யூடியூபிலிருந்து தரவிறக்க எளிய முறை

யூடியூபிலிருந்து தரவிறக்க எளிய முறை

நமக்குத் தேவையான எந்த ஒரு வீடியோ கோப்பையும் Youtube-ல் மிக சுலபமாக தேடி பார்த்து ரசிக்க முடியும்.எனினும் இதில் இருக்ககூடிய வீடியோ கோப்புக்களை Mp3/Mp4 வடிவில் தரவிறக்கிக் கொள்வதற்கான வசதியோ அல்லது வேறு வடிவத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான வசதியோ யூடியூப் தளத்தில் இல்லை.

என்றாலும் பல்வேறு வழிமுறைகளில் யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளவும்.பொதுவாக இணைய உலாவி நீட்டிப்பை(Extension or Add-on) பயன்படுத்தலாம்.

அந்த வகையில் ஒரு வீடியோவை நீங்கள் தரவிறக்க விரும்பினால் அல்லது அதில் வரக்கூடிய இசையை அல்லது பாடலை Mp3 வடிவத்துக்கு மாற்றி தரவிறக்க விரும்பினால் எவ்வித மூன்றாம் நபர் செயலிகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

yout

மாறாக அந்த வீடியோ கோப்பின் இணைய முகவரியில் வரும் (www.youtube.com/xxxxxxx ) ube என்பதை மட்டும் நீக்கிவிட்டால் போதும்.இனி அது www.yout.com/xxxxxx  எனும் தளத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அதனை உடனடியாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

yout.com screen capture 2016-02-21_15-30-36
www.yout.com

தரவிறக்கும் போது MP3 வடிவத்தில் அதனை தரவிறக்க  விரும்பினால் Audio என்பதையும் அதனை Mp4 வீடியோ கோப்பாகவே தரவிறக்க விரும்பினால் Video எனும் பகுதியையும் சுட்டுக. பின்னர் கீழே இருக்கும் Record என்பதை சுட்டுவதன் மூலம் அதனை தரவிறக்கிக்(Download) கொள்ள முடியும்.சிறந்த Format ஐ அதுவே தெரிவு செய்து தரவிறக்குகிறது.(உதாரணமாக 320kbps)

yout.com screen capture 2016-02-21_15-30-29

மேலும் ஒரு யூடியூப் வீடியோ கோப்பில் உள்ள இசையின் அல்லது பாடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தெரிவு செய்து(cut) தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.அதாவது Ringtone போல.ஆனால் வீடியோவை அவ்வாறு செய்ய இயலாது.

இதனை மேற்கொள்ள அந்த தளத்தில் தோன்றும் வீடியோ கோப்புக்குக் கீழ் உள்ள இரு பட்டன்களையும் நகர்த்துவதன் மூலம் உங்களுக்குத் தேவையான பகுதியை மாத்திரம் தெரிவு செய்துகொள்ள முடியும்.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.