எங்கும் வாழலாம் – முட்டை வடிவிலான வீடுகள்

 முட்டை ஓடு தெரியும் அது என்ன முட்டை வீடு என சிந்திக்கிறீர்களா!.சமீபத்தில் சென்னையை பாதித்த மழை வெள்ளத்திற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று நில ஆக்கிரமிப்புகள்.ஆறுகள் கால்வாய்கள் பாயும் இடமெல்லாம் பாதிக்கு மேல ஆக்கிரமிப்பு பகுதிகளாக மாற வெள்ள நீர் வேறு வழியின்றி வீடுகளிலும் வீதிகளிலும் தஞ்சம் கொண்டன.

பெருகும் மக்கள்தொகையை சமாலிக்க இது போன்ற கண்டுபிடுப்புகளே உதவும்.சுலவோகியா நாட்டைச் சேர்ந்த ‘நைஸ் ஆர்க்கிடெக்ட்ஸ்’ என்ற நிறுவனத்தினர் உருவாக்கியிருக்கும் இந்த திட்டத்திற்கு ‘எகோ கேப்சூல்’ என்று பெயர்.

Eco capsule clg

கேப்சூல் மாத்திரைகள் வடிவில் சகல வசதிகள் அடங்கிய வீடுகள் இவை.மேலும் இவை Eco Friendly அதாவது சூரிய ஒளி, காற்று மூலமாக தேவையான மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளலாம்.மேலும் மழை காலங்களில் தாமாகவே மழைநீரை சேமிக்கும் வசதியும் சேர்ந்தே வடிவமைப்பட்டுள்ளது.

The dwelling is powered by a built-in turbine complemented with an array of photovoltaic cells

இடப்பற்றாக் குறையை சமாளிப்பதோடு இயற்கை வளத்தினை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கும் இவர்கள் எதிர்காலத்தில் வீடுகள் இப்படித்தான் மாறப்போகின்றன என அடித்து சொல்கிறார்கள்.

Schemes_-_Energo

டைனோசர் முட்டை வடிவில் இருக்கும் இந்த குட்டி வீட்டில் அதிக பட்சம் இருவர் வசிக்கலாம்.இருவருக்குத் தான் என்றாலும் சராசரி உயரம் கொண்ட இரு நபர்களுக்கு ஏற்ற இடவசதி, மடித்து வைத்து ஏற்றவாறு படுக்கயறை,வெந்நீர் வசதியுடன் பாத்ரூம்,ஃப்லஷிங்க் டாய்லெட், டின்னர் ஹால்,தண்ணிர் வசதியுடன் உள்ள கிச்சன் என அனைத்து வசதிகளும் உள்ளது.

screen-shot-2015-05-26-at-3-34-56-pm

தண்ணீர் நிரம்பிவிட்டால் அதற்கு மேல் ஏற்றுக் கொள்ளாது.ஒரு வருடம் இந்த வசதிகளை அப்படியே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒருவேளை நீங்கள் அடிக்கடி வீட்டை இடம் மாற்றம் செய்ய ஆசைப்பட்டால் அதனை உடனே செய்து கொள்ளலாம்.வீட்டிலுள்ள பொருள்களை தூக்கிச் செல்லாமல் வீட்டையே தூக்கி வேறு இடத்தில் வைக்கலாம்.காலையில் காற்று வாங்க வசதியாக கடற்கரையிலும் இரவிற்கு காட்டிற்குள்ளும் வசிக்கலாம்.வேடிக்கை பார்க்க வசதியாக இரு ஜன்னல்களும் உள்ளன.

nice-architects-ecocapsule-low-energy-off-grid-house-designboom-06

எதிர்கால தேவைகளை தீர்மானித்து வடிவமைக்கப் பட்டுள்ள இந்த எகோ கேப்சூல் வீடுகள் இந்த வருட இறுதிக்குள் அல்லது 2016 தொடக்கத்தில் விற்பனைக்கு வரவும் வாய்புள்ளதாம். நம்ப முடியாத அளவிற்கு விலை குறைவாகவும் தரமாகவும் இருக்கும் என நம்பிக்கை அளிக்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.வரட்டும் எங்கும் வாழலாம்.

 

 

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular