ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது

ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியர்வகள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்தவாறே உள்ளனர். அவ்வாறு சர்ச்சையான கருத்துக்களோடு இருபது ஆண்டுகளாக மக்களை குழப்பத்தில் வைத்துள்ள ஒருவரைபற்றியே இந்த கட்டுரை.

1996 ஆம் ஆண்டு ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி மொத்த செய்தி ஊடகத்தையும் ஆச்சர்யப்படுத்தினார். அவரது அறிவிப்பு தமிழகம் மட்டுமல்லாது உலக நாடுகளையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.அன்றைக்கு பெட்ரோல் விலை 35 ரூ (உங்களில் யாரேனும் அறிந்திருக்க வில்லையெனில் இன்று ரூ.73.33). ஆனால் மூலிகை பொருள்கள் மற்றும் ராசாயன பொருள்களை சேர்த்து தயாரிப்பதால் அவர் தயாரித்த திரவத்தை லிட்டர் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்றார்.

தனது இரகசிய மூலிகைகள், குறிப்பாக உப்பு மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற சில பொதுவான பொருட்களுடன் சுமார் 30 நிமிடங்கள் வெப்பப்படுத்தும்போது , ஒரு எரிபொருள் போன்ற பொருள் உற்பத்தி செய்யப்பட்டது என்று கூறியிருந்தார். அதிதீவிரமான ஒரு சர்வதேச பிரச்சனையை தீர்த்துவிட்டதாக ஒரே இரவில் பிரபலமானார் ராமர்.

ramar pilai.jpg

ராமரின் தமிழ் தேவி மூலிகை எரிபொருள் என இன்று அழைக்கப்படும் நிறுவனத்தை ராமர் பயோஃப்யூல் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சென்னையில் விற்பனையை தொடங்கினார்.

நான்கு மாநில முதல்வர்கள் முன்னிலையில் எரிபொருள் சோதனையைச் செய்து காட்டினார். அவரது முயற்சியைப் பாராட்டி, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தங்கப் பேனாவும் நிலமும் கொடுத்தார். இருப்பினும் இவர் மீதான சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு குறையவில்லை.

இதனிடையே மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் பெட்ரோலியப் பொருட்களான டொலுவின், நாப்தா போன்றவற்றை கலப்படம் செய்து விற்றதாக புகார் எழுந்தது. சென்னை ஐ.ஐ.டி ஆய்வாளர்கள் ‘இது பெட்ரோலே அல்ல, இது ஒரு கலப்படம்’ என்றனர். டேராடூன் இந்திய பெட்ரோலிய ஆய்வு மையமும் அதையே சொன்னது.

இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகள் கைக்கு சென்றது, 2.27 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக ராமர்பிள்ளையை 2000 தில் கைது செய்தனர். தனது இரகசிய மூலிகைகள், குறிப்பாக உப்பு மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற சில பொதுவான பொருட்களுடன் சுமார் 30 நிமிடங்கள் வெப்பப்படுத்தும்போது , ஒரு எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.

ramar arrest.jpg

அவர் கூறியது நாட்டில் உள்ள உயர் விஞ்ஞான ஆய்வுக்கூடங்களில் செயல்முறை நிரூபிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். டெர்பின் என்ற எக்ஸ்ட்ராக்டை எடுத்து அதில் சில கலவைகளைச் சேர்த்து மூலிகைப் பெட்ரோலைத் தயாரிக்கிறோம் எனவும் கூறியிருந்தார்.

அவரை கட்டுபடுத்தி விட்டனர் என்ற தருணத்தில் 2010 ஆம் ஆண்டு மீண்டும் வேறொரு எரிபொருளை, இரகசிய மூலிகை கலவையுடன் நீரை கலந்து 78 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தும்போது அது முழுவதும் எரிகிறது என கண்டுபிடித்ததாக கூறி சென்னையில் பத்திரிக்கை செய்தியாளர்களை அழைத்தார்.

அவர் அதை வேலன் மூலிகை – ஹைட்ரோகார்பன் எரிபொருளாக குறிப்பிட்டார். இந்த எரிபொருளை பயன்படுத்துவது ஐ.சி.ஐ தரத்திற்கு பொருந்தது என்றும் ஐ.சி.ஐ தரத்திற்கு பொருந்தாத எரிபொருளை ஆட்டோமொபைல் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது குற்றம் என்றும் அரசு அறிவித்தது.

இது மோட்டார் ஸ்பிரிட் ஸ்பீட் டீசல் (வழங்கல் மற்றும் விநியோகம் மற்றும் துப்புரதிப்புகளை ஒழுங்குபடுத்துதல்) ஆணை, 1988 ஆம் ஆண்டின் 3 வது விதி (வி) தடை செய்யப்பட்டது எனவும் கூறி தடை செய்தது.

வழக்கு பல ஆண்டுகளாக நீண்டாலும் 2016 ஆம் ஆண்டு ராமர் உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதன் பின்னர் பல ஆண்டுகள் பிள்ளை காணாமல் போய் விட்டார்.

ramar-pillai

தற்போது இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் நொளம்பூரில் இயற்கை எரிபொருள் தயாரிப்பு ஆய்வுக்கூடத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாரபூர்வமாகத் திறந்தார். மேலும் மூலிகை எரிபொருளை விரைவில் விற்பனைக்கு கொண்டுவருவேன் என்றும் பரபரப்பைக் கிளப்பினார், ராமர்பிள்ளை.

2015 ஆம் ஆண்டு, தனது கண்டுபிடிப்பை பிரதமர் மோடி பார்வையிட்டதாகவும் அரசியல் தலையீடு காரணமாகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக, குற்றம்சாட்டுகின்றனர் என கூறுகிறார். 90 களின் இறுதியில் முறையான அனுமதியுடனே தன்னுடைய மூலிகை எரிபொருளை விற்பனை செய்ததாகக் கூறும் ராமர்பிள்ளை, அரசுக்கு வரி செலுத்தியதாகவும் குறிப்பிடுகிறார்.

இது பெட்ரோலே இல்லை என கூறுபவர்களுக்கு, “நான் கண்டுபிடித்தது பெட்ரோல் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், அதை ஊற்றினால் வாகனம் இயங்குகிறது. அதனால் இயந்திரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லையே. இதுவரை 13 லட்சம் லிட்டர் பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்திருக்கிறேன்” என நியாயம் சொல்கிறார்.

விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாய்க்கும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்வோம். அத்துடன் ஒரு மெகாவாட் மின்சாரம் 1,000 ரூபாய்க்குக் கிடைக்கும்” என்கிறார் ராமர் பிள்ளை.

2014-17 இடைப்பட்ட காலகட்டத்தில் ராணுவத்துடனான கூட்டமைப்பில் சில ஆய்வுகள் செய்து சான்றிதழை பெற்றிருக்கின்றோம். ராணுவத்திடமிருந்து தகவல் இடைவெளியால் இந்த மூலிகைப் பெட்ரோல் சந்தைப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.

pic

அதே சமயத்தில் ராமருக்கு தயாரிப்பு சமயத்தில் உதவி செய்வதாக அறியப்பட்ட தனியார் ஆய்வு நிலையங்களை பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவருக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என துண்டித்துள்ளனர்.

ஒருபக்கம் மூலிகை எரிபொருள் என்ற ஒற்றை வார்த்தையால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ராமர் பிள்ளை, மறுபக்கம் மோசடிப் பேர்வழி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். ஆனாலும், இவர் தயாரித்து பெட்ரோலா என்பதை விட ஏன் இவருக்கு எதிராக இத்தனை சக்திகள் என்பதே பெரிய மர்மத்தை உண்டாக்குகிறது.

நவம்பர் 20 என்ற இலக்கை மீண்டும் அறிவித்த ராமர் பிள்ளை அன்று தனது தயாரிப்பு ரகசியத்தை வீடியோவாக வெளியிடுவதாக சொன்னார். இருப்பினும் அதற்கும் குறிக்கீடு வந்துவிட்டது. இப்போது பல்வேறு இணைய பேட்டிகளில் இடம்பெற்று கொண்டிருக்கிறார். LMES வெளியிட்ட வீடியோ இவருக்கு பாதகமாக அமைந்தது.

எனவே தற்போது இறுதி கட்டமாக வருகிற டிசம்பர் 10 அன்று அவரது யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பரிசோதனை செய்து காட்டபோவதாக பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார். இதை தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டு என உயிரை பணயம் வைத்தாவது மக்களுக்கு மூலிகை பெட்ரோர்ல் பார்மூலாவை சமர்ப்பேன்.

அதனை சோதனைக்கு அனுப்பி வையுங்கள். 10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணோளி காட்சி ஒன்று வெளியாகும். என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ,மாணவிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி’’ என்று கூறியுள்ளார்.

Add comment