காலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பதின் மருத்துவ பயன்கள்

காலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பதின் மருத்துவ பயன்கள்

வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம். வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.

இப்படி ஏராளமான நன்மைகள் தரும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து உண்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இன்னும் அறிந்து கொள்வோம். ​இது ஒரு ஆன்டிசிட்டாக செயல்படுகிறது.

venthayam water

வயிற்றில் அமிலத்தன்மை உள்ளவர்கள் இரவில் 1 டீ ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்த வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் நெஞ்செரிச்சல், எதிக்களித்தல் போன்ற அமிலத்தன்மை பிரச்சினைகளை விரட்ட முடியும்.

​நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது

இது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஊற வைத்த வெந்தயம் உங்க இரத்த சர்க்கரை அளவில் மாற்றங்களை உண்டாக்கும். முளைத்த வெந்தய விதைகளை விட நனைத்த வெந்தய விதைகள் 30 – 40 சதவீதம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

​சீரண சக்தியை மேம்படுத்துகிறது

வெந்தயம் உங்க செரிமானத்திற்கு உதவுகிறது. அஜூரணம் போன்ற கோளாறுகளை போக்கி உணவு நல்ல செரிமானம் ஆக குடலியக்க செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வெந்தயம் சூட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டு இருப்பதால் மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை களைகிறது.

​கொழுப்பைக் குறைக்கிறது

நீரில் ஊற வைத்த வெந்தயம் உங்க கொழுப்பை குறைக்க உதவுகிறது. வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் கொழுப்பைக் குறைத்து உங்க உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

Benefits-Of-Fenugreek

​பித்தம் மற்றும் கபம் அதிகமாக உள்ள நபர்களுக்கு ஏற்றது

வெந்தய விதைகள் இயற்கையாக உடம்பில் சூட்டை தரக் கூடியது. எனவே கபம் அதிகமாக உள்ளவர்கள் வெந்தயத்தை ஊற வைத்தோ முளைத்த மற்றும் முழு தானியமாக எடுத்துக் கொள்ளுங்கள். பித்தம் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் வெந்தய விதைகளை நீரில் ஊற வைத்து எடுத்து வரலாம். இது உங்க வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை போக்க உதவும்.

​பக்கவாதத்திலிருந்து காக்கிறது

வெந்தய விதைகள் பல்நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், லினோலிக் அமிலம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. பல ஆய்வுகளின் படி மூட்டி வலி மற்றும் மூட்டு வீக்கம் இவற்றை விரட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

​மாதவிடாய் வலியை போக்க உதவுகிறது

வெந்தய விதைகள் மாதவிடாய் வலிக்கு ஓரு நல்ல தீர்வாகும். பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அறிகுறிகளை குறைக்க ஊற வைத்த வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டு வரலாம்.

​வெந்தய விதைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்

ஒரு தேக்கரண்டி ஊறவைத்த வெந்தயம் விதைகளை காலையில் வெறும் வயிற்றில் முதலில் உட்கொள்ள வேண்டும்.உங்களுக்கு சுவை பிடிக்கவில்லை என்றால், அவற்றை உங்கள் பருப்பு மற்றும் கறிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு நாளில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை விட அதிகமாக உட்கொள்ள வேண்டாம். 21 நாட்களுக்கு உட்கொண்டு வரும் போது நல்ல முன்னேற்றத்தை காண வாய்ப்புள்ளது.

Add comment