காது வலிக்கு மருந்தாகும் மாதுளை இலை

காது வலிக்கு மருந்தாகும் மாதுளை இலை

புனிகா கிரனாட்டம் என்ற தாவரவியல் பெயரை கொண்ட தாவரம் தான் மாதுளை. மாதுளையின் சுவை மட்டும் அற்புதமானது அல்ல, அதன் மருத்துவ குணங்களும் அற்புதமானவை. மாதுளை பழத்தை போலவே, அதன் செடியில் உள்ள ஒவ்வொரு பாகமும் தன்னுள் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை மறைத்து வைத்துள்ளன.

வடிவில் சிறியதாகவும், மென்மையாகவும் காணப்படக்கூடிய மாதுளையின் இலையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மை அளிக்கக்கூடிய மருத்துவ குணங்கள் உள்ளன. மாதுளை பழம், பூ, தோல் என அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை தான். மாதுளை இலையை வைத்து, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

சளி மற்றும் இருமல்

சளி பிடித்திருக்கும் வேளையில் மாதுளை இலையை பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும்.

அதற்கு மாதுளை இலைகளை பயன்படுத்தி டீ போட்டு குடிக்க வேண்டும். சிறிது மாதுளை இலைகளை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனை கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, இறக்கி குடிக்கவும். தினமும் 2 முறை இதனை குடித்து வந்தால், தொற்று கிருமிகள் நீங்கி, சளி, இருமல் தொல்லை நீங்கி விடும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனைக்கு மாதுளை இலைகள் ஒரு சிறந்த தீர்வினை நல்கிட கூடியது. மாதுளை இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொண்டு, அதில் 3 கிராம் அளவிற்கு எடுத்து, 200 மில்லி கொதிக்கும் நீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நீர் 50 மில்லியாக குறையும் வரை நன்கு கொதிக்க விடவும். தயாரித்த இந்த நீரை இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து விட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். எக்ஸிமா (சரும அழற்சி) நாள்பட்ட சரும அரிப்பு பிரச்சனையானது சரும அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பிரச்சனையானது, சரும வீக்கம், சிவத்தல் போன்ற பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்தவர்கள், மாதுளை இலைகளை பயன்படுத்தலாம். அதற்கு, மாதுளை இலை பேஸ்டை பாதிக்கப்பட்ட சரும பகுதியில் தடவவும். இப்படி செய்து வர பிரச்சனை குறைவதை நீங்களே உணரலாம்.

முகப்பரு பிரச்சனை பரு மற்றும் கொப்பளம் போன்றவற்றை உடனே போக்குவதற்கு மாதுளை இலைகளை பயன்படுத்தலாம். பரு இருக்கும் இடத்தில் மாதுளை இலை பேஸ்டை தொடரந்து தடவி வரவும். இப்படி செய்ய இருந்த இடம் தெரியாமல் பரு மறைந்திடும். மாதுளை ஜூஸை சிறந்த டோனராக கூட பயன்படுகிறது. அவை சரும துளைகளை அடைத்து, சருமத்தை ஜொலிக்க செய்திடும்.

காது வலி காது வலியால் அவதிப்படுபவர்கள் மாதுளை இலைகளை பயன்படுத்துவது சிறந்தது. மாதுளை இலைகளை பறித்து அவற்றை நன்கு கழுவிய பின்னர், சிறிது எள் அல்லது கடுகு சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையின் சாற்றை வலி இருக்கும் காதில் சில துளிகள் விடவும். காது வலி மாயமாக மறைந்திடும்.

வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு சீரான செரிமான செயலிற்கு மாதுளை இலை மிகவும் உதவக்கூடியவை. ஒருவேளை நீங்கள், வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவராக இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் செரிமானத்தை சீராக்கி, உடலுக்கு தேவையான ஆற்றவை வழங்கிடுகிறது.

மேலும், வயிற்று போக்கு, அஜீரண கோளாறையும் நீக்கிடுகிறது. அது தவிர, மாதுளை இலைகளால் செய்யப்பட்ட மாத்திரை உள்ளிட்ட பிற மருந்துகளையும் நீங்கள் உட்கொள்ளலாம். வயிற்றுபோக்கால் அவதிப்படுபவர்கள் மாதுளை இலை சாற்றை குடித்தால் உடனே நின்றுவிடும். அதற்கு, மாதுறை இலை சாற்றுடன், சிறிது மாதுளை ஜூஸையும் சேர்த்து குடிக்கவும்.

மாதுளை இலையின் மருத்துவ பயன்கள் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மாதுளை இலையில் நிறைந்துள்ளது. அவை வாயில் காணப்படும் பாக்டீரியாக்களை அழித்துவிடக்கூடியது. வாய் புண் பிரச்சனை என்பது மிகவும் கடினமான ஒன்று. அதற்கு, மாதுளை இலைகளால் செய்யப்பட்ட ஜூஸை குடித்து வர வாய் புண் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடலாம்.

https://tamil.oneindia.com/art-culture/essays/2011/21-herbal-pomegranate-medicine-disease-aid0090.html

https://tamil.boldsky.com/health/wellness/health-benefits-of-pomegranate-tree-leaves-028763.html

Add comment