Image default
Mystery People

கடலுக்குள் மூழ்கியவர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்

அனைவருக்கும் படகில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. கடலுக்குள் செல்வதும் இயற்கையை ரசிப்பதும் நம்மை புத்துணர்ச்சி பெற வைக்கும் விஷயங்கள். சற்று சிந்தித்து பாருங்கள் நீங்கள் பயணம் செய்த படகு நடு கடலில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானால் எப்படி இருக்கும் என்று.

அந்த கனம் உடல் மன எல்லாம் செயலிழந்து உயிர் பிழைப்பதே கடின செயலாகிவிடும். இது போல உண்மையான ஒரு விபத்தில் மூன்று நாட்கள் ஒருவர் கடலுக்கு அடியில் தலைகீழாக நீரில் மூழ்கிய படகில் உயிரோடு இருந்துள்ளார் என்றால் ஆச்சரியமாக உள்ளதா?

அப்படியான உண்மை சம்பவம் ஒன்றை பற்றித்தான் இந்த பதிவு. Harrison Okene என்ற நபர்தான் அவர். 2013 மே மாதம் 26 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வு உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் ஒரு கடற்கரையில் இருந்த கப்பலுக்கு எண்ணெய் ஏற்றுவதற்காக நான்கு படகுகள் சென்று கொண்டு இருந்தது.harisson_okene_rescue_mission

நான்கில் ஒரு படகில் Harrison Okene என்பவர் சமையல்காரராக பணியில் இருந்துள்ளார். பொதுவாகவே Pirates of the Caribbean படத்தில் வருவது போல கடல் கொள்ளையர்கள் அதிகம் உலாவும் பகுதி அது என்பதால் அங்கு ஒரு சட்டம் உள்ளது.

இரவில் உறங்கும் முன் படகின் கதவுகளை மூடிவிட்டுதான் படுக்க செல்ல வேண்டும். இதற்காக அனைவருக்குமான அறைகள் தனிதனியாக உண்டு.

அன்று இரவும் மற்றவர்களை போல Harrison okene என்பவரும் உறங்க செல்கிறார். விடியல் காலை நான்கு மணிக்கு விழிப்பு வரவே சிறுநீர் கழிக்க படகின் கழிவறைக்கு இவர் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கடலில் எழுந்த அலைகள் படகை உலுக்குகின்றது.

அதி வேகமாக எழுந்த பெரிய அலையில் படகு தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிட்டத்தட்ட 15 நபர்கள் பயணித்தனர். அனைவரும் உறங்கியதால் சுதாரித்துக் கொள்ளும் முன்னரே நீரில் மூழ்க ஆரம்பித்து விட்டனர்.

படகின் கதவுகளை வெளிப்புறமாக நீர் அழுத்துவதனால் கதவை திறக்க முடியாமல் போனது. மற்றவர்கள் படுத்து இருந்த அறை சிறிது சிறிதாக மூழ்க ஆரம்பித்து விட்டது. யாராலும் உயிர் பிழைத்து தப்பிக்க முடியவில்லை, Harrison okene என்ற ஒரு நபரை தவிர. இவரது நண்பர்கள் அனைவரும் இறந்து விட இவருக்கும் என்ன செய்வது என்றே தெரியாமல் கழிவறையின் வெளியே இருந்த அறையில் சிக்கி கொள்கிறார்.

கடல் நீர் சிறிது சிறிதாக உள்ளே வந்து இவரது கழுத்து பகுதி வரை நிரம்பி அதோடு நின்றுவிடுகிறது. படகு கடலுக்கு அடியில் தரை தட்டியதை உணர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். நண்பர்கள் ஒருவர் அடுத்து ஒருவராக இறந்து மிதக்கின்றனர்.

கடலுக்கு மேல் இருந்த கப்பலில் இருந்து மூழ்கிய படகில் யாரும் உயிர்பிழைத்தனரா என்று அறிய கடலுக்குள் குதித்து ஆழ்கடல் வரை வந்து படகின் மீது தட்டுகின்றனர். வெளியில் இருந்து படகை தட்டும் சத்தம் கேட்டதும் காப்பாற்ற வந்துள்ளார்கள் என்பதை அறிந்து இவரும் உள்ளிருந்து தட்டுகிறார்.

துரதிர்ஷ்டமாக இவர் தட்டியது அவர்களுக்கு கேட்கவில்லை. அனைவரும் இறந்துவிட்டனர் என நினைத்து அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர். ஒரு சில மணி நேரங்களில் குளிர் நடுக்கம் ஆரம்பிக்கிறது. வெறும் அரைக்கால் சட்டையுடன் நீரில் உடல் நனைய சுவாசிக்க இருந்த பகுதியில் சுவாசம் பெற்று நேரம் செல்கிறது.

Harrison-Okene-wife-Tamil

மரணம் நெருங்கியதை உணர்ந்த Harrison எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். ஏதாவது வழி உள்ளதா என்பதை நீரில் மூழ்கி சென்று பார்க்கிறார். முழுவதும் இருட்டால் ஒன்றும் தெரியாமல் போகிறது.சுவாசிக்கும் நேரம் அதிகம் ஆக ஆக கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகம் செல்கிறது.

இவருக்கு சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது. இவர் நன்கு பழகிய படகு என்பதால் இவருக்கு எப்படி எங்கே செல்ல வேண்டும் என்பதும் தெரியும். ஆனாலும் படகு தலைகீழாக உள்ளதால் ஒரு குழப்பம். மீண்டும் முயற்சி செய்து தடவி தடவி இன்ஜின் அறைக்கு வந்துவிடுகிறார்.

இவரது நல்ல நேரம் அங்கும் சிறிய அளவில் காற்று இருந்துள்ளது.அந்த அறையில் நான்கு அடி உயரத்துக்கு வெற்றிடம் உள்ளது என்பதை உணர்ந்து அங்கு மிதந்த பொருட்களை சேர்த்து அதன் மீது ஏறிகொள்கிறார். பாதி உடல் நீரிலும் மீதி உடல் பொருட்கள் மீதும் உள்ளவாறு படுத்து கொள்கிறார். நீண்ட நேரமாக ஈரத்தால் குளிர் வாட்டிய நிலையில் இது அவருக்கு சற்று ஓய்வாக அமைந்தது.

Harrison-Okene-Tamil

இரண்டு நாட்கள் கழிந்தன. ஒரு மயான அமைதியில் மீன்கள் அவரது நண்பர்களை கடித்து உண்ணும் சத்தம் மட்டுமே அவரது காதில் கேட்டது.

இதே நேரத்தில் இவர் மற்றும் இவருடன் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக நிர்வாகம் அறிவிக்கிறது. புதிதாக திருமணமான ஒரு தம்பதிக்கு ஏற்பட்ட கொடுமையாக அங்கு உள்ளவர்கள் மிகவும் வருத்தம் கொள்கின்றனர்.

நைஜீரிய மக்கள் இந்திய மக்களை போன்றே அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஆதலால் இறந்த உடலை திரும்ப கொடுங்கள். இறுதி அடக்கம் முறையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்திடம் மக்கள் முன் வைக்கின்றனர். கோரிக்கையை ஏற்ற நிர்வாகம் உடலை மீட்க மீண்டும் கடலுக்குள் செல்கிறது.

என்னை எப்படியாவது காப்பாற்றி விடு கடவுளே. நான் மீண்டும் நீருக்குள் வர மாட்டேன் என்ற வேண்டுதலை மட்டும் கடவுளிடம் கேட்டுகொண்டு இருக்கிறார் harrison. இந்த முறை நீருக்குள் வந்து பிணங்களை வெளியே தள்ளும் ஆட்களை இவர் உணர்கிறார்.

மீண்டும் இவர் படகை தட்டுகிறார் இந்த முறையும் இவர் எழுப்பிய ஒலி யாருக்கும் கேட்கவில்லை. நீருக்கு அடியில் ஒலியை உணர்வது கடினம். ஓளியை அடித்து பிணங்களை தேடும் நபர்கள் இவரை தாண்டி செல்வதை இவர் கவனிக்கிறார். எவ்வளவு கூப்பிட்டும் அவர்களுக்கு கேட்கவே இல்லை.

இந்த முறையும் இவர்களை விட்டால் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்து இறந்தாலும் போராடி பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் நீரில் செல்கிறார். நீரில் தோள் அழுக ஆரம்பித்துவிட்டது. நீந்தவே முடியாது என்ற நிலையில் தனது உடலில் இருந்த சக்தியை பயன்படுத்தி வெளியே சென்று கையை நீட்டுகிறார்.

இறந்த பிணத்தின் கைதான் போல என்று நினைத்தவர்கள் கையை பிடித்து இழுக்கின்றனர். கை இவர்களை திரும்ப பிடித்த உடன் பிணங்களை எடுக்க வந்தவர்கள் அலறிவிட்டனர். இதை படம் பிடித்த நபர் அவர் உயிரோடு உள்ளார் என்ற கூறி பிடித்து கொள்கிறார். இவருக்கு ஆக்சிஜன் கொடுத்து மேலே அழைத்து செல்கின்றனர். 10 பிணங்கள் கைப்பற்றினர்.

Harrison-Okene-Tamil 3

Harrison okene இறந்துவிட்டதாக நினைத்த அனைவருக்கும் ஆச்சரியம் சந்தோஷம். மே 26 ஞாயிறு அன்று விடியற்காலை 4.30 மணிக்கு மூழ்கிய படகில் இருந்து மேலே வந்த அவர் ‘ஓ சாயங்காலம் ஆகிவிட்டதா’ என கூறியுள்ளார். இதற்கு அனைவரும் நீ மூன்று நாட்கள் நீரில் இருந்துள்ளாய் என கூறியுள்ளனர்.

நேரத்தையும் காலத்தையும் கணக்கிடாமல் பிழைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் போராடிய Harrison Okene ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். அதன் பின் அவர் கடலுக்கே செல்வதில்லை. அவர் சமையல் தொழிலை தொடர்கிறார் ஆனால் கரையிலிருந்து மட்டுமே.

வாழ்க்கையில் அனைவருக்கும் கஷ்டம் வரும் போகும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வை சிறப்பாக வாழ முயற்சி செய்து நம் கையில் தான் இருக்கிறது.

Related posts

தயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி

Seyon

சர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு

Seyon

குரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்

Seyon

Leave a Comment