Image default
Entertainment Science

ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா

2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விண்மீங்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்தும் இந்த ஐந்தாவது விசையை பற்றி விரிவாக காண்போம்.

பிரபஞ்சம் ஒரு மாயை. அதன் முழு பரிமாணத்தை இதுவரை யாரும் அறிந்ததில்லை. நாம் அறிந்த பேரண்டத்தில் மனிதன் மட்டுமே தன் உலகை தாண்டி மற்ற கிரகங்களையும் அதனின் தோற்றத்தை பற்றியும் தேடிச் செல்லும் அளவுக்கு அறிவுத்திறனை பெற்றுள்ளான். அவற்றில் முக்கியமான தேடல் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை பற்றி தான்?

gettyimages-899006948.jpg

இதுநாள் வரை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததில் இந்த உலகில் நடக்கும் எல்லா அறிவியல் சார்ந்த செயல்முறை வினைகளும் நான்கு அடிப்படை விசைகளை(Fundamental Forces) தொடர்பு படுத்தியே இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியே வேறெந்த அடிப்படை விசைகளாலும் விளக்க இயலாது.

ஈர்ப்பு விசை(Gravity), மின்காந்த விசை(Electromagnetism), மென்விசை, அணுவின் கருப்பெருவிசை(Strong/Weak Nuclear) ஆகிய இவற்றை வைத்த அணுக்கரு முதல் விண்மீன் வெடிப்பு வரை விளக்க முடியும். உதாரணமாக ஒவ்வொரு பொருளும் மண்ணில் இருப்பது புவியின் ஈர்ப்பு விசையால். மின்காந்த விசை காரணமாகவே ஒவ்வொரு பொருளும் நிலைத்தன்மையோடு இருக்கிறது. அணுவுக்குள் இருக்கும் எலக்ட்ரான்கள் மின்காந்த விசை மூலமே செயலாக்கம் பெறுகிறது. அதுவே நமக்கு மின்சாரம் தருகிறது.

ஆனால் இந்த அடிப்படை விசைகளை தாண்டி ஐந்தாவதாக ஒரு விசை(Fifth Force) இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப் படாத இந்த விசை கரும்பொருள்(Dark matter) மற்றும் கருப்பு ஆற்றலால்(Dark Energy) கட்டமைப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. முடிவிலியான பிரபஞ்சத்தில் 5% மட்டுமே அடிப்படை வினைகளால் ஆனது.

2016-06-09_forces.png

அண்டத்தின் நிறையில்(mass) கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகள் 90% இருப்பதாக நம்பப்படுகிறது. வானியலார் அண்டக்கோந்து என வழங்கும் இந்த ஆற்றல் நட்சத்திரங்களின் நிறையையும், அதிவேகமாக பரவும் பேரண்டத்தையும் கட்டுப்படுத்துகிறது என நம்புகிறார்கள். மேலும் இது ஐன்ஸ்டின் விதிகளை உடைத்து ஒளியை விட வேகமாக பயணிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

ஐந்தாவது விசை என அடையாளப்படுத்தப்படும் இந்த இருண்ட பிரபஞ்ச சக்தி(Dark Energy) அடிப்படை விசைகளான மற்ற நான்கு விசைகளின் தன்மைகளையும் அதனோடு மேலும் சில சிறப்பு தன்மைகளையும் கொண்டிருக்கிறது. அதாவது அதீத ஈர்ப்பு தன்மையும், பெரும் மின்னாற்றல் சக்தியையும் அதே நேரத்தில் நிலையான உருவமைப்பு இல்லாது காலத்தை வளைக்கும் தன்மையும் தன்னகத்தே பெற்றிருக்கும்.

உதாரணமாக 2.0 டிரைலரில் புவியின் ஈர்ப்பு விசையை தகர்த்து செல்போன்கள் விண்ணை நோக்கி பறந்து செல்லும். கருந்துளை போன்ற அபாய இருள் விசைகளால் மட்டுமே இது இயலும். அதே போல புவியின் மின்காந்த புலன் தகர்க்கப்பட்டு கவர்ந்த பொருள்களை ஒன்றிணைத்து வைக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த வெடிப்பு மூலம் ஒளி/ஒலி மற்றும் கதிரியக்கத்தை பயன்படுத்தும் சக்தி வில்லனுக்கு இருக்கும். இதுவே அணுக்கரு பெருவிசை, ஆனால் அதே நேரத்தில் மிக காலம் நீடித்டிருக்காமல் அதனை தகர்க்க இயலும். அதுவே மென்விசை. அதனாலே ரோபோ ரஜினியால் வில்லனை உடைக்க முடிகிறது.

vlhvm7pg_2.0-teaser-youtube_625x300_13_September_18.jpg

நாம் அறிந்த எலக்ட்ரான், நியுட்ரான், புரோட்டன் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான கண்ணுக்கு புலப்படாத துகள்கள் விண்வெளியை ஆக்கிரமித்துள்ளன. கடவுள் துகள் அறியப்படும் போஸ்டன் துகள் எல்லாவற்றிக்கும் ஆதாரமாக இருக்கிறது. இவை இந்த அண்டம் உருவான சமயத்தில் இருந்தே ஒவ்வொரு பொருளின் ஆதாரமாக இருக்கிறது.

இந்த விசைகள் ஏதோ தொலைவில் இருப்பதாக கருத வேண்டாம். இவை நம்மை சூழ்ந்தே இருக்கின்றன, ஈர்ப்பு விசை போல. எனினும் நம்மால் அவற்றின் தன்மைகளையும் ஆற்றலையும் இன்னும் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை.

பல அறிஞர்கள் இது பற்றியான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வெவ்வேறு வகையான அறிக்கைகளை வெளியிட்டு நிறுவ முயன்றும் இதுவரை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளும் முறையில் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. அதேபோல எந்தவொரு ஆதாரமும் ஐந்தாவது விசை இருப்பதை நிரூப்பிக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் Dark Photons எனப்படும் புதியவகை போஸ்டன் துகளை கண்டறிந்தனர். இது இயற்கையின் ஐந்தாவது விசையை விளக்கும் என அவர்கள் அறிவித்த போதும் இதுவெறும் x வகையான ஒரு அறியப்படாத எலக்ட்ரானை சார்ந்த துகள் தான் என அறிஞர்கள் மறுத்துவிட்டனர்.

PADME.jpg

PADME என்னும் சிறப்பு வகையான ஆராய்ச்சி ஒன்றும் 2018 ஆம் ஆண்டு டார்க் போட்டான் சை மையபடுத்தி நிகழ விருக்கிறது.ஆனால் இதன் முடிவுகள் வரவே 2021 ஆகிவிடும். கரும்விசை க்கான தேடுதல் வேட்டை இதுபோல பல இடங்களில் சூடு பிடித்துள்ளது.

இவ்வகையான அறிவியல் கோட்பாடுகள் ஆரம்பத்தில் குழப்பத்தை தந்தாலும் எதிர்காலத்தில் மனிதன் அதில் கைதேர்ந்த நிபுணன் ஆகிவிட்டது தான் வரலாறு. வானியலும் அணுவியலும் ஒரு காலத்தில் என்னவென்று புரிந்து கொள்ள இயலாத நிலையில் தான் இருந்தது. ஆனால் இன்று இந்த பூமியை சிதைக்கும் அளவிலான அணுபிளப்பை உண்டாக்கி பிரளயத்தை உண்டாக மனிதால் முடியும்.

அதே போல ஐந்தாவது விசையும் முற்றிலும் விளக்கப்பட்டு பிரபஞ்சத்தின் எல்லையை மனிதன் தொடும் காலம் தூரமில்லை. அப்போது எண்ணற்ற ஹாலிவுட் படங்கள் எடுக்கப்படும். அதற்கெல்லாம் அடித்தளமாக இந்த எந்திரன் என்றுமே நிலைத்து நிற்கும்.

Related posts

மனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்?

Seyon

சூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை

Seyon

நிலவில் குடியேற வேண்டிய நேரம் இது

Seyon

Leave a Comment