பகுதியல் இருந்தும் கூட்டமாகவே வருவார்கள்.அதில் தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்களுக்கு ஆடுவார்கள்.அவற்றை காண மட்டுமே திருவிழா போக ஆசை ஏற்படும்.பின் அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருவார். அங்கு விடிய விடிய மக்கள் வாண வேடிக்கையுடன் அழகரை தரிசிக்கின்றனர்.

மறுநாள் காலையில் அழகரை வண்டியூரில் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், நாரைக்கு முக்தி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும்.

பின் இரவில் ராமராயர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து தசாவதாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் முத்தங்கி, மச்சம், கூர்மம், வாமன, ராம, கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட தசாவதாரத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சியளிபார். பின் மறுநாள் ராமராயர் மண்டகப் படியிலிருந்து வைகைத் திருக்கண், ஆழ்வாரிபுரம், கோரிப்பாளையம் வழியே தல்லாகுளம் சேதுபதி மண்டகப் படியில் அழகர் எழுந்தருளுகிறார். இறுதியாக அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு நடைபெறுகிறது.


வரலாறு :

லட்சகணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இவ்விழா 400 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றுள்ளது.அப்போது மீனாட்சி சுந்தரர் திருமணத்தை மட்டுமே கொண்ட இந்த விழா சைவர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்பட்டது.அன்றைய காலத்தில் சோழவந்தன் எனும் இடத்தில் தான் நடந்தது.பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில், சைவம் மற்றும் வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் பொருட்டு, திருக்கல்யாணத்தோடு அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இணைக்கப்பட்டது.

சைவ மற்றும் வைணவ சமயங்கள் ஒன்றாக கொண்டாடும் திருவிழா இதுவே ஆகும்.

புராணக் கதையின் படி, மலையத்தவ பாண்டியன் மற்றும் ராணி காஞ்சனமாலாவின் மகளாக அக்னியில் தோன்றினாள் மீனாட்சி.சிறு வயது முதலே போர் கலைகளில் சிறந்தவளாக திகழ்ந்து உலகின் எல்லா பகுதிகளையும் வெற்றி கொண்ட மீனாட்சி, இறுதியாக கயிலாயம் சென்று சிவபெருமானுடன் போரிட்டார்.அக்கனமே அவர் மேல் காதல் வயப்பட்டு, தான் பார்வதியின் அவதாரம் என்பதையும் உணர்ந்துக் கொள்கிறார்.

meenakshi

தன் அவதாரத்தின் காரணத்தை அறிந்த சக்தி ஈசனின் கரம் பிடிக்க வேண்டுகிறாள். சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி க்கு திருமணம் நிச்சம் செய்யப்படுகிறது பின் இத்திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுகிறது.மீனாட்சியை திருமணம் செய்த பிறகு மதுரையை ஆளும் செங்கோல் சுந்தரேஸ்வரரிடம் கொடுக்கப்படுகிறது. பாண்டிய நாட்டை ஆளுவதால் சுந்தரபாண்டியன் எனும் பேரால் குறிப்பிடுகிறார்.இதனோடு திருவிழா முடியும்.ஆனால் அக்காலத்தில் இடம்பெற்ற சைவ வைணவர்களின் மோதல்களை தவிர்க்க முயன்று ஒரு புனைவு கதை சேர்க்கப்பட்டது.

தன் தங்கை திருமணத்திற்க்கு செல்லும் அழகர், திருமணம் முடிந்தது என்று தெரிந்ததவுடன், வைகை நதியில் இறங்கி திரும்புவதாக இந்த புதிய புராண கதைகள் சொல்கிறது. இன் நிகழ்வு நடைபெருவதற்கான காரணம் மண்டூக ரிஷி அவர்களின் சாப விமோசனம் தருவதற்காக என கூறப்படுகிறது.

ஒரு முறை மண்டூக ரிஷி நதியில் குளித்துக் கொண்டிருக்கும்பொது துர்வாச முனிவர் அங்கு வருகிறார்.அவர் வருவதை காணாத மண்டூக ரிஷியை, தன்னை அவமதித்து விட்டார் என துர்வாச முனிவர் மண்டூகருக்கு வைகை நதியிலே நீ தவளையாக இருப்பாயாக என சாபம் விடுகிறார். அவரது சாப விமோச்சனம் போக்கவே கடவுள் விஷ்ணு அவதாரம் எடுத்து வருவதாக இந்நிகழ்வு கூறப்படுகிறது.


சிறப்புகள் :

அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் பல்லகில் மதுரை நோக்கி வரும் வழயில், மண்டபங்களில் ஓய்வெடுத்து நிதானமாக வருகிறார். வைகயில் அழகர் இறங்கும் முன் விசிறி, குடை முன்னே வரும். விசிறி மற்றும் குடை யை அடையாளம் கண்டு அழகர் வரவிருக்கிறார் என்றே கூரலாம்.”சாமி இன்னிக்கு எங்க இருக்குது” என்பதே சித்திரைத் திருவிழாவில் முக்கியமான கேள்வியாக மக்களிடையே இருக்கும்.

அழகர் என்ன பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவும். பச்சை பட்டு உடுத்தி இறங்கினால் அந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அழகர் வரும்பொழுது அவர் ஆற்றில் இறங்குவதற்க்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.கடந்த சில வருடங்களாக பச்சை பட்டு உடுத்தி இறங்கியும் வைகை அணையில் தண்ணீர் இல்லாததால், அழகர் வாய்கால் அளவுள்ள நீரில் இறங்குகிறார் என்பது வேறு விஷயம்.

அழகர் திருவிழா நடைபெறுவது கோடைகாலத்தில்.அதனால் அழகர் வரும் பாதை முழுவதும் நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களினால் அமைக்கப்பட்டிருக்கும் அழகரைக் காண வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கவே. அழகர் வரும்பொழுது மக்கள் தங்கள் கைகளின் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களாகவே அழகரை நோக்கி ஆரத்தி எடுத்துக்கொள்வார்கள்.

second day1

பலியிடல், மொட்டை போடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வெயிலின் உக்கிரத்தை குறைக்க மக்களின்மேல் நீரை பீய்ச்சி அடிப்பார்கள். விசிறிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். அன்னதானம் நடைபெறும்.

இந்த திருவிழாவிற்க்கு வெளி மாவட்டங்களில் இருந்ததும் பல லட்ச பக்தர்கள் வருவார்கள்.அழகரை கண்ட பக்தர்கள் அனைவரும் கோவிந்தா என்ற முழக்கம் அனைவரையும் ஆர்பரித்துவிடும்.இத்திருவிழாவின் போது மதுரை தமுக்கம் மைதானத்தல் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி சிறப்பு வாய்ந்தது. கோடை விடுமுறையின் போது இவ்விழா கொண்டாடப்படுவதால் பெரியவர் முதல் சிறியவர் வரை இந்நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொள்கின்றனர்.

திருகல்யாணத்தின் போது தினமும் மாலை சாமி வீதி உலா செல்லும் முன் கிராமிய நிகழ்சிகள் நடைபெறும். சிறுவர் சிறுமிகளின் கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமியாட்டம், அனுமன்ஆட்டம், கருப்புச்சாமியாட்டம், தெய்வங்களைப் போல் மாறுவேடம் அணிந்து ஆடி வருவார்கள். மேலமாசி வீதி முருகன்கோயில் அருகே பூக்கொட்டும் பொம்மைககள் மற்றும் மாலையிடும் பொம்மைகளை காணப்படும்.

An_aerial_view_of_Meenakshi_Amman_temple

திருவிழாக்களின் நோக்கமாக அமைவது, ஒற்றுமை. நண்பர்கள் உறவினர்களிடம் என்னதான் பிரச்சினை இருந்தாலும் பண்டிகை என்றவுடன் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடுவர். அதிலும் சித்திரை திருவிழா பல நாட்கள் நடைபெறுவதாலும், கோடை விடுமுறையாலும், வெளி ஊரில் இருக்கும் சொந்தங்கள், சிறுவர்கள் வந்து தங்கி திருவிழாவை கொண்டாடுகின்றனர். தற்போதையா நவீன வாழ்க்கையில் இவை போன்ற திருவிழா தான் நம் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.இது ஒரு இந்து சமய திருவிழா மட்டுமல்ல சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய தமிழ் சமூக விழா, பெருமைமிகு சித்திரை திருவிழா ஆகும்.


Image source : Google

 

Related posts

அழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்

Seyon

சீனாவிலும் வணங்கப்படும் முருகன் – வரலாற்று ஆதாரங்களுடன்

Paradox

TENET movie review In Tamil

Paradox

1 comment

Sethu madhavan May 1, 2017 at 12:30 pm

சோழவந்தானில் நடைபெறவில்லை..அதன் அருகேயுள்ள தேனூர் கிராமத்தில் நடைபெற்றது.இழந்தது வரலாறு! வருடம் இருநூறு!
மதுரைக்கு மேற்குப் பகுதியில் சோழவந்தான் அருகே உள்ளது தேனூர் கிராமம்.தேனூர் கிராமத்திற்கும், பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவிற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இன்றளவும் சித்திரைத் திருவிழாவின் போது தேனூர் மண்டபத்தில் தான் கள்ளழகர் மாண்டுக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார். ஆனால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைத் தேனூர் மக்களால் முழுமனதோடு கொண்டாட முடியவில்லை.
ஏன் என்ற கேள்வியோடு தேனூர் பகுதி மக்களைச் சந்தித்தோம்.
இது பற்றி அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த விளக்கம்
ஒரு காலத்தில் சுதபஸ் என்னும் தீவிர பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் சிற்றாற்றின் கரையில் அமர்ந்து விஷ்ணுவை நினைத்துத் தவமிருந்தார். அப்போது சுதபஸ் முனிவரைக் காண துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுதபஸ் முனிவர் அவரைக் கவனிக்கவில்லை.கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற துர்வாசர் “மண்டூகம் (தவளை) போல் கிடைக்கும் நீ அதாகவே மாறிப்போ என்று சாபமிட்டார்” . உடனே தவளையாக மாறிவிட்டார் சுதபஸ். பின்பு துர்வாசரிடம் பிழையை மன்னித்துச் சாப விமோசனம் தரவேண்டும் என்று கேட்டார் சுதபஸ் முனிவர்.
மனமிறங்கிய துர்வாசர் “தேனூர் வைகை ஆற்றில் தவம் செய்! சித்ரா பவுர்ணமி அன்று பெருமாள் ஆற்றுக்கு வரும்போது உனக்கு விமோசனம் தந்தருள்வார் ” என்று கூறிச் சென்றிருக்கிறார்
அவர் சொன்னதுபோல் சித்ரா பவுர்ணமி அன்று சுதபஸ் முனிவர் தேனூர் வைகை ஆற்றில் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.
இந்த நிகழ்வே ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடந்ததாகவும் கூறுகின்றனர்.
எனில் இந்த நிகழ்ச்சி எப்போதிலிருந்து மதுரையில் நடக்கிறது என்று கேள்விக்கு . அந்தப் பகுதியின் இளைஞர்கள் கூறுகையில் ,
பாண்டியமன்னர்களாலும் , மாவிலி வானாதிராயன் மன்னனாலும் கட்டப்பட்டதே அழகர்கோவில். இங்கிருந்து அலங்காநல்லூர் வழியாகத் தேனூரிலேயே அழகர் ஆற்றில் இறங்கியதாகச் சொல்லப்படுகிறது . அழகரை அலங்காரம் செய்யப்பட்ட ஊர் தான் அலங்காரநல்லூர். இதுவே பிற்காலத்தில் பெயர் மறுவி அலங்காநல்லூர் ஆனது என்றார்.
திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மீனாட்சி கோயில் விழாவானது முதலில் மாசி மாதத்தில் தான் நடைபெற்றது. மாசி மாதத்தில் நடைபெறும் விழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும் வீதிகள் தான் மாசிவீதிகள் ஆனது. ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இந்த விழாவானது சிறப்பாக நடக்கவில்லை.
திருமலை நாயக்கர் , ஒருமுறை தேனூரில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் கலந்து கொண்டார்.
இதுபோன்ற பெரிய திருவிழாவை நாம் மதுரையில் நடத்தினால் மதுரைக்குப் பெருமை கிடைக்கும். மேலும் இரண்டு விழாக்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் சைவ, வைணவ ஒற்றுமையை வளர்க்க முடியும் என்று கூறி இரண்டு விழாவையும் ஒன்றிணைத்ததாகவும் கூறுகின்றனர்.
மேலும் முக்கிய நிகழ்வான மோட்சம் தரும் நிகழ்ச்சிக்குத் தேனூர் மக்களுக்கு மண்டபம் கட்டிக்கொடுத்து மரியாதை அளிப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார் . மக்கள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர், அன்றில் இருந்துதான் நிகழ்ச்சி மதுரைக்கு மாற்றப் பட்டதாகவும் கூறினர்.
எனில் இதில் வருத்தப்பட ஏதும் இல்லையே மக்கள் அனைவரும் ஒத்துக் கொண்டதன் பெயரில் தானே மாற்றப்பட்டது, என்ற கேள்விக்கு ,
முதலில் தேனூர் மண்டப்பத்தில் கொடி ஏற்றிய பிறகு தான் அனைத்து மண்டகப்படியிலும் கொடி ஏற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தல்லாகுளத்தில் கொடி ஏற்றப்படுகிறது.
ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியே தற்போது விமர்சையாக நடந்து வருகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பிரம்மாண்டமாக கொட்டகை போடப்படுகிறது.
ஆனால் திருவிழாவின் முக்கிய அங்கமான தேனூர் மண்டபத்திற்கு முதலில் 200 தங்ககாசுகள் கொடுக்கப்பட்டது. பின்பு 200 வெள்ளிக் காசுகள் கொடுக்கப்பட்டது.தற்போது வெறும் 200 மட்டுமே கொடுக்கப்படுகிறது. கிராம மக்களின் முயற்சியில் தான் தற்போது அனைத்தும் நடந்து வருகிறது. மிகுந்த சிரமத்தோடு அனைத்தும் செய்து வருவதாகவும் வருத்தப்பட்டனர்.
வருடத்திற்கு 200 பெற்றுக் கொண்டு, உரிமையையும், வரலாற்றையும் இழந்துள்ளோம் என்று கவலையோடு கூறுகின்றனர் .

Reply

Leave a Comment