Image default
Education Space

ஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை?

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யப்போகிறோம் என நாசா தொடங்கி சீனா வரை எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டிருகின்றன. அதென்ன நிலாவின் இன்னொரு பக்கம். நாம் தான் மாதம் ஒருமுறை அவள் முகத்தை தரிசிக்கிறோமே. அல்லது இதுவரை அவள் காட்டியது முதுகு மட்டுமா. சந்திரனின் மறுபக்க ரகசியங்களை ஆய்ந்தறிவோம் இன்று.

எப்படி பூமி தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோலத்தான் நிலாவும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டுதான் நம்மை சுற்றி வருகிறது. ஆனால் பூமியிலிருந்து 3 1/2 லட்சம் கிமீ தொலைவில் இருக்கும் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே எப்போதும் பார்க்க முடியும், அதன் இன்னொரு பக்கத்தை பார்க்கவேமுடியாது(Far side of the Moon).

1960 ஆம் ஆண்டு Luna 3 என்ற ரஷ்யாவின் விண்கலம் தான் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்து அனுப்பியது. நாம் பார்க்கும் திசையை விட அதிக பள்ளத்தாக்குகள் அதிகம் நிறைந்த பகுதி. சிலர் மறுபக்கத்தில் ஏலியன்கள் தளம் இருப்பதாகவும் கூட சொன்னார்கள். யாருமே செல்லாத நிலாவின் இருள் பக்கத்திற்கு 2019 ல் சீனாவின் Chang’e 4 வெற்றிகரமாகதரையிறங்கியது.

நிலவு தன்னை சுற்றிக்கொள்ளவும் பூமியை சுற்றவும் 29.5 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஒருவேளை தன்னைத் தானே சுற்றாமல் பூமியை மட்டும் சுற்றி வந்தாலோ அல்லது ஒரு முறை பூமியை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் சுழல் நேரம் ஒரு தடவைக்கு மேல் இருந்திருந்தாலோ அதன் மறுபக்கத்தை நிச்சயம் நம்மால் பார்த்திருக்க முடியும்.

அது என்ன நிலாவுக்கு மட்டும் அப்படி ஒரு தனிச்சிறப்பு. நிலா மட்டுமில்லை 62 நிலாக்கள் கொண்ட வியாழனின் துணைக்கோள்கள், சனிகிரக துணைக்கோள்கள் பலவும் இப்படித்தான் கோளை சுற்றவும் தன்னைத்தானே சுற்றவும் ஒரே கால அளவை எடுத்துக் கொள்கிறது. அண்டவெளியில் பொதுவாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு காரணம் ஈர்ப்பு விசை.

பூமியும் நிலாவும் உருவான சமயத்தில் நிலவும் பூமியை போல தன்னைத்தானே வேகமாகவே சுற்றுக் கொண்டிருந்தது. அங்கேயும் 24 மணி நேரத்தில் ஒரு நாள் முடிந்திருக்கும். யுகங்களுக்கு முன்பு நிலவு பலமுறை சுற்றுவதை பூமியிலிருந்து கண்டு ரசித்திருக்கலாம்.

ஆனால் பூமியின் ஈர்ப்பு விசை அதனை நிலைக்க விடவில்லை. உதாரணமாக புவியில் ஒரு பொருளின் மேற்பகுதியை விட அடிப்பகுதியில் அதிக்கப்படியான ஈர்ப்பு இருக்கும். அதன் மையநோக்குவிசை சரியான பகுதியில் இருந்தால் தான் அதனால் சரியாக இயங்க முடியும். மனிதர்கள் கைகளை அசைக்காமல் நடக்கும் போது நிலைத்தன்மை மாறுபடுகிறது.

அதுவே 3,474 கி.மீ. விட்டமுள்ள நிலவு போன்ற பெரிய உருவங்களுக்கு ஈர்ப்பு விசை வித்தியாசமாக செயல்படும். முக்கியமாக அது சுழல்வதனால். அதாவது பூமிக்கு அருகாமையில் உள்ள நிலவின் பக்கத்திற்கும், அதற்க்கு நேர் எதிரே உள்ள பக்கத்திற்கும் இடையே பொருளீர்ப்பு விசையில் உள்ள வேறுபாட்டால் நிலவின் பக்கவாட்டு பகுதிகள் மேல்நோக்கி இழக்கப்பட்டு நீள்வட்டமாக மாறுகிறது.

நிலவு வேகமாக சுழலும் போதெல்லாம் பூமியுடனான மைய விசை விலகுவதால் பூமியின் ஈர்ப்பு விசை எதிர்திசையில் கட்டுபடுத்தி நிலவின் வேகத்தை குறைக்க துவங்கியது. பல்லாயிரக்கணக்கான வருடங்களில் இந்த மாறுதல் சிறிது சிறிதாக கையாளப்பட்டு இறுதியில் நிலவு பூமியை சுற்றும் காலமும் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் காலமும் சமமான புள்ளியில் சந்திக்கும் நிலையை அடைந்து விட்டது. இதனை Tidal Lock என்று சொல்வார்கள்.

இந்த நிலையில் நிலவு சுற்றும் போது அதன் ஒருபக்கத்தை மட்டுமே பூமியால் பார்க்க இயலும். இதுவே மற்ற கிரகங்களின் துணைக்கோள்களுக்கும் நிகழ்ந்துள்ளது. இன்னும் விளங்க வேண்டும் என்றால் நாம் கோவிலில் நவகிரங்களை சுற்றும் போது சாமியை பார்த்தவாறே நாமும் வலது பக்கமாக சுழன்று கொண்டிருப்போம். அதையே நிலவுகளும் செய்கின்றன.

ஒருவேளை பூமியின் நிலவின் அளவில் இருந்தால் என்னவாகிருக்கும்? அப்படித்தான் ஆகியிருக்கிறது புளுட்டோ கிரகத்திற்கு. புளுட்டோவும் அதன் துணைக்கோளும் ஒன்றுக்கொன்று Tidal Lock செய்துக் கொண்டு சுற்றிவருகின்றன.

அப்படியானால்.. ஆம் பூமியும் ஒரு நாள் அப்படி ஆகும். எப்படி பூமியின் ஈர்ப்பு விசை நிலவில் தாக்கத்தை உண்டாக்கு கிறதோ அதே போல் தான் நிலவின் பொருளீர்ப்பு விசையும் புவிப்பரப்பில் தாக்கத்தை தருகிறது. அதனாலே புவியில் பெரும்பகுதியாக இருக்கும் கடல்பரப்பில் அலைகள் உண்டாகின்றன. காலப்போக்கில் பூமியின் வேகத்தை நிலவின் ஈர்ப்பு சக்தி ஆட்கொள்ள தொடங்கும்.

மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழலும் பூமியில், ஒரு நாளின் அளவு நூறு வருஷத்துக்கு 1.8 மில்லி செகண்டுகள் அதிகரிக்கிறது. இன்னும் பல நூறாயிரம் ஆண்டுகளில் பூமியும் நிலவுக்கு தன் ஒரு பக்கத்தையே காண்பிக்கும்.

Related posts

நிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்

Paradox

பூமியின் ஆறாவது அழிவு நெருங்கிவிட்டது

Seyon

பிட்காயின் – சர்வதேச பணத்தை பற்றிய ஓர் அறிமுகம்

Tulasi

Leave a Comment