நண்பன் ஒருவன் யூடியூப் சேனல் துவங்க இருப்பதாகவும் தான் அதற்கு உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டான். வேடிக்கையாக இருந்தாலும், எந்த விதமான பதிவுகளை போட போகிறாய் என்றேன். உணவை தேடி அறிமுகபடுத்துவது, கிராம சமையல் என அவன் சொன்ன பட்டியல் ருசிகரமாக தான் இருந்தது. சரி சேனலுக்கு பெயர் என்ன? உண்டக்கட்டி என சொன்னான்.🙄

அவனை ஏளனம் செய்வது போல ஒரு பார்வை பார்த்தேன். உடனே சற்று கோபித்துக் கொண்டு இது ஒன்றும் சாதாரண பெயரில்லை, இதற்கு பின்னர் ஒரு வரலாறு இருக்கிறது என முறைத்தான். அது என்ன என ஆர்வத்துடம் கேட்டபோது, தான் படித்ததாக மன்னர் கால வரைமுறை ஒன்றை தகவலாக சொன்னான்.📖

மன்னரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர் உணவில் விஷம் கலந்திருக்கிறதா என்பதை சோதிப்பதற்காக சில பணியாட்கள் அரண்மையில் இருப்பார்களாம். அரசனுக்கு அறுசுவை படைக்கும் முன்னர் இவர்கள் அதனை உண்பார்கள். குறிப்பிட்ட காலம் வரை எந்த நச்சுத்தன்மையும் இல்லை என உறுதியான பிறகே மன்னருக்கு அது பரிமாறப்படும். இவர்களுக்கு உண்டு காட்டிகள் என்று பெயர்.😮

காலப்போக்கில் உண்டு காட்டி உண்டக்கட்டி ஆனது. அதிலிருந்து தான் வேலை இல்லாமல் வெட்டியாக இருப்பவர்கள், சும்மா உக்கார்ந்து சாப்பிடுபவர்களை தண்டசோறு, உண்டக்கட்டி என அடைமொழி குறிப்பிட்டு சொல்லும் பழக்கமும் தொடர்கிறது. கோவில் பிரசாதமும் இதனுள் அடங்கும். சொல்லுக்குள் கதையா என ஆச்சர்யத்துடன் அவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அந்த வார்த்தையை பற்றி மேலும் ஆராய முற்பட்டேன்.👨🏿‍🔬

உண்டக்கட்டிகளை ஆங்கிலத்தில் Food Taster என அழைக்கிறார்கள். வரலாறு முழுக்க இவர்களை பற்றிய கதைகள் இருந்த வண்ணம் உள்ளன. தற்போதும் கூட அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபர் மற்றும் மேலும் சில நாட்டு முக்கிய பிரதிநிதிகள் தனக்காக பிரத்யேக உண்டு காட்டிகளை பணிக்கு வைத்துள்ளனர்.🥗

உயிரை பணயம் வைத்து பலரும் இதனை தொடர்ந்து செய்து வருவது வியப்பளிக்கிறது. ஆனால் சூழல் எப்போதும் அவ்வாறு இல்லை. மிகப்பெரும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பண்டங்களை சுவைப்பதற்காக சிறப்பு பணியாளர்களை வைத்துள்ளனர். மனிதருக்கும் மட்டுமல்ல நாய்களுக்கு தயாரிக்கப்படும் உணவை பரிசொதிப்பவர்க்கு பெரிய வரவேற்பு உள்ளது.🐶

food-taster.jpg

இவர்களின் வேலையை உண்வை ருசிபார்த்து அதன் தரத்தை சமர்பிப்பதே. சிலருக்கு ஒரே நாளில் 100 வகையான ஐஸ்கிரீம்களை ருசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்போதெல்லாம் இதற்கென பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. நல்லா சாப்பிடுவதற்கு சம்பளம் பெரும் அதிர்ஷ்டசாலிகள்.🍨

இவ்வளவு ஏன் கடந்த 2008 ஆம் நடந்தேறிய சீனா ஒலிம்பிக் போட்டிகளின் போது நச்சு தாக்குதலுக்கு அஞ்சி விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்டும் உணவானது முதலில் எலிகளுக்கு அளிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. சாப்பிட்ட எலி 17 மணி நேரத்திற்கு பின்னும் உயிருடன் இருந்தாலே அந்த உணவு வீரர்களுக்கு பரிமாறப்பட்டது.🐁

எகிப்திய மன்னர் கிளாடியஸ்(கிமு 54) தனக்கு உணவு பரிசோதகராக ஹாலோடோஸ் என்பவரை நியமித்தார். அதனையும் மீறியும் அவர்கள் உணவில் விஷம் சேர்க்கப்பட்டு கொல்லப்பட்டார். எகிப்திய வரலாற்றில் கறைபடிந்த பக்கமாக இருக்கும் இந்த சம்பவத்தில் உண்டு காட்டி கொல்லப்படவில்லை. ஆனால் எல்லோருக்கும் அதிர்ஷ்டம் அப்படியில்லை.💀

Cleopatra-Testing-Poisons_1

புகழ்பெற்ற காதல் காவிய நாயகர்களான ஆண்டனி கிளியோபட்ரா கதையில் கூட ஒரு உணவு பரிசோதகர் இருந்தார். கிளியோபாட்ரா தனக்கு விஷம் வைக்கலாம் என்றெண்ணிய ஆண்டனி தனக்கென ஒரு பரிசோதகரை வைத்துக் கொண்டார். இதை எப்படியோ அறிந்து கொண்ட அரசி ஒருநாள் வேண்டுமென நச்சு வாய்ந்த பண்டத்தை ஆண்டனிக்கு ஊட்ட துணிந்தாள்.👸🏾

ஆண்டனியும் காதலில் சாப்பிட முனைய, உடனே அவரது உணவு காட்டியை அழைத்து அதை சாப்பிட வைத்தார் கிளியோபாட்ரா. என்ன நடக்கும், சில மணித்துளிகளில் அவர் இறந்து போனார். இனிமேல் இவன் தேவையில்லை என ஆண்டனியிடம் சொல்லிவிட்டு அரியணையில் அமர்ந்துக் கொண்டாராம் கிளியோபாட்ரா.💃🏾(கிராதகி)

ஆனால் இங்கிலாந்து ராணி வேறு ரகம். தனது பணியாளர்களுக்கு அளிக்கப்படும் உணவை அவ்வப்போது வாங்கி உணவு சோதனை செய்வாராம். விஷமிருக்கிறதா என பார்க்க இல்ல, சாப்பிட முடியுமா என சோதிக்க. அதுவே ராணிக்கு கொண்டு செல்லும் உணவு 25 நபர்களால் ருசி பரிசோதனை செய்யப்படும் எனவும் சொல்வதுண்டு.💂‍♀️

p07jyzbs.jpg

இவ்வாறே பல கதைகள் இருப்பினும் உணவு ருசிபார்ப்பவர்கள் என்ற சொற்றொடர் பிரபலமானது அடால்ப் ஹிட்லரால்(Adolf hitler) தான். உலகில் அதிகம் பேர் கொல்ல நினைத்தது இவராக்கத்தான் இருக்கும். இதனாலே அவர் தனக்காக 15 பணிப்பெண்களை தனது உண்டு காட்டியாக வைத்திருந்தார். இவர்கள் ஒவ்வொருவரும் கடத்தபட்டோ கட்டாய வற்புறுத்தலின் காரணத்தாலோ வேலைக்கு வைக்கப்பட்டவர்கள்.💯

தங்களது ஒவ்வொரு வேலை உண்வையும் இதுதான் தங்கள் கடைசி உணவு என்ற எண்ணத்துடனே அவர்கள் சாப்பிட்டார்கள். இத்தனைக்கும் தான் யாருக்கா சாக துணிந்து சப்பிடுகிறோமோ அவர் முகத்தை கூட நாசி காவலாளிகளை மீறி இவர்கள் பார்க்க அனுமதியில்லை. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ரஷ்ய படைகளால் இவர்கள் அனைவரும் பரிதாமாக கொல்லப்பட்டார்கள், ஒருவரை தவிர.🙇🏽‍♀️

மார்கட் வொலக்(Margot Wölk), தனது 95 வது வயதில் எப்படி நாசி படையால் கடத்தப்பட்டேன் என்பதையும் இப்படி ஒரு மோசமான வரலாறு மறைந்து போனதையும் உலக்குக்கு சொன்னார். 1942 ல் போலந்து நாட்டில் ஹிட்லர் மறைந்து வாழ்ந்தார். 2 1/2 வருட போர்க்காலத்திற்கு பிறகு 1944 – ஒரு வெடிகுண்டு தாக்குதலில் ஹிட்லர் சில காயங்களோடு தப்பித்தார்.💣

Margot Wölk.jpg

இந்த சம்பவத்தின் போது உணவு சோதகிகள் வேறு இடம் மாற்றப்பட்டனர். பலரும் நாசி படையால் அவ்வப்போது அத்துமீறி கற்பழிக்கப்பட்டனர். அதில் ஒரு காவலாளி மட்டும் தக்க சமயத்தில் மார்கட் டை பெர்லின் செல்லும் ரயில் ஒன்றில் ஏற்றி விட்டு அவர் உயிர் பிழைக்க காரணமாக அமைந்தார். அவர் மூலமே மற்ற பெண்கள் சோவியத் படையால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் இவர் அறிந்து கொண்டார்.🏃‍♀️

அதோடு சோகம் தீரவில்லை. பின்னாளில் ரஷ்ய படை இவரை கண்டுபிடித்து பல நாட்கள் கற்பழிப்பு, சித்திரவதை என அவரால் கருத்தரிக்க நிலைக்குத் தள்ளி தண்டனை கொடுத்தது. அப்போதே போரில் இறந்தாக கருதிய தன் கணவனை மீண்டும் சந்தித்துள்ளார். இருவரும் சேர்ந்து காயங்களை மறந்தும் கண்ணீரை துடைத்தும் புன்னகையை பகிர்ந்தும் 34 வருடங்கள் வாழ்ந்தனர். ❣️

ஹிட்லர் சைவ உணவை பின்பற்றியதால் பல காலம் உணவை ருசிக்கவே கடினப்பட்டிருக்கிறார்.

இந்த கோர கதை பொது ஊடகத்திற்கு வரவே இரு தலைமுறைகள் கடந்து விட்டது. தான் சாகப்போகும் ஒரு வருடத்திற்கு முன்பு தன் வாழ்வின் இரகசியத்தை உலகுக்கு வெளிபடுத்தினார் அந்த பெண்மணி. 2013 ஆம் ஆண்டு உலக ஊடகங்களில் இது தான் வைரல் செய்தியாக இருந்தது. அவர் கதை At the Wolf’s Table என்ற பெயரில் நாவலாகவும் வெளிவந்து புகழ்பெற்றது.😌

நாம் வெகு சாதராணமாக பேசி விட்டும் செல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னும் எத்தனை கதைகள் புதைந்திருக்கும் சிந்தித்தவாறு சாப்பிட புறப்படுகிறேன்.🚶🏾‍♂️

Leave a Comment