விநாயகர் சதுர்த்தி தினத்தை யொட்டி விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சிலை வாங்குதலுக்கான விழிப்புணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்களிடம் அதிகரித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது .

விநாயகர் செய்யும் தொழில்கள் (பஞ்சகிருத்யங்கள்) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். எனினும் ஆறு மற்றும் கடல் வளங்களையும் உயிர்களையும் அழிக்கும் கடவுளாக மட்டுமே சுற்றுசூழல் ஆர்வலர்களால் அவர் பார்க்கப்படுகிறார்.

devotees_splash_water_on_an_idol_of_hindu_elephant_540e22ca12.JPG

சிறியளவிலிருந்து 75 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் 3 லட்சத்திற்கு மேலே மும்பை புறநகர் பகுதிகளில் கரைக்கப்படுகிறது. Plastic of paris போன்றவற்றால் உருவாக்கப்படும் சிலைகள் நீர் வளங்களை அழித்து அதிலுள்ள ஆக்சிசன் அளவை குறைக்க வாய்ப்புள்ளது.

கடந்த சில வருடங்களில் மீன்கள் இறந்து கரையில் மிதந்த அவலம் கூட நிறைவேறியுள்ளது. இவை மக்கா குப்பை போல, நீரோடு கலந்து அழியாது. அப்பகுதி முழுதுமே பாதிக்கப்படும்.

மக்கள் தங்கள் கடவுளை மகிழ்விப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளனர், தம்மை சார்ந்த சுற்றுசூழலை கவனிக்க மறந்து விடுகின்றனர்.

ஆனால் காலம் மாறியுள்ளது, பல இளைஞர்களும் சமூக தொண்டு நிறுவனங்களும் பல வகையான விழிப்புணர்வு மிக்க சிந்தனைகளை சதுர்த்தியில் நாம் அறிந்து கொள்வோம்.

மீன்களின் நண்பன் விநாயகர் (Fish friendly Ganesha):

Sprouts Environment Trust, துளிர் அல்லது முளைகள் என பொருள்படும் இந்த தொண்டு அமைப்பு பல காலமாகவே மும்பையின் கடல் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். 2001 முதல் இவர்கள் உலர்ந்த சோளம் மற்றும் கீரைகளை பயன்படுத்தி விநாயகர் சிலை உருவாக்கும் பணியை தொடங்கினார்.

களிமண்ணால் செய்யப்பட்டு இயற்கை வண்ணம் பூசப்படும் இச்சிலைகள் மீன்களை அழிப்பதை விட்டு மாறாக கடல் மீன்களுக்கு உணவாக மாறுகிறது. சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பின்னர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி(#GodSaveTheOcean) மிகசிறந்த திட்டமாக பெரும் ஆதரவை பெற்றுவிட்டது.

General-Let-us-change-the-way-we-celebrate-Ganesh-Chaturthi.jpg

தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் யாரும் சதுர்த்தியை கொண்டாடவில்லை. தற்போதும் மும்பை போல வீதியிலொரு வீட்டில் இல்லாமல் கோவில்களில் மட்டுமே சிலை வைத்து வணங்குகிறோம்.

மற்ற இடங்களை விட தமிழகத்தில் இருக்கும் சிலைகள் இயற்கைக்கு பங்கம் ஏற்படுத்தாதவை.

விதையோடு விநாயகர் (Tree Ganesha):

மிக சமீபத்தில் பிரபலமான இந்த திட்டம் பரவலான பாராட்டினை பெற்று வருகிறது. இயற்கை மண்ணால் ஆன இந்த விநாயகர் சிலையை வாங்கி வீட்டில் பூஜை செய்து வணங்கலாம். by Dattadri Kothur

விநாயகரை கரைக்கும் தினத்தில் தங்கள் வீட்டிலேயே கரைத்து அப்படியே விட்டுவிட்டால் விநாயக்கருக்குள் புதைந்த விதை மெல்ல வளர்த்து மரமாகி உங்கள் வீட்டை வளமாக்கும்.

Ganesh-750x500.jpg

இது சுற்றுசூழல் மாசுப்படை தவிர்ப்பதோடு மரம் வளர்க்கும் எண்ணத்தையும் மக்களிடம் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது.

தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

புத்தி விநாயகர் :

சூழல்-நட்பு சிலைகளை விற்பதை தவிர இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றியோர்களுக்கு சிலை வடிவமைப்பை சொல்லி தந்து வேலை வாய்ப்பையும் அளிக்கிறது Ecoganeshidol அமைப்பு.

33

விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. சு என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர்.

யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.

பிள்ளை மன விநாயகர்(Chocolate Ganesha) :

மும்பையில் வசிக்கும் ரிந்து ரத்தோட்(Rindu rathod) என்ற பெண்மணி சாக்லேட் டால் ஆன விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். அதற்கு வண்ணங்கள் கூட இனிப்பு வகைகளால் திட்டிடப்பட்டதே.

Chocolate-Ganesha-Ritu-

ஆனால் இதை அவர் கரைக்க போவதில்லை, மாறாக அனாதை குழந்தைகள் உண்ண விருந்தளிக்கப்போகிறார். 2015 ல் இவர் 90 லிட்டர் பல் மற்றும் சாக்லேட் உணவுகளை அனாதை ஏழை குழந்தைகளுக்கு அளித்துள்ளார்.

புனேவை சேர்த்த விவேக் காம்ப்ளே தண்ணீர் சுத்திகரிக்க பயன்படும் படிகாரத்தை வைத்தே ஒரு விநாயகர் சிலையை உருவாக்கி இருந்தார்.

8563552782_989901987f_k

இதுபோல எண்ணற்ற முயற்சிகள் நடப்பினும் மக்கள் தாமாக விழிப்புணர்வு அடைவதே சிலைகளால் ஏற்படும் சுற்றுசூழல் பேரழிவை தவிர்க்க முடியும்.

தற்போது மும்பையை சுற்றியுள்ள பல கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்களோடு கைகோர்த்து பெருந்தக்க மாற்றங்களை நேரடியாகவும் வலைத்தளங்கள் வழியாகவும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் தான் உலகின் அதிகமான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த பண்டிகைகளின் வழியாக சுற்றுசூழல் பற்றிய ஆக்கப்பூர்வ விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது குடிமகன்களின் கடமையும் ஆகும்.

விநாயகர் சிலை கரைப்பதால் உண்டாகும் பொதுவான பிரச்சனைகள்:

 • Plaster of Paris ஆல் உருவாக்கப்படும் சிலைகள் மக்குவதற்கு சில மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை பிடிக்கும்.

 • நீரில் உள்ள ஆக்சிசன் அளவை குறைத்து, நீர் வாழ்வனைகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

 • பூசப்பட்ட வண்ணத்தில் உள்ள பதற்றம் போன்ற திரவம் நிறை மாசடைய செய்யும்.

 • நீரில் ஏற்கனவே உள்ள ராசயங்களின் நச்சு தன்மையை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.

 • சில சமயங்களில் மிகப்பெரிய சிலைகளால் நீர்தேக்கங்ககள் உருவாக்கி நோய் தொற்று பரவவும் வாய்ப்புள்ளது.

நிலையில்லா இவ்வுலகின் சுழற்சியை தெளிவுபடுத்தவே கடவுள் உருவான விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது.

h01_RTR2R4OI

தவிர்க்கும் வழிமுறைகள் :

 • பழமையான களிமண்ணால் உருவாக்கப்படும் சிலைகளை உருவாக்கலாம்.

 • ஒரு நிரந்தரமான கற்சிலையை உருவாக்கி அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

 • பிளாஸ்டரால் செய்யப்படும் சிலைகளை மறுபடி வண்ணம் திட்டி பயன்படுத்தலாம்.

 • பிளாஸ்டர்களை கொண்டு சிலை செய்வதை தடை செய்யலாம்.

 • மக்கும் தன்மை கொண்ட இயற்கை பொருள்கள் மற்றும் உணவு பண்டங்களை வைத்து செய்யலாம்.

 • இயற்கை நீர் நிலைகளை தவிர்த்து மற்ற இடங்களில் விநாயகரை கரைக்க மக்களை ஊக்குவிக்கலாம்.

Ref :

This Ganesh Chaturthi bring home Ganapati that grows into a tree

Leave a Comment