இந்தியாவில் மட்டுமே உள்ள கங்கை டால்பின்களுக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஓடும் ஹூக்ளி நதியின் இந்த அரிய வகை டால்பின்களை பாதுகாப்பதற்காக, நீர் சரணாலயம் அமைக்க மேற்கு வங்க வனவுயிர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இன்னும் ஓராண்டுக்குள் சுந்தர்பன் அல்லது மால்டா பகுதியில் சரணாலயம் அமைக்கப்படும். ‘சூசூ'(Souns or Susu) என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின்கள், இந்தியாவின் தேசிய நீர் விலங்கினமாக, 2010ல் அங்கீகரிக்கப்பட்டது.
சமிபத்திய கணக்கெடுப்பின் படி 2,500 முதல் 3000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ள இந்த டால்பின் இனம் அழியும் ஆபத்தில் இருக்கிறது.
கங்கை நதி டால்பின்கள், இந்தியாவின் தேசிய நீர் விலங்கினமாக, 2010ல் அங்கீகரிக்கப் பட்டது.
கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா, கர்ணபுலி மற்றும் சங்கு ஆகிய நதிகள் ஓடும் இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேச பகுதிகளில் மட்டுமே கங்கை நதி டால்பின்கள் வாழ்கின்றன(80% இந்தியாவில் உள்ளன).
பாலூட்டி வகையைச் சேர்ந்த இவை,‘கங்கை நீர்ப் புலி’ என்று செல்லமாக அழைக்கப் படுகின்றன.நதி நீர் டால்பின்கள், கடல் டால்பின்களை விட சுலபமாக வேட்டையாடி விடப்பட கூடியவை.கங்கையின் சுற்றுச்சூழல் இவற்றின் வாழ்வியலை வெகுவாக பாதிக்கிறது.
மிகப்பெரும் அச்சுறுத்தலான நீர் மாசுபாடு, மின்சார உற்பத்தி, எண்ணெய் கலப்பு, நீருக்கடியில் ஏற்படும் இரைச்சல் முக்கியமாக மக்கள்தொகை அதிகரிப்பு போன்ற காரணத்தால் டால்பின்களின் இனச்சேர்க்கை தடைப்படுகிறது.
மேலும் வேதிப்பொருள்களின் கலப்பு, கப்பல்களின் நெரிசல், மிதமிஞ்சிய மீன் பிடித்தலால் அந்த இனம் விரைவில் அழிவை நோக்கிப் போய்விட்டதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.