Image default
Devotional Featured Tradition

கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்

இந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது.

18 இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி 19,000 ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு 28 விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு(பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும்.

ed648e9b80b75ef50c1ef2620d16ce37

வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக மிருகத்தனமான தண்டணைகளை அவர்கள் அடைவார்கள். கருட புராணத்தை படிப்பவர்கள் தவறு செய்ய அஞ்சும் படியாக இருக்கும். விஷ்ணு இதனை ‘எமனின் சித்திரவதைகள்’ என்பார்.

இனி உங்கள் தண்டணைகளை அறிய துவங்குவோம்.

தாமிஸிர நரகம்:பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.


மகா ரெளரவ நரகம்: 
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

gp3


கும்பிபாகம்: 
சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.


காலகுத்திரம்: 
பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.


அசிபத்திரம்: 
தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

gp8 ggg


பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.


அந்தகூபம்: 
உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.


அக்னிகுண்டம்: 
பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

hqdefault


வஜ்ரகண்டகம்:
சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாவம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

gggggggg


வைதரணி: 
நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.


பிராணி ரோதம்:
பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

aveechi


விசஸனம்: 
பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.


லாலா பக்ஷம்: 
மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.


சாரமேயாதனம்: 
வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.


அவீசி: 
பொய்சாட்சி சொன்னால்  நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.


மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

  • பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.

  • குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.

  • விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.

  • அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.

  • தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.

  • தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர்.

இப்படி புராணக்கதைகளில் அறிந்தே செய்யும் வெவ்வேறான தவறுகளுக்கு தண்டனைகள் இருப்பினும் வாழ்வுக்கு பின் என்ன இருக்கிறது என்பதை மரணித்து தான் அறிய வேண்டிருக்கிறது.Anniyan

ஆனால் வாழும் போது செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைத்தால் தான் அவை மற்றவரை சிந்திக்க வைக்கும், இன்னமும் கருட புராணத்தை படிப்பவர் எவருமில்லை.

அந்நியன் படத்திற்கு பின்னரே இப்படி ஒரு புராணத்தை கேள்வி பட்டோர் பலர் உண்டு, அதுவே எதார்த்தம்.

சரி இந்திய அரசியலைப்பு சட்டத்தில் உள்ள தண்டனைகள் சிலவற்றை அறிவோம். இதில் சில டெல்லி நிருபயா சம்பவத்திற்கு பிறகு 2013 ஆம் ஆண்டு லோக் சபாவில் புதிய சட்டத்திருத்தம் குடியரசு தலைவரால் கொண்டுவரப்பட்டது.

குற்றவியல் தண்டனைகள் :

ஆசிட் வீசுதல் : குறைந்த பட்சம் பத்து வருடத்திற்கு மேலான சிறை தண்டனை, ஆயுள் சிறையாக கூட மாற்றப்படலாம்.

குற்றவாளிக்கு பாதிக்கப்பட்டோரின் மருத்துவ செலவுக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்பட்டு பாதிப்படைந்தோரை சென்றைடையும்.

பாலியல் தொந்தரவு :

பெண்ணை பின் தொடர்தல், நிர்வாணமாக்குதல், தவறாக படமெடுத்தல், கட்டாய படுத்துதல் போன்ற தவறுகளுக்கு 3 ஆண்டுக்கு மேலான தண்டனையே உறுதியாக கிடைக்கும்.

கற்பழிப்பு :

இந்தியாவில் நான்காவதாக அதிகம் நடக்கும் குற்றம் இதுதான். பலவகையான குற்றச்சாட்டுகள் இருப்பினும் இதற்கு மரண தண்டனை மிக அரிதாகவே அளிக்கப்படுகிறது.

மிக முக்கியமானது 16 வயதுக்கு கீழுள்ள பெண்ணுடன் விருப்பம் / விருப்பமில்லாது உறவு கொள்ளுதலே குற்றமாகும்.rape_1580514f

இதற்கு பல்வேறு வகையில் சமூக ஆர்வலர்களால் மாற்று கருத்து கூறிய போதும் இந்திய சார்பின்மையும் இறையான்மையும் அரசு மட்டும் காக்கிறதாம்.

சவூதி உள்ளிட்ட பல சர்வதேசங்களில் மக்கள் மத்தியில் தூக்கிடும் வழக்கம் இன்னும் இருந்து வருகிறது.

ஆனால் கொலை உள்ளிட்ட எத்தகைய குற்றமானாலும் அதிகபட்சமாக ஆயுள் சிறையே இந்திய அரசியலமைப்பால் அளிக்க முடியும்.

ஐ.நா சபையில் மரண தண்டனையை எதிர்த்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜோக்கர் படத்தில் காண்பித்தது போல கருணை கொலை கூட இந்தியாவில் அனுமதிப்பது அரிதான செயலே.

அரசனன்று கொல்பவன் தெய்வமே நின்று கொல்லும் எனும் பழமொழியை நாம் மறந்து நாளாகிவிட்டது.

 

Related posts

போய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்

Seyon

காதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்

Seyon

தமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்

Seyon

3 comments

மணி October 1, 2017 at 4:53 pm

vanakkam ennudaiya peyam mani enakku intha karuda puranathin meethu adhiga nambikkai irukku but enakku intha putthagam engu kidaikkarathu endru theriya vendum

Reply
சமணர் கழுவேற்றம் - தொடரும் விவாதத்தின் பின்னணி - மாயோன் June 5, 2019 at 6:29 pm

[…] கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் […]

Reply

Leave a Comment