Image default
Featured Mystery

அமலா கமலா | ஓநாய் குழந்தைகள்

புகழ்பெற்ற டார்சன் கதாபாத்திரம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். வனத்தில் எல்லா மிருகங்களுடன் உறவாடி சாகசம் செய்து அசத்துவார். விழுதுகளை பற்றிக் கொண்டு மரம்விட்டு மரம் தாவி கேளிக்கை செய்து நம்மை குதூகலிக்க வைப்பார்.

குழந்தை முதலே குரங்குகள் தான் அவரை பாலூட்டி வளர்க்கும், மற்ற விலங்குகளும் அரவணைக்கும். ஆனால் நிஜத்தில் கானகத்தில் வளர்வது அவ்வளவு மகிழ்வானதா!

மனிதர்களால் தனிமைபடுத்தப்பட்டு வனவிலங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றிய கதைகள் உலகெங்கும் ஆங்காங்கே விரவி கிடக்கின்றன. புனைவுக்கும் மெய்க்கும் இடைப்பட்ட இக்கதைகளில் சில ஆதாரமிக்கவை, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உறவை நீட்டித்த சந்தேகத்துடன் கேள்விக்குள்ளாக்குபவை.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு மற்றும் காட்டுப்பகுதிகளில் பயணிக்கும் போது தொலைவுற்ற பல்வேறு குழந்தைகள் பிற்காலத்தில் விலங்குகளோடு மீட்கப்பட்டுள்ளனர். மனிதர்களின் சுபாவத்தை அறைகுறையாக அல்லது முற்றிலுமாக இழந்துவிடும் இவர்களை கான்வளர் குழந்தைகள், காட்டான் குழந்தைகள்(Feral Child) என குறிப்பிடபடுகின்றனர்.

feral-children-wild-animals-photos-fullerton-batten.jpg

சமீபத்தில் மார்ச் 2017 ல் உத்திரப்பிரதேசத்தில் குரங்குகளோடு வாழ்ந்த ஒரு சிறுமி மீட்கப்பட்டது பரவலாக பேசப்பட்டது. மருத்துவமனையில் சமைத்த உணவுகளை அவர் உண்ண மறுத்தார், பேச முடியாமலும் நான்கு கால்களில் நடக்க முயல்வதுமாய் இருந்தார்.

கான்வளர் குழந்தைகள் காட்டில் வளர்வதால் சில சமயம் மனநலம் குன்றுதல், சமைத்த உணவுகளை உட்கொள்ள மறுப்பது, நான்கு கால்களில் நடப்பது போன்ற குணாதிசியங்களோடு காணப்படுவர். இந்தியாவின் கான்வளர் குழந்தைகளில் மிகவும் பிரபலமான அமலா கமலா மேற்கண்ட குணங்களை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

அமலா – கமலா ஓநாய்களால் வளர்க்கப்பட்ட பெண் குழந்தைகள். ஆரம்பத்தில் ஓநாய்களோடு உலவும் ஆவிகள் என்றெண்ணிய ரேவனர்னாட் ஜோசப் சிங் இவர்களை மீட்டு வீட்டில் வளர்க்கும் போது மனித சூழலில் மிகவும் சிரம்மப்பட்டார்கள்.

indian feral child.jpg

ஒரு அனாதை இல்லத்தின் நிர்வாகியான சிங் ஓநாய்களிடமிருந்து காப்பற்றிய போது அமலா 18 மாத குழந்தையாகவும் கமலா 8 வயது சிறுமியாக இருந்ததாக அவர்கள் வாழ்வை பற்றி இவர் பதிவு செய்து வைத்திருந்தார்.(1920)

வேகாத மாமிசத்தை மட்டுமே உண்ணும் பழக்கத்தை கொண்டிருந்த இவர்களால் இறுதிவரை மனித மொழியை பேசவோ உணரவோ முடியவில்லை. இரவுகளில் ஓநாய்களை போல ஊளையிடுவதோடு கண்கள் பூனைகளைப் போல கண் மின்னியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடைசி வரை அக்குழந்தைகள் சிரிக்க வில்லை. அவர்கள் வெளிகாட்டிய ஒரே குணம் பயம்..

எவ்வளவு முயற்சி செய்தும் சில வருடங்களில் நோய்வாய்ப்பட்டு அமலா கமலா இருவரும் இறந்து போயினர். உலகில் எழுத்துவடிவமாக பதிவு செய்யப்பட்ட காட்டுக்குழந்தை கதைகளில் இது முக்கியமானதாக கருதப்பட்டது.

பிற்காலத்தில் இவை எல்லாம் உண்மையல்ல, விளம்பரத்திற்காக செய்யப்பட்டவை என ஒரு வாதம் வந்தாலும் அமலா கமலா என்றுமே ஓநாய் குழந்தைகளின் பதிவில் முக்கிய இடம்பெறுவர்.

ஓநாய்களால் வளர்க்கப்பட்ட இந்திய கான்வளர் நபர்களில் குறிப்பிடதகுந்தவர் தினா சானிச்சர்(Dina Sanichar).

1867 ல் வனப்பகுதிக்குள் வேட்டையாட சென்றவர்கள் ஓநாய்களோடு சுற்றித் திரியும் ஒரு குழந்தையை கண்டனர். அது நான்கு கால்களை குகைக்குள் சென்றது.

wolf boy.jpg

பின்னர் அந்த ஓநாயை தாக்கி குழந்தையை மீட்டவர்கள் ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். 1895 வரை உயிர்வாழ்ந்த தினா மனநலம் குன்றியவராகவும் மனித இயல்புகள் அற்றவராகவும் இறந்தார்.

காட்டில் வளரும் குழந்தைகள் பற்றிய கதைகள் உலகின் எல்லா நாடுகளிலும் உண்டு. ஓநாய் மட்டுமில்லாது நாய், குரங்கு போன்றவற்றோடு வாழ்ந்த குழந்தைகளும் அதிகமாக உண்டு.

சைபீரியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 6 வயது சிறுமி 12 நாட்கள் கரடி, புலிகள் வசிக்கும் காட்டில் தனது வளர்ப்பு நாயுடன் காவலர்கள் வந்து மீட்கும் வரை உயிர் பிழைத்திருந்தார்.

அந்நாட்டில் இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக சிலை ஒன்று கூட வைக்கப்பட்டுள்ளது.

விலங்குகளை மதிப்பது வணங்குவது நம் நாட்டின் இறையாண்மை. அதற்கேற்ப விலங்கு மனித உறவை பற்றிய கதைகள் நம் இந்து புராணத்திலும் உண்டு.

சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்ததாக கருதப்படும் ஐயப்பன் புவி வனத்தில் மன்னர் ஒருவரால் கண்டுபிடிக்கப்படும் வரை புலிப்பால் குடித்து வளர்ந்தாராம்.

பிற்காலத்தில் தன் தாய்க்காக புலிப்பால் கறந்துவர சொல்ல அந்த புலியின் மீதே அமர்ந்து வருவார் என கதை நீளும்.

இந்து புராணம் மட்டுமின்றி மற்ற உலக கதைகளில் கூட ஓநாய் குழந்தைகள் உண்டு.

ரோமுலஸ் பிறந்தவுடன் அவரது சித்தப்பாவால் ஆற்றில் வீசப்படுகிறார். அவரை கண்டெடுத்த ஓநாய் பாலுட்டி வளர்கிறது. காக்கைகள் சோறுட்டுகிறது. பின்னர் ஒரு விவசாயி உதவியுடன் சித்தப்பாவை கொன்று அரசனாகிறான்.

மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக மாறும் ரோமுலஸ் நினைவாக அந்நகரம் ரோம் என அழைக்கப்படத்தாம்.

romulus-remus-rome-feral-children.jpg

இவ்வகையான கதைகளில் ஒரு சுவாரசிய பகுதி உள்ளதால் பல கலை அம்சங்களில் இவை இடம்பெறுகின்றன. இலக்கியங்கள் திரைப்படங்கள் என தற்போது எல்லாவற்றிலும் ஓநாய் குழந்தைகள் பற்றிய கதைகள் விரவி இருக்கின்றன.

பிரபல Feral Child திரைப்படங்கள் – Tarzan, The Wild Child(1970), Princess Mononoke(1997), Nell(1994), Mockingbird Don’t Sing(2001), The Jungle Book(2016), Alpha(2018).

உலகின் மிக பிரபலமான கதைகளில் ஒன்றான ‘தி ஜங்கிள் புக்‘கில் மௌக்லி என்ற சிறுவன் இந்திய வனத்தில் ஓநாய்களால் தத்தெடுக்கப்பட்டு பின்னர் பாலு(கரடி) மற்றும் பகீரா(கருஞ்சிறுத்தை) ஆகிய நண்பர்களுடன் வளர்வான். ஷேர்கான் என்ற புலி இவர்களின் எதிரி.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் இரட்யார்ட் கிப்ளிங் உருவாக்கிய இந்த மௌக்லி கதாப்பாத்திரம் உலகின் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். 1894 ல் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் எழுதியது. 1967 ல் டிஸ்னி அனிமேஷன் படமாக வெளிவந்து பின்னர் 2016 பிரமாண்டமாக மீண்டும் வெளியானது.

jungle book.jpg

இன்று வனத்தில் கண்டறியப்படும் பல்வேறு கான்வளர் குழந்தைகளை மௌக்லி என்றே முதலில் அழைக்கின்றனர்.

இதுபோன்ற சம்வங்களில் பெரும்பான்மை உண்மைக்கு புறம்பானவை என்றாலும் சில நிகழ்வுகள் எவ்வாறு நிகழ்ந்தன என நம்மை சிந்திக்க வைக்கக்கூடியவை.

பொதுவாக பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட பல குழந்தைகள் கானகத்தில் வளர்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உடல் மற்றும் மன நிலை குறைபாட்டுடன் இருப்பது.

இன்னும் சிலர் குழந்தையை கவனிக்காமல் விட்டுவிடுவது. ரஷ்யாவில் Natasha Mikhailova எனும் குழந்தை தந்தையாலும், பாட்டியாலும் வீட்டு செல்ல பிராணி போல் நாய்களுடனும், பூனைகளுடனும் 3 ஆண்டுகள் வளர்க்கப்பட்டதால், பேசுவதை விடுத்து நாய் போல் குரைப்பதையும் அவை போன்றே உண்பது, நீர் குடிப்பதையும் செய்வது கண்டறியப்பட்டது. குழந்தை மீட்க்கப்பட்ட போது அதற்கு வயது 5 ஆகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மடினா என்ற பெண் குழந்தை 3 வயது வரை நாய்களுடன் உண்டு, விளையாடி வாழ்ந்திருக்கிறார், மேலும் ரஷ்யாவின் கடும் குளிர்காலத்தையும் நாய்களுடன் உறங்கியே கழித்திருக்கிறார்.

சமூக ஆர்வலர்களால் அவளது அம்மா வீட்டில் இந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

சர்ச்சையை உருவாக்கிய இந்நிகழ்வில் அதே வீட்டில் வசிக்கும் அவரது தாய் தினமும் குடிபோதையில் குழந்தையை காண்காணிக்காமல் விட்டதே காரணம் என தெரியவந்தது.

1991 ஆண்டில் மீட்கப்பட்ட 8 வயதுடைய Oxana Malaya எனும் பெண்குழந்தை பெற்றோரால் கைவிடப்பட்டு, நாய்களுடன் வளர்ந்த குழந்தையாகும். 23 வயதான நிலையில் இன்றும் ஒக் சான மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் காப்பகத்திலேயே வாழ்கிறாள்.

இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 180 குழந்தைகள் தொலைந்து போகின்றன.

கான்வளர் குழந்தைகள் பற்றிய சம்பவங்கள் அரிதாக நிகழ்பவையே. அதிலிருந்து நாம் கற்க வேண்டியவை சில இருக்கின்றன.

சிறுவயதில் குழந்தையை சரியாக கண்காணிக்காமல் விடுவது அவர்களின் மூளைத் திறனை பாதிக்கும். பின்னர் சமூக சூழலோடு ஒன்ற இயலாத மதியிறுக்கம் எனப்படும் ஆக்டிசம் போன்ற நோய்களால் பாதிப்படைய செய்யும் காரணியாகவும் அமையும்.

இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 180 குழந்தைகள் தொலைந்து போகின்றன, முக்கியமாக நகரங்களில் தான் அதிகம். கடந்த 2015 ஆண்டு மட்டுமே 63000 சிறார்கள் காணவில்லை.

கடத்தபடுவதும் தொலைக்கப்படுவதுமாய் இந்த குழந்தைகள் சென்றடையும் இடம் பிச்சை எடுக்கும் கூடம் மற்றும் விபச்சார விடுதிகள். Slumdog Millionare, 6 Candles படங்களில் வருவது போல குழந்தைகளுக்கு எதிரான சமூக அவலங்கள் நிகழ்ந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

இன்னமும் கூட குழந்தைகள் தொலைந்துவிட்டது என்பதை உணரவே சில நாட்கள் ஆகிவிடுகிறது பெற்றொர்களுக்கு. அதன் பிறகு புகார் செய்து கண்டறிவதற்குள் தொலைந்த குழந்தையின் நிலை என்ன ?

indian feral child.jpg

Related posts

தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்

Paradox

செம்பவளராணி – முதல் கொரிய அரசி

Seyon

கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்

Seyon

Leave a Comment