கடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.

ஐந்து விசையாழிகள்(Turbines) மூலம் 30 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறனுள்ள மிதக்கும் காற்றாலை நிலையத்தை 2017 ல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறது ஸ்காட்லாண்டை சேர்ந்த Norwegian gas நிறுவனம். அதற்கான ஒப்புதலை ஸ்காட்லாண்ட் அரசு சமீபத்தில் வெளியிட்டது.

   இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் கடற்கரை காற்றாலை நிலையமாக இது உருவெடுக்கப்போகிறது. இந்த HYWIND முதன்மை மின்சாரத்தைக் கொண்டு 20,000 குடும்பங்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மேலும் வழக்கமான கடல் சார்ந்த உலைகளை விட இதற்கான புதுபிக்கத்தக்க ஆற்றல் உருவாக்கத்திற்கான செலவு குறைவு தான்.

“Floating wind represents a new, significant and increasingly competitive renewable energy source”
-Irene Rummelhoff

2009 ஆம் ஆண்டு முதலே கடற்கரைகளில் HYWIND திட்டப்படி காற்றலை மூலமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காற்றாலைகளை கடலின் நிறுவுவதன் மூலம் காட்சி மாசுவை நம்மால் கட்டுபடுத்த முடிகிறது, அதே வேளையில் கடல்காற்று பலம் பொருந்தியதாகவும் தடைகளற்றதுமாய் அமைகிறது.

தேவையான தந்திகம்பிகள்(Cables) மற்றும் நங்கூரங்கள் Turbine உடன் இணைக்கப்பட்டு கடல் ஆழத்தில் விடப்படும்.பெரிய குழாய் போன்ற கேபிள்கள் மூலம் மின்சாரம் அடிப்படை நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு பின் பயன்படுத்தப்படும்.

கடற்கரையில் 2016-ல் முதற்கட்ட பணிகள் தொடங்கயுள்ளன. எதிர்காலத்தில் நிலத்தோடு தொடர்பில்லாமல் முழுதும் ஆழ்கடலிலே உலைகளை உருவாக்க வாய்ப்புள்ளது என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அது தற்போதைய திட்டத்தை விட பல மடங்கு செலவு பிடிக்கும்.

windfloatfoundation2owec_foundationwturbine_beatriceoffshorewinddevelopment

Scotland பருவ நிலை காற்றாலை மூலம் 50 சதவீத மின்னாற்றலை உருவாக்க வாய்பளிக்கிறது.கடந்த 2014 ல், இந்த நாடு 11,740 கிகாகெட் ஆற்றலை காற்றின் மூலம் தயாரித்தது. London Array தான் தற்போது உலகின் மிகப்பெரிய கடற்கரை ஓர காற்றாலை நிலையமாகும்.கடற்கரையிலிருந்து 12 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.