கால் மேல் கால் போட்டு உட்காராதே, இது என்ன கெட்ட பழக்கம்? என்று பெரியவர்கள் அனைவரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.

பெரியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும் கூட அதன் பின்னணியில் அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

கால் மேல் கால் போட்டு உட்காரும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம். சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் 2 சதவிகிதமும் அதிகரிக்கிறதாம்.

பெண்களை பொறுத்த வரைக்கும், அடிவயிற்று பகுதி ரொம்ப முக்கியமானது. கால் மேல் கால் போட்டு அமரும் போது, அது கர்ப்ப பைக்கு அழுத்தத்தை கொடுக்கும்.

இடுப்பு எலும்புகள் தனது வலுவினை இழக்கும். உண்ட உணவு செரிமானம் ஆக, வயிறு மற்றும் ஜீரண பகுதிகள் நிறைய நேரம் வேலை செய்ய வேண்டி வரும்.

பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் தான் அதிகபட்சம். அதற்கு மேலும் கால் மேல் கால் போடுவது நல்லதல்ல. முக்கியமாக… நீரிழிவுக்காரர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பணிபுரியும் போது சிலர் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். இவ்வாறு உட்கார்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுகிறது என்று கூறுகின்றனர்.

பெரியவங்க சொன்ன ஒவ்வொரு அறிவுரையுமே, அர்த்தமுள்ளதாக இருப்பது உண்மைதானே? நம்முடைய உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, கால் மேல் கால் போடுவதை தவிர்த்து விடலாம். அனிச்சையாக கால் மேல் கால் போடுது தவறில்லை.

தெரிந்தே ரொம்ப நேரம் அப்படி செய்வது நல்லதல்ல. முடிந்த வரையில், பெரியவர்கள் மற்றும் பதவியில் உயர்ந்தவர்கள், இவர்கள் முன்பு கால் மேல் கால் போட்டு பேசுவதைத் தவிர்க்க பழக்கப்படுத்திக்கொண்டாலே, நல்ல பண்போடு சேர்ந்து, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Leave a Comment