மீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்

கடல் மீனவர்கள் பயணிக்கும் போது பல விந்தையான ஆழ்கடல் அதிசயங்களை காண நேரிடுவதுண்டு.

மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு மீனவர்கள் பசுபிக் கடலில் பயணம் செய்யும் வேளையில் சற்று மர்மமான ஒரு மிதக்கும் உருண்டையை கண்டனர், அது பார்ப்பதற்கு மிகப்பெரிய பலூன் அல்லது வேற்றுகிரக பொருள் போல காட்ச்சியளித்துள்ளது.

நடுகடலில்-மீனவர்களை-அதிர்ச்சியில்-உறையவைத்த

மார்க் வாட்கின்ஸ் அவருடைய தந்தையுடன் கடலுள் உலவும் வேளையில் எடுத்த தற்போது வைரலாக பரவிக் கொண்டிடுக்கும் இந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

ஒருவேளை ஏதேனும் வித்தியாசமான கப்பலாக இருக்கும் என்று எண்ணி அருகில் சென்றவர்கள் ஆச்சயர்யத்தில் அது பொருள் அல்ல ஒரு இறந்த போன திமிங்கலத்தின் உடல் என்பதை கண்டறிந்தனர்.

இறந்த திமிங்கிலம்.jpg

அருகே சென்றதும்தான் அதன் துர்நாற்றத்தை உணர் ஆரம்பித்திருக்கிறார்கள். விலங்குகளில் உடலில் வெளியேறும் வாயுக்களால் அந்த இறந்த திமிங்கல உடல் உப்பி வெளிறி காணப்பட்டது.

அதிர்ந்து போனவர்கள்
தங்களை சுற்றி சுறாக்கள் வட்டமிட துவங்குவதை கவனித்தனர். சுறாக்கள் கவனம் கப்பலின் மீது முழுதாக திரும்பும் முன் அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் செல்ல துவங்கிய சில நிமிடங்களிலேயே சுறாக்கள் திமிங்கலத்தின் உடலை கிழிக்க துவங்கின, மேலும் வாயுக்கள் அனைத்தும் வெளியேற துவங்கிவிட்டன.

மிதந்த திமிங்கிலம்.jpg

நடுக்கடலை விட்டு தந்தை மகன் கரையை அடைந்திருக்கும் நேரத்தில் இறந்த உடல் துண்டு துண்டுகளாக சிதைந்திருக்கும்.

இதைப்பற்றி ஆய்வாளர்கள் தெரிவிக்கையில் இறந்த திமிங்கல உடலின் வாசம் மோசமான துர்நாற்றங்களில் ஒன்று. பந்து போன்ற அவ்வுடல் ஏதேனும் ஒரு வேட்டையாடும் மீனினம் தாக்கும் வரை பல காலங்கள் மிதந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது என்றனர்.

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.