அறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை

இரத்தம் நம் உடல் செயலாக்கத்தின் ஆதாரம். உடலின் ஒவ்வொரு பாகத்தின் செயல்பாட்டிலும் இரத்தத்தின் பங்கு இன்றியமையாதது.எல்லோருக்கும் வாழ்வின் எதோவொரு சமயத்தில் இரத்தம் பெறவோ அல்லது தானம் வழங்கவோ நேரிடும்.

ஒவ்வொருவரும் தனது இரத்த வகையையும் தங்கள் உடன் சார்ந்தோரின் இரத்த வகையையும் அதன் தன்மையையும் அறிந்திருப்பது பல வகைகளில் நன்மையாக அமையும்.

Blood Groups :

இரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இதில் எந்தவொரு அணுக்களின் அளவு அதிகரித்தாலும் குறைப்பட்டாலும் அதற்கேற்ப உடலில் தாக்கம் உண்டாகும்.

இரத்த வெள்ளையணுக்கள்(White Blood Cells) நோய் எதிர்ப்பிலும், சிவப்பணுக்கள்(Red Blood Cells) உடலின் எல்லா பாகத்துக்கும் இரத்தத்தை சுழற்சி செய்யும் பணியிலும், தட்டணுக்கள்(platelets) இரத்த உறைதலிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

இரத்தம் தேவைப்படுவோரில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படுவதில்லை. உதாரணத்துக்கு, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்குச் சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும்.

Blood Bank

சிவப்பணுக்கள் ஃப்ளாஸ்மாவுடன்(Plasma) இணையும் விதத்தை பொறுத்தே இரத்த வகை நிர்மாணிக்கப்படுகிறது.பொதுவாக A, B, AB and O ஆகியவையே நாம் அறிந்தவை.இதிலும்கூட ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன.

ஆனால் பலரும் அறிந்திராத(அல்லது கவனம் பெறாத) அரிய இரத்த வகை ஒன்றுள்ளது. இதனை ஹெச்ஹெச்(hh)/ Oh/ பம்பாய் இரத்த வகை (Bombay Blood Group) என்றழைக்கின்றனர்.உலகில் 0.0004%( 40 லட்சத்தில் ஒருவர்) மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது.

Bombay Blood Group :

1952 ஆம் ஆண்டு மும்பையின் Seth Gordhandas Sunderdas மருத்துவக் கல்லூரியை சேர்ந்த Y.M.பாண்டே,தேஷ்பாண்டே மற்றும் G.M.ஃபாட்டியா ஆகிய மருத்துவர்கள் ஒரு அறிக்கையில் (The Lancet –pp. 903-4, May 3, 1952)  இரண்டு நோயாளிகளை பற்றி குறிப்பிட்டிருந்தனர்.

ஒருவர் ரயில்வே ஊழியர், மற்றொவர் கத்தி குத்தப்பட்டு இருந்தவர். அவர்களுக்கு அவசரமாக இரத்தம் செலுத்த வேண்டிருந்தது.அதுவரை அறிந்திருந்த எந்த இரத்த வகையும் அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை.

மற்ற இரத்த வகைகளை இவர்களின் இரத்ததோடு சேர்க்கையில் வெவ்வேறு வகையான வினைகள் நிகழ்ந்தன. பின்னர் 160 க்கும் மேற்பட்டவர்களின்(Donars) இரத்த வகைகளை பரிசோதித்த பிறகு இறுதியாக ஒரு மூன்றாம் நபரிடம் அதே இரத்த வகை கண்டறியப்பட்டது.

இந்த அரிய இரத்த வகைக்கு பாண்டே மற்றும் மற்ற மருத்துவர்களால் பம்பாய் இரத்த வகை (Bombay Blood Group) என பெயரிடப்பட்டது.

நெருங்கிய சொந்தம் அல்லது நெருக்கமான சமூக திருமணங்கள் போன்றவை இந்த இரத்த வகை அதிகரித்திருக்க காரணமாக இருந்திருக்கலாம்.இப்போது அவை அதிகளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.பல சிறிய சமூங்களின் அழிவிற்கு பின்னும் இந்த இரத்த வகை முன்னோரின் வழியாகவே தொடந்துள்ளது.

hh/Oh இரத்த வகையை கண்டறிவது மிகவும் இன்றியமையாத்து.ஏனெனில் பொதுவாக ABO இரத்த பரிசோதனை செய்யும் போது ‘ஒ’ வகை என்றே காண்பிக்கும், ஆனாலும் ‘ஒ’ வகையில் காணப்படும் H ஆன்டிஜன் இருக்காது. தடயங்களை வைத்து பரிசோதனையாளர் தாமாக பாம்பே இரத்த வகை பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.

தற்போது இந்தியாவில் 10000 ல் ஒருவருக்கு(0.01%) பம்பாய் இரத்தம் உள்ளது. இவர்கள் சக இரத்த வகை உள்ளவரிடமிருந்து மட்டுமே இரத்தம் பெறவோ கொடுக்கவோ இயலும்.இதுவே அதனை கொண்டிருப்பர்களை சிறப்பு மற்றும் அரிய வகையினராக்குகிறது.

கடந்த வருடம் டெல்லியில் ஒரு குழந்தைக்கும் இந்த வகை கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு தேவைப்பட்டதும், இணையம் மற்றும் The Think Foundation வழியாக மும்பையிலிருந்து மூன்று நபர்கள்(நாயகர்கள்) தங்கள் Oh இரத்தத்தை அனுப்பி வைத்தனர்.

இந்த சிறப்புத்தன்மை பல இந்திய திரைப்படங்களின் கூட பயன்படுத்தப் பட்டுள்ளது.

Okkadunadu என்ற தெலுங்கு படத்தில் வில்லனுக்கும் நாயகனுக்கும் பாம்பே இரத்த வகை இருக்கும்.

வித்யா பாலன் நடித்த Kaahani இந்தி படத்திலும் முக்கிய எதிராளியை இந்த இரத்த வகை கொண்டே கண்டுபிடிப்பார்கள்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா(2013) படத்தில் Oh இரத்த வகை முக்கிய பங்காற்றி விஜய் சேதிபதி மூலம் கர்ப்பிணி பெண்ணின் உயிரைக் காக்கும்.

Blood Donation : 

‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் ‘ஏ’ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெற வேண்டும்.இப்படி ஒவ்வொரு வகைக்கும், அந்தந்த வகை ரத்தத்தை மட்டுமே பதிலாகச் செலுத்த முடியும். தகுந்த இரத்த வகைக்கு பதிலாக மற்ற இரத்த வகைகளை உடலின் செலுத்தினால் அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால், மிக நெருக்கடியான சூழ்நிலைகளில் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ‘ஓ’ வகை ரத்தத்தை அவருக்குச் செலுத்தலாம். அதனால்தான் இவர்களை ‘யுனிவர்சல் டோனர்’ என்றழைக்கிறார்கள். அதேபோன்று ‘ஏபி’ ரத்த வகையைப் பெற்றவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் செலுத்தலாம்.

மற்ற தானங்களை போலலாது இரத்த தானம் மூலம் பிறர் உயிரையே நாம் காப்பாற்ற முடியும்.ஆனால் உலகில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் ரத்தம் தேவைப்படுபவர்கள் உறவினர்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

ரத்தம் கொடுப்பதால் தங்களுக்குப் பாதிப்பு உண்டாகுமோ என பலரும் தவறாக நினைக்கிறார்கள். அதனாலே இரத்தம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக உள்ளது.ஆனால் இது தவறான எண்ணம்.

நீங்கள் தானமளிக்கும் இரத்தம் முழுமையாக பரிசோதிக்கப் பட்டு பின்னர் ரத்த வங்கியின் பாதுகாப்பு அறையில் 2 – 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் வைக்கப்படும். குறிப்பிட்ட மாத இடவெளியில் இரத்தம் அளிப்பது பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது.

இரத்தம் கொடுப்போம் – உயிர் காப்போம்.

Refrences :

Bombaybloodgroup   Thinkfoundation
wiki-Hh_blood_groupஉயிர்-கொடுக்கும்-தோழன்bombay-blood-how-the-rare-blood-type-was-discovered

1 comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.